Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 1, 2009

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..!

நம் பாரத தேசம் பல நூற்றாண்டுகளாக செழிப்பான ஒரு நாடு. இங்கே விளையும் வாசனை பொருட்களுக்காகவும், ஆபரணங்களுக்காகவும் பல நாட்டினர் படையெடுத்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டை அடிமையாக்கும் மனோபாவத்தில் படைஎடுத்தல் என்பதை தாண்டி ஒரு நாட்டின் வளத்திற்காக படை எடுப்பது என்பது முன்காலத்தில் இந்தியாவில் மட்டுமே புதிய விஷயமாக இருந்தது. தற்காலத்தில் எண்ணெய் கிணறு என்னும் வளத்திற்காக சில நாடுகளை அடிமைப்படுத்த வல்லரசு நாடுகள் விரும்புகிறதே அது போல பாரதம் பிறருக்கு ஒரு வளமான பூமியாக தெரிந்தது.

தட்பவெப்பம், பயிர்வகைகள், கலாச்சாரம், மெய்ஞான அறிவு மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்கள் பாரதம் முன்னிலையில் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கமுடியாது. உலக படத்தில் பூமத்திய ரேகை சார்ந்து அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் கலாச்சரத்தில் பிற பகுதிகளை காட்டிலும் முன்னேறி இருந்தது. உலகவரைபடத்தில் இடமிருந்து வலமாக எடுத்துக்கொண்டால் மெக்சிக்கோ, எகிப்து, அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை கலாச்சார முன்னேற்றம் கொண்ட பிரதேசமாக இருந்தது.

கலாச்சார முன்னேற்றம் என்றவுடன் நவநாகரீக உடை அணிதலையோ , சமைக்கபட்ட பல்வகை உணவுகள் உண்பதையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. மெய்யறிவுடன் தங்கள் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தன்மையும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவு என்பதையே கலாச்சார முன்னேற்றம் என்கிறேன். வேளாண்மை மூலம் தானிய உற்பத்தி, உலோக பயன்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தான் கலாச்சாரத்தின் உண்மையான குறியீடுகள்.

பூமத்திய ரேகை சார்ந்த நிலப்பரப்புகளில் கலாச்சார முன்னேற்றம் இருந்தாலும் அதில் மிக முன்னேறிய கலாச்சாரம் என்பது பாரதத்தில் மட்டுமே இருந்தது. வேளாண்மையில் புதிய நுட்பங்களை கண்டறிந்து பல்வேறு உணவு முறைகளை கண்டறிவது, உலோகப் பயன்பாட்டில் மிகவும் அறிவியல் அறிவுடன் செயல்படுவது என பாரத தேசத்தினர் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தனர்.

உணவு முறையில் சமச்சீர் உணவு முறையும் , பல்வேறு உடல் நிலைக்கு ஏற்ப உணவு அமைப்பையும் நம் மக்கள் பின்பற்றிவந்தனர். அதை வேறு ஒரு நாள் விளக்கமாக பார்ப்போம். உலோகத்தில் அனைத்து வகையான உலோகமும் நம் மண்ணில் கிடைத்தவண்ணம் இருந்தது. ஒரு உலோகம் நம் உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.

நம் உடலில் இருக்கும் நாடியின் செயலையும் நவக்கிரகங்களின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு உலோகத்தை பயன்படுத்துவது என்பதை கண்டறிந்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை மட்டுமே ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய உலோகம் என்பது அவர்களின் கருத்து.

அறிவியல் ரீதியாக மூலக்கூறு அட்டவணையில் அதிக புள்ளிகள் கொண்டது தங்கம் மற்றும் வெள்ளி என்பது அறிந்ததே. தங்கமும் வெள்ளியும் அதிவேக கடத்திகள். ஆற்றலை கடத்தும் திறனில் இவற்றுக்கு தான் முன்னுரிமை. அதற்காக அறிவியல் சார்ந்து பாரதத்தில் பயன்படுத்தினார்கள் என கூறி பாரத கலாச்சாரத்தின் தரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. பாரத மக்கள் பயன்படுத்தியது அறிவியலையும் தாண்டிய மெய்யறிவு.

நம் கலாச்சாரத்தின் படி எப்படி உலோகங்களை பயன்படுத்தவேண்டும் என பார்ப்போம். உடலில் தங்கத்தை இடுப்புவரை மட்டுமே அணிய வேண்டும். வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். விரல்களில் வெள்ளி அணியக்கூடாது.

வெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் என்ற கிரகத்தை குறிக்கிறது. உண்மையில் சுக்கிரன் கிரகத்தில் வெள்ளித் தாதுக்கள் அதிகம். சுக்கிரன் கிரகத்தையே தமிழில் வெள்ளி என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? சுக்கிரன் காம இச்சைகளை கொடுக்கும் கிரகம். அதனால் வெள்ளி உலோகம் இடுப்பு அரைஞாண் மற்றும் கொலுசு ஆகியவற்றிக்கு பயன்படுத்தினார்கள். இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு.

தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்கம் மிகமுக்கியமானது.

உலோகத்தில் தங்கத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். சுரங்கங்களில் தங்கம் அதிகமாக கிடைத்ததும் ஒரு காரணம். மூளை திறன் அதிகரிக்க நம் அரசர்கள் தங்கத்தை தலையில் கிரீடமாக அணிந்தனர். வேறு கலாச்சார நாடுகளில் தங்கத்தை கிரீடமாக அணிவது வழக்கத்தில் இல்லை என்பதை அறிக. செம்பு ஆபரண தங்கத்துடன் கலக்கப்பயன்பட்டதால் செம்பும் அதிகமாக பயன்பட்டது என கூறலாம்.

ஒரு மனித உடலில் தங்கம் முதன் முதலில் தொடர்பு கொள்ளும் நாள் மிக முக்கியமானது. மனித உடலில் இயற்கையாகவே தங்க தாது உண்டு. அத்துடன் தங்க ஆபரணம் இணைந்து உடலின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தங்கம் அணிவித்தல் என்பது விழாவாகவே கொண்டாடினார்கள். நாம் இப்பொழுதும் காது குத்தும் வைபவமாக எளிய நிலையில் கொண்டாடுகிறோம்.

நம் உடலில் இடா நாடி மற்றும் பிங்கள நாடிகள் இடவலமாக இருப்பது முன்பு பார்த்தோம். ஆபரணம் அணிவதில் இந்த நாடிகளை சமநிலை ஆக்குவதற்குத்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாடிகள் ஆன்மீக சக்தியை கடத்தும் புள்ளிகள் என்பதால் நாடிகள் இணையும் இடத்தில் ஆபரணம் அணிய வேண்டும்.

மனித உடல் என்பது ஒருவித கட்டமைப்பால் உண்டானது. நாடிகளின் சலனத்தை அவைகள் ஏற்படுத்துகிறது. நம் உடலில் இடப்பக்கம் உள்ள நாடிகள் வலப்பக்க செயலையும், வலபக்க நாடிகள் இடபக்க செயலையும் செய்யும். அதனால் உடலில் நாடிகளின் சமநிலை தவறாமல் இருக்க சம எடை கொண்ட ஆபரணங்களை இருபக்கமும் அணிந்தார்கள். இரண்டாக இருக்கும் உடல் பகுதிகளில் ஒன்றில் மட்டும் ஆபரணம் போடுவதால் நாடி சமநிலை தவறும். உதாரணமாக காது, மூக்கு, கைகள் மற்றும் கால் பகுதியில் ஆபரணம் அணியும் பொழுது இரு உறுப்புகளிலும் அணிய வேண்டும். இரு உறுப்பில் அணியும் ஆபரணம் சமமான எடையுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

ஆபரணத்தின் இத்தகைய முக்கியத்துவம் உணராமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆபரண வடிவமைப்பவர்கள் கூட தங்களின் பாரம்பரிய வடிவமைப்பால் கொலுசு, வளையல் போன்றவற்ற ஒரே எடை மற்றும் வடிவில் தயாரிப்பார்கள். வடிவம் (டிஸைன்) மாறினால் எடையில் வித்தியாசம் ஏற்படும் என்பது ஒரு முக்கிய காரணம்.

நாடிகளின் சலனம் ஏற்படாமல் சமநிலையில் இருக்கவும், அலங்காரத்திற்காகவும் ஆபரணம் பயன்படுத்தபட்டது.
எப்படி நம்மிடையே தங்கத்தின் பயன்பாடு குறைய துவங்கியது? பாரதத்தில் தங்கத்தால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்ன? நம் கலாச்சாரத்தில் நவரத்தின கற்களின் முக்கியத்துவம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதிலை அடுத்த பகுதியில் பார்ப்போமா ?
---------------------------------------
டிஸ்கி 1 : உங்களை பற்றி ரகசியம் என்ற தலைப்பில் ஏதோ எழுதி இருக்கிறேன் என்கிறீர்களா?.. நீங்கள் என் தங்கம் அல்லவா?

டிஸ்கி 2 : வர வர உங்கள் பதிவுகளில் பகடியே அதிகம் என்ற சொக்க தங்கங்களுக்கு இந்த சீரியஸான பதிவு சமர்ப்பணம்

53 கருத்துக்கள்:

sarul said...

வணக்கம் ஸ்வாமி
உங்களின் பதிவால் தங்கத்தின் விலை ஏறப்போகிறது :-)
முன்னோர்கள் இவற்றைத் தெரிந்து பயன்படுத்தி இருக்கலாம் தற்காலத்தில் யாருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நிநைக்கிறேன்.
இதைச்சாட்டாக வைத்து அதிக தங்கம் சீதனமாகக் கேட்காமல்விட்டால் சரிதான்.

Unknown said...

நல்ல கட்டுரை

நான் எதிர்பார்ப்பது

நீங்கள் ஆன்மீகம் பற்றீ மட்டும் எழுதுங்க்கள்.
ராசி நாள் உலோகம் பற்றி ஏன் எழுதவேண்டும்
அதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு

கோவி.கண்ணன் said...

:)

சிங்கையில் பல இனப் பெண்களும் ஒற்றைக் காலில் தங்கக் கொலுசு போட்டு இருப்பாங்க

Siva Sottallu said...

உண்மையிலேய நாம் அறியாத ரகசியம் ஸ்வாமி. மிக்க நன்றி ஸ்வாமி, தொடருக்காக காத்திருக்கிறேன்.

உறவினர்கள் அன்பாக கொடுத்த ஒரு தங்க காப்பை வலது கையில் அணிந்திருக்கிறேன், உங்கள் பதிவை படித்த பிறகு, ஒன்று அதே எடை கொண்ட இன்னொன்றை இடது கையில் போட வேண்டும் அல்லது இதை எடுத்து வைக்க வெண்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

// தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். //

வெள்ளை தங்கம் (white gold) என்ற உலகத்துக்கும் இந்த சக்தி உண்டா ஸ்வாமி?

பிளாடினம் பற்றி ஒன்றும் கூறவில்லையே ஸ்வாமி? இது இந்தியாவில் கிடைப்பது அறிது அதனாலய...

அமுதா கிருஷ்ணா said...

தங்க ஆபரணத்தில் இவ்வளவு பயன் உள்ளதா?? சிலர் இப்போது தங்க கொலுசு போடுகிறார்கள்...

Siva Sottallu said...

// வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். //

// இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு. //

ஸ்வாமி. இந்த வரிகளை படிக்கும் பொழுது எனக்கு "யோகியின் சுயசரிதை" என்ற புத்தகத்தில் ஸ்ரீ யுக்தேஷ்வர் அவர்கள் யோகானந்த அவர்களை, வரவிருக்கும் கல்லீரல் நோய் வீரியத்தை குறைக்க, கையில் வெள்ளியில் செய்த காப்பு ஒற்றை அணிய அறிஉரை கூறுவர்.

// "For general purposes I counsel the use of an armlet made of gold, silver, and copper. But for a specific purpose I want you to get one of silver and lead."//

வெள்ளியை ஒரு சில குறிப்பிட்ட காரணத்திற்காக இடுப்புக்கு மேல் அணியலாமோ?

ரங்குடு said...

எனக்குத் தெரிந்த வரை தங் கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இந்தியாவில் (கோலார் தங்க வயல்கள் கண்டறியப் பட்ட வரை) உற்பத்தியாக வில்லை.

யவனர்களும், உரோமானியர்களும் தங்கத்தைக் கொடுத்து விட்டு, பண்ட மாற்றாக முத்து, உணவுப் பொருள்களை (ஏலக்காய், மிளகு) எடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை.

VIKNESHWARAN ADAKKALAM said...

இவ்வளோ விசயம் இருக்குங்களா....

பித்தனின் வாக்கு said...

எனக்கு தங்கம்னா புடிக்காது சாமி, அதுனால நான் தங்கம் போட்டது இல்லை. செம்பில் பாம்பு மேதிரம் மட்டும் குண்டலிக்காக அனிவேன். உங்க பதிவை படித்ததில் தங்கம் அணியலாமா என்று யேசனை செய்கின்றேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேஎஸ்,
சீதனம் கொடுப்பது நம் கலாச்சாரம் அல்ல.
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு ஜெய்சங்கர்,

நீங்கள் சொல்லீட்டீங்க. சரியா இருக்கும் :)

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

கோவி.கண்ணன்,

உலகில் பல இடங்களில் ஒரு புறம் மட்டும் ஆபரணம் அணியும் கலாச்சாரம் உண்டு. ஆனால் பழங்குடி மக்கள் அப்படி அணிய மாட்டார்கள் (இயற்கை அவர்களை சமநிலைபடுத்தும்)

நவநாகரீகம் என்ற அடிப்படையில் சிலர் ஒருபுறம் அணிந்து மனநிலை ஏற்றதாழ்வு ஏற்படுத்துகிறார்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,
//வெள்ளை தங்கம் (white gold) என்ற உலகத்துக்கும் இந்த சக்தி உண்டா ஸ்வாமி?

பிளாடினம் பற்றி ஒன்றும் கூறவில்லையே ஸ்வாமி? இது இந்தியாவில் கிடைப்பது அறிது அதனாலய...//

தூய்மையான உலோகம் என்றால் தங்கம் மட்டுமே. மிகதுல்லியமாக ஆற்றல் கடத்தவேண்டிய கருவிகளில் இன்னும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

பிளாட்டினத்தை விட டைட்டானியம் போன்ற உலோகங்கள் விலை அதிகம். அடுத்த அக்‌ஷயதிரிதியைக்கு நம்மக்களிடையே இது பிரபலமாகலாம். :)

விஞ்ஞான மூலக்கூறு அட்டவணையில் இவையெல்லாம் தங்கத்திற்கு பின்னால்தான் வரும்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி அமுதா கிருஷ்ணன்,

//தங்க ஆபரணத்தில் இவ்வளவு பயன் உள்ளதா?? சிலர் இப்போது தங்க கொலுசு போடுகிறார்கள்...//

நான் சொன்னவை குறைவுதான். இன்னும் பல உபயோகங்கள் உண்டு.

தங்க கொலுசு போடும் (சுத்த தங்கம்-முலாம் பூசியது அல்ல) பெண்களின் மனநிலையும், யோசிக்கும் திறனும் மிகவும் குதர்க்கமாக இருக்கும் என்பது என் ஆய்வு. இவ்வாறு அணியும் பொழுது கட்டுக்கடங்காத ஆணவம் அவர்களிடம் காணப்படும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//"யோகியின் சுயசரிதை" என்ற புத்தகத்தில் ஸ்ரீ யுக்தேஷ்வர் அவர்கள் யோகானந்த அவர்களை, வரவிருக்கும் கல்லீரல் நோய் வீரியத்தை குறைக்க,//

நான் சொல்லுவது இயல்பு நிலையில் மனிதர்கள் பயன்படுத்தும் முறை.
நீங்கள் குறிப்பது பரமஹம்ச யோகானந்தரை.

குரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம்.

யுக்தேஸ்வர் யோகானந்தரின் குரு. உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரங்குடு,

//எனக்குத் தெரிந்த வரை தங் கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இந்தியாவில் (கோலார் தங்க வயல்கள் கண்டறியப் பட்ட வரை) உற்பத்தியாக வில்லை.

யவனர்களும், உரோமானியர்களும் தங்கத்தைக் கொடுத்து விட்டு, பண்ட மாற்றாக முத்து, உணவுப் பொருள்களை (ஏலக்காய், மிளகு) எடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை.//

ஐரோப்பிய வரலாற்று அறிஞ்சரிகளின் வரலாறை படித்துவிட்டீர்களா?

யவனர்கள் என்பவர்கள் கிரீஸ் (கிரேக்கம்) நாட்டை சேர்ந்தவர்கள், ரோமானியர்கள் என்பவர்கள் ரோம் நாட்டை சார்ந்தவர்கள்.

அந்த நாட்டில் தங்க சுரங்கம் இருந்ததாக வரலாற்று ஆதாரம் இல்லை.

தங்கம் அதிகமாக பயன்படுத்தபட்டு அவை கொள்ளையர்களால் திருடப்பட்ட செய்தி நம்மிடையே உண்டு.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விக்னேஷ்வரன்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பித்தன் வாக்கு,

//எனக்கு தங்கம்னா புடிக்காது சாமி, அதுனால நான் தங்கம் போட்டது இல்லை. செம்பில் பாம்பு மேதிரம் மட்டும் குண்டலிக்காக அனிவேன். உங்க பதிவை படித்ததில் தங்கம் அணியலாமா என்று யேசனை செய்கின்றேன்.//

அணியுங்கள் நல்லது.

உங்களிடம் ஒரு கேள்வி ...

குண்டலினிக்காக பாம்புவடிவில் மோதிரம் போட்டால் குண்டலினி அசைவுறுமா?
ஃபாண்டம் காமிக்ஸில் எலும்புகூடு மோதிரம் போன்றதா இது?
குண்டலினி அசைய மோதிரம் ஏன் போடவேண்டும்? பாம்புவடிவத்தில் செம்பில் ஒட்டியாணம் தானே போடவேண்டும்?

என் அறியாமையால் கேட்டுவிட்டேன் :) மன்னிக்கவும்

எம்.எம்.அப்துல்லா said...

எங்களைப் பற்றியயா?? உங்களைப் பற்றில்ல எழுதி இருக்கீங்க??

(நீங்கள் எங்கள் தங்கம்ல!ஹி..ஹி..)

Unknown said...

//நீங்கள் சொல்லீட்டீங்க. சரியா இருக்கும் //

கொஞ்சம் அதிகம் தான். நீங்க ஸ்வாமிஜி ஆச்சே. கண்டிப்பா தப்பா எடுத்துக்க மாட்டீங்க

passerby said...

சீரியசாத்தான் இருக்கு.

தீப்பெட்டி said...

அப்படியென்றால் மோதிரம் இரு கைகளிலும் அணிய வேண்டுமா?

K.R.அதியமான் said...

வணக்கம் அய்யா. உங்களை சந்திக்க ஆவல். ஜோதிடம், ஆன்மீகத்தில் எமக்கு ஆர்வம். உங்களுக்கு அனுப்பிய தனிமடல்களை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த பதிவு பற்றி :

சரியா போச்சு. தங்கத்தில் இத்தனை விசியம் இருக்குதா ? ஒவ்வொறு பெண்மணியின் மனசுக்குள்லேயும்
ஒரு சசிகலா (1995 வளர்பு மகன் திருமண ஃபோட்டொக்கள்) இருக்கிறார் என்று நம்புகிறேன். இதில் இந்த பதிவை பார்த்தால் எம் போன்ற கிரகஸ்தர்கள் கதி என்ன ஆகும் ? ஒரு பெண், சுமார் எத்தனை கிலோ அல்லது கிராம் தங்க நகை அணியவேண்டும் ? மேக்ஸிமம் / மினிமம் லிமிட் இருக்கா ?

தங்கத்தை அறவே வெறுப்பவன் யான். ஆனால் ஜோதிட பலன்களுக்கா கடந்த் 7 ஆண்டுகளாக வலது கை ஆள்காட்டி விரலில் மஞ்சள் புஸ்பராகம் அணிந்து, நல்ல் பலனை பெற்றேன். மேலும்..

இறக்குவானை நிர்ஷன் said...

இப்படியும் விஷயம் இருக்குதோ.

புதிய விஷயங்கள தெரிஞ்சுகொண்டேன்

yrskbalu said...

குரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம்.

யுக்தேஸ்வர் யோகானந்தரின் குரு. உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.

again golden words.

readers realise properly this word

yrskbalu said...

குரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம்.

யுக்தேஸ்வர் யோகானந்தரின் குரு. உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.

again golden words.

readers realise properly this word

sarul said...

ஒரு மதத்தைச்சேர்ந்த் ஆண்கள் வெள்ளி நகைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களின் மத் நூல் வலியுறுத்துகிறது , இது கூட அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்ற்காகத்தான் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

Siva Sottallu said...

// குரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம். //

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

ஒரு சாதரண இயல்பு நிலை மனிதனாக அந்த புத்தகத்தை படித்தால் எழுந்த கேள்வி என்று நினைக்கிறன்.

குரு சிஷ்யன் பார்வையில் மீண்டுன் ஒருமுறை அந்த புத்தகத்தை படிக்கலாமோ என்றோ தோன்றுகிறது ஸ்வாமி.

Siva Sottallu said...

// உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.//

மாணவன் தயாராக இருக்கும் பொழுது குரு தானாக அமைவார் என்று நான் உங்கள் குருகீதை பதிவில் படித்த ஞாபகம் ஸ்வாமி.

நான் இன்னும் குருவை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒருவேளை நான் இனும் தயார் இல்லையோ அல்லது எனது குருவை அடையாளம் காணும் பக்குவம் இன்னும் வரவில்லையோ தெரியவில்லை ஸ்வாமி.

Anonymous said...

ஆஹா! தங்கத்தில இவ்ளோ மேட்டர் இருக்கா! இப்போதைக்கு வெறும் மெலிசான தங்க செயின் சும்மா ஸ்டைல்க்கு போட்டிருக்கேன்! ஆபரணங்களை பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆவலுடன் இருக்கிறேன். மிக்க நன்றி சுவாமி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேஎஸ்,

//ஒரு மதத்தைச்சேர்ந்த் ஆண்கள் வெள்ளி நகைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களின் மத் நூல் வலியுறுத்துகிறது , இது கூட அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்ற்காகத்தான் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.//

இப்படி இருப்பதாக என் அறிவுக்கு தெரியவில்லை. அப்படி இருந்தாலும் மதம் ஆபரணம் அணிவதை கட்டுபடுத்த முடியாது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தீப்பெட்டி,

//அப்படியென்றால் மோதிரம் இரு கைகளிலும் அணிய வேண்டுமா?//

உடலை இரு பரிமாண சூழலில் பார்த்தால் இருபக்க தராசு போல சமமாக அணியவேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பகிர்வதில்லை என்றாலும்,...
நீங்கள் சொன்ன வாசகத்திற்கு சில விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

//மாணவன் தயாராக இருக்கும் பொழுது குரு தானாக அமைவார் என்று நான் உங்கள் குருகீதை பதிவில் படித்த ஞாபகம் ஸ்வாமி.

நான் இன்னும் குருவை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். //

நீங்கள் சொன்ன வரிகளில் முரண்பாடுகள் இருப்பது தெரிகிறதா?

குரு தானாக அமையும் பொழுது நாம் ஏன் தேட வேண்டும்?

நான் என்ற நிலை இருக்கும் வரை.. தேட வேண்டி இருக்கும்.


திரு yrskbalu,
இன்னும் ஒரு கோல்டன் வார்த்தை சொல்லியாச்சு நோட் பண்ணுங்க :)

உங்கள் வருகைக்கு நன்றி

Siva Sottallu said...

முரண்பாடு தெரிந்தது ஸ்வாமி, விளக்கத்திற்கு மிக்க நன்றி.

// நான் என்ற நிலை இருக்கும் வரை.. தேட வேண்டி இருக்கும். //

குறித்துக்கொள்ள வேண்டிய பொன்மொழிகள் ஸ்வாமி.

எம்.எம்.அப்துல்லா said...

// KS said...
ஒரு மதத்தைச்சேர்ந்த் ஆண்கள் வெள்ளி நகைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களின் மத் நூல் வலியுறுத்துகிறது , இது கூட அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்ற்காகத்தான் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.
//

திரு.கே.எஸ் நீங்கள் இஸ்லாம் என்று நேரடியாக கூறி இருக்கலாமே?

இஸ்லாம் தோன்றிய அரேபியா உயர் வெப்பப்பகுதி. நாள் முழுவதும் உழைப்பின் பொருட்டு வெளியில் வெப்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு உடலின் சாராசரி வெப்பநிலை அளவுக்கு அதிகமாவது இயல்பு.சராசரிக்கும் அதிகமாகன வெப்ப நிலை உடைய உடலில் விந்தின் உயிரனுக்கள் மிகவும் குறையும் என்பது விஞ்ஞான உண்மை. அதை சமப்படுத்தும் பொருட்டுதான் வெள்ளி அணியச் சொன்னது. அது அன்றைய புவியியல் அடிப்படையில் அங்கிருந்த மக்களுக்குச் சொல்லப்பட்டது. பின்னர் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பின்னர் பரவிய நாட்டின் மக்களும் அதாவது என் போன்றவர்களும் அதை சம்பிரதாயமாக ஏற்றுக்கொண்டு விட்டனர். இதைத் தவிர நீங்கள் நினைப்பதுப்போல வேறு எந்த கேவலமான பிண்ணனியும் இல்லை :)

sarul said...

வணக்கம் அப்துல்லா
உங்களுடைய விளக்கத்திற்கு நன்றி , இந்த கேவலமான என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாமே ,
நான் குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கிறேன் , அதில் வரும்கருத்தைத்தான் எழுதினேன்
(என்னுடைய முஸ்லிம் நண்பரின் கட்டுப்பாடுகளிற்கு உட்பட்டே படித்தேன் )
வெள்ளிக்கு இப்படி ஒரு தன்மை இருப்பது வியப்பளிக்கின்றது.
இங்கே கனடா நாட்டில் ஆபிரிக்க நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் பலர் இன்றும் வெள்ளி நகைக்ளையே விரும்பி அணிகிறார்கள்.

உங்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல ,அவ்வாறு நிகள்ந்திருந்தால் எல்லோரும் என்னை மன்னியுங்கள்.
நிற்க
இஸ்லாம் மதத்தில் கடவுளிற்குப் பயப்படுங்கள் என்று அடிக்கடி வலியுறுத்தப்படுவது ஏன் என்று எனக்குப் பூரணமாக விளங்கவில்லை பக்திக்கு அடிப்படை பயம் தானா , பயப்படாமல் ஒருவன் கடவுளை வழிபட முடியாதா ,
ஸ்வாமி ஓம்காரிடம் குறுக்கு விசாரணை செய்யும் நீங்கள் உங்களின் மத விடையங்கள் பற்றிய நியாயமான கேள்விகளிற்குப் பதிலளிப்பீர்களா ?

எம்.எம்.அப்துல்லா said...

சகோதரர் கே.எஸ்

முதலில் என்னை மன்னியுங்கள். அந்தச் சொல்லைப் பயன்படுத்தியது தவறுதான். மன்னிக்கவும்.

//என்னுடைய முஸ்லிம் நண்பரின் கட்டுப்பாடுகளிற்கு உட்பட்டே படித்தேன் )
//

குரானைப் படிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எவரும்,எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் படிக்கலாம். இதுதான் நான் அறிந்த,தெளிந்த வரை உண்மை.இது விஷயமாக எவர் சொல்வதையும் நீங்கள் கேட்கவும் வேண்டாம்,நம்பவும் வேண்டாம்.



//இஸ்லாம் மதத்தில் கடவுளிற்குப் பயப்படுங்கள் என்று அடிக்கடி வலியுறுத்தப்படுவது ஏன் என்று எனக்குப் பூரணமாக விளங்கவில்லை பக்திக்கு அடிப்படை பயம் தானா , பயப்படாமல் ஒருவன் கடவுளை வழிபட முடியாதா //


என்னுடைய பழைய இடுகை ஒன்றில் அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் எனது உறவினர் யாசருக்கு நான் சொன்ன பதிலின் சுட்டியைத் தருகின்றேன். அதில் கடைசியில் இருந்து 6 மற்றும் 7 வது பின்னூட்டங்களைப் படியுங்கள். அதுதான் நான் உங்களுக்குத் தரும் பதிலும்கூட. ஒருவேளை அந்த பதிலில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் மேற்கொண்டு யாரேனும் இஸ்லாம் மதத்தில் பிறந்த மதவாதிகளிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள்.காரணம் நான் இஸ்லாம் மதத்தில் பிறந்த ஆன்மீகவாதி.எனக்கு புரிந்தது இவ்வளவுதான் :)

சுட்டி : http://mmabdulla.blogspot.com/2009_07_01_archive.html



//ஸ்வாமி ஓம்காரிடம் குறுக்கு விசாரணை செய்யும் நீங்கள் உங்களின் மத விடையங்கள் பற்றிய நியாயமான கேள்விகளிற்குப் பதிலளிப்பீர்களா ?

அட அல்லாவே!! நான் எப்ப சாமியை குறுக்கு விசாரணை பண்ணுனேன்?? அதுபோல் என்னுடைய ஒரே ஒரு பின்னூட்டத்தைக் காட்டுங்கள் பார்ப்போம். நான் அறிந்தவரை சாமியை குறுக்கு விசாரணை பண்ணுவது அண்ணன் கோவியார்தான் :)

அப்புறம் சாட்சியைத்தான் விசாரனை பண்ணமுடியும். ஸ்வாமிஓம்கார் என் மனசாட்சி. அதையெல்லாம் விசாரணை பண்ணமுடியாது ஹி..ஹி..ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்கள் உங்களின் மத விடையங்கள் பற்றிய நியாயமான கேள்விகளிற்குப் பதிலளிப்பீர்களா //

பொது தளத்தில் பேச நான் மத போதகர் அல்ல. தயவுசெய்து மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.நன்றி :)

Unknown said...

//பொது தளத்தில் பேச நான் மத போதகர் அல்ல. தயவுசெய்து மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.நன்றி :)
//
தனது கருத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் பணிவாகவும் எழுதும் அப்துல்லா வாழ்க.

விஜய் said...

தங்கம் குருவுக்கு உகந்த உலோகம். சூரியன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.

விஜய் said...

இஸ்லாத்தில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக உள்ளது. பெண்கள் தங்க நகைகளை மட்டும் அணியவேண்டும் என்ற கட்டுபாடு உள்ளது.

ஸ்வாமி ஓம்கார் said...

பெரிய மனுஷங்க ஏதோ பேசிக்கராங்க...
எனக்கு இது அவுட் ஆப் சிலபெஸ் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கவிதை(கள்),

//தங்கம் குருவுக்கு உகந்த உலோகம். சூரியன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.//

சொக்கத்தங்கம் (தங்க கட்டிகள்) குரு குறிப்பார்.

செம்பு சில சதவிகதம் கலந்தாலே ஆபரணம் ஆக்க முடியும். ஆபரண தங்கம் சூரியன் குறிப்பார்.
செம்பு என்ற உலோகத்தையும் குறிப்பவர் இவறே.

செம்பு காப்பை உடலில் எல்லா பகுதியிலும் அணியலாம். முக்கியமாக சன்யாசிகள் (ஆன்மீகவாதிகள்) செம்பு பயன்படுத்துவது அதிகம்.

மதி said...

பெரிய அரிய தகவலுக்கு நன்றி

ரங்கன் said...

Swamiji

I do not know whether this is the proper foum or post to ask - I am using lotus seed japa malai while doing Gayatri japam - Is this correct?

( How does one use tamil font here - can anyone tell me?

நிகழ்காலத்தில்... said...

45 வது பின்னூட்டம், தங்களின் பின்னூட்டம் போக, திரும்ப திரும்ப வந்தவர்கள் எண்ணிக்கை போக 18 பேர் வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்

சரி மூணாவது ஓட்டை போட்டுட்டு போவம், தங்கம்னு வேற சொல்லிட்டீங்க

இதுக்குங்கூட நன்றி சொல்லலைன்னா எப்படி...

----புரியாத பொன்னுச்சாமி

sarul said...

வணக்கம் ஸ்வாமி
இந்த சிறியேனின் அவுட் ஆப் சிலபஸ் அலட்டல்களைப் பொறுத்தருள்க ,
தவறான சொற் பிரயோகங்களை நான் ஆரம்பிக்கவில்லை.
பின்னூட்டத்தில் உங்களுடைய மூலக் கருவை விட்டு நீண்டதூரம் சென்றுவிட்டதற்கு
மன்னிப்பீர்களாக.
எனினும் குர்ஆனில் ஆண்கள் வெள்ளிதான் அணியவேண்டும் பெண்கள் தங்கம் தான்
அணியவேண்டும் என்று வலியுறுத்தப்ப்ட்டுள்ளது என்பது உண்மை.

நிற்க

அப்துல்லா அவர்கள் கொடுத்த சுட்டியில் எதுவுமேயில்லை அவரின் பின்னூட்டத்தைப்போல,
நேரடியாகப் பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லியிருக்கலாமே ,
தவறான் சுட்டியைக் கொடுப்பது நாகரிகமாகத்தெரியவில்லை.. ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு
மட்டுமே தெரியும் சுட்டியோ மஹாராஜாவின் பட்டுவஸ்திரம் போல.
கோணலான் என்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள் மட்டுமே தங்கம் அணியத்தகுதியுடையவர்களா ,

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே எஸ்,

அப்துல்லா கொடுத்த சுட்டியில் எனக்கு அவர் குறிப்பிட்ட தகவல் எனக்கு கிடைத்ததே?

ஞான கண்ணில் பார்க்க வேண்டுமோ :) ?

உங்களுக்காக அதை இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
-----------------------------------
//எம்.எம்.அப்துல்லா said...

//"ஆண்டவனும் மாட்டிக் கொண்டான் போல" இந்த வரியை படிக்கும் போது எனக்கு கஷ்டமா இருந்தது..எப்படி நீங்க இப்படி எழுதினீங்கனு
எனக்கு தெரியல....the meaining of ஆண்டவன் is allah subhanuthallah தானே...அப்படி இருக்க அல்லாஹ் மாட்டிக் கொண்டான் போலனு எப்படி உங்களால எழுத முடிஞ்சது....ஏதோ விளையாட்டுக்குனு சொல்ல முடியாது....

//

அன்பின் மாப்பிள்ளை யாசர்

நலமா? இறை குறித்த புரிதல் மனிதருக்கு மனிதர் வேறுபடும்.இன்று இறைவனாய் உன்மனதில் உள்ள புரிதல் இன்னும் சில வருடங்கள் கடந்த நிலையில் மாற்று நிலை கொள்ளும். உன்னைப் பொருத்தவரை இறைவன் உன் எஜமான்.பணிவும்,பக்தியும் அவரிடம் உனக்கு மிகவும் அவசியம். என்னைப் பொறுத்தவரை இறைவன் என் தோழன். எதுவும் சொல்வேன் :)

காலம் உனக்குப் புரிய வைக்கும்.//

எம்.எம்.அப்துல்லா said...

திரு.கே.எஸ்,


//அப்துல்லா அவர்கள் கொடுத்த சுட்டியில் எதுவுமேயில்லை அவரின் பின்னூட்டத்தைப்போல,
நேரடியாகப் பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லியிருக்கலாமே ,
தவறான் சுட்டியைக் கொடுப்பது நாகரிகமாகத்தெரியவில்லை..

//

ஏன் உங்களுக்கு என்மேல் இத்தனை ஆத்திரமும்,கோபமும்,? அந்த அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன்??



//
ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு
மட்டுமே தெரியும் சுட்டியோ மஹாராஜாவின் பட்டுவஸ்திரம் போல //


நான் குடுத்த சுட்டி சத்தியமாய் மனிதர்கள் அனைவருக்குமே தெரியும்.உங்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை எனப் புரியவில்லை.

நான் உங்களை சகோதரராய் நினைத்துதான் உரையாடினேன்,உரையாடுகின்றேன். நீங்கள் என்னை விரோதி கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் என்ன செய்வது?? :(

இப்படிக்கு,
எதுவுமே தெரியாத,

எம்.எம்.அப்துல்லா

Siva Sottallu said...

திரு alr,

சுவாமியின் அனுமதியுடன் உங்களுக்கு இந்த பதிலை கொடுக்கின்றேன்.

தமிழில் டைப் செய்ய இந்த இடத்திற்கு செல்லலாம். "http://www.google.co.in/transliterate/indic/tamil "

You can type here and get the translation done in Tamil for each word you type, then you can copy past it here.

The better way would be, if you are regular user of Tamil font you can click on the "user translation on any website" link on the same page and follow the instruction to add it to your bookmark, so with a simple click you can toggle between Tamil and English font.

Hope this helps you.

Have a great day.

sarul said...

அன்பு நண்பர் அப்துல்லாவுக்கு

சுட்டி சுட்டிய சுட்டித்தன்ங்களை விட்டுவிட்டு
நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.

ஒரு ஆண் நான்கு
பெண்களை மணமுடிக்கலாம் ஆனால் ஒருபெண் ஒரு
ஆணைமட்டும் ஒருநேரத்தில் மணமுடிக்கலாம் ,இந்த
வேறுபாடு ஏன் என்று கேட்பதற்கு பிறக்கும் பிள்ளை
யாருடையது என்ற சிக்கல் தோன்றும் என்று பதில்
சொல்லப்படுகிறது. அவாறாயின் கருத்தடை செய்துகொண்ட
பெண் அல்லது பிறக்கும் பிள்ளையை மரபணுச் சோதனைக்கு
உட்படுத்தத் தயாரான ஒரு பெண்
நான்கு ஆடவரை ஒருநேரத்தில் மணக்க் உங்கள்
மதம் சம்மதிக்குமா .

அவ்வாறு இல்லாவிடில் இது
இது அப்பட்டமான பெண் அடிமைத்தனம் என்பதை
ஏற்றுக்கொள்கிறீர்களா.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே எஸ்,

//சுட்டி சுட்டிய சுட்டித்தன்ங்களை விட்டுவிட்டு
நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.
//

அப்துல்லா அண்ணனுக்கு பதிலாக நான் இங்கே பதில் கூற விரும்புகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். மதம் என்பதையும் கலாச்சாரம் என்பதையும் குழப்பிக்கொள்ள கூடாது. மதம் என்பதன் புரிதல் இல்லாமல் வலையுலகில் வாய்க்கு வந்தததை பேசுபவர்கள் அதிகம்.

நீங்கள் சார்ந்த மதம் எது என எனக்கு தெரியாது. ஆனாலும் அனைத்து மதங்களிலும் ஒரு குறை இருக்கும் அதை சுட்டிக்காட்டுவது எளிது.

அனைத்திலும் நிறைவை காண் என்பது அனைத்து மதங்களின் சாராம்சம். அதைவிடுத்து குறைகளை சுட்டிக்காட்டியே பழகினால் எந்த மதத்திலும் இருக்க தகுதியற்றவராகிவிடுவோம்.

ஐந்து பெண்கள் என்ன எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய் என கூறும் மதமும் உலகில் உண்டு. இவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆன்மீக நிலை ஒரு சதவிகிதம் கூட மாற்றம் அடையப்போவதில்லை.

வீணான தர்க்கமும் மத காழ்ப்புணர்ச்சியும் விட்டுவிட்டு ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியுமா என முயலுங்கள்.

மதக்கருத்துக்களை தர்க்கம் செய்ய இது இடமல்ல. இது ஆன்மீகமான செயலுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

நிகழ்காலத்தில்... said...

\\அனைத்திலும் நிறைவை காண் என்பது அனைத்து மதங்களின் சாராம்சம்.\\

வாழ்வின் சாராம்சே அதுதான் சாமி :))

இந்தக் கருத்தை தனி இடுகையாகவே போட்டிருக்கலாம்.,

அழுத்தமான ஆழமான கருத்து..

தொடரட்டும் தங்களின் பணி

sarul said...

ஸ்வாமி
தயவுசெய்து என்னை மன்னியுங்கள் .
இனிமேல் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.
சில தவறான சொற்பிரயோகங்கள் சில பின்னூட்டங்களை ஏற்படுத்திவிட்டன.

சிலவிடையங்களில் அன்புவைத்துவிட்டால் அதில் யாரும் குறைகூற உள்ளம் அனுமதிக்கமாட்டாமல் தடுமாறுகிறது ( எங்களின் பிள்ளைகளைப்போல )