Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 29, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 7

பூவுலகம் விந்தை நிறைந்தது. மனிதனுக்கு அவன் கைகளுக்கு எட்டும் தொலைவில் அனைத்தும் இருந்தாலும் அவன் எதுவும் பயன்படுத்துவதில்லை. அவனின் அறிவியல் கண்டுபிடிப்பு என்பதன் பெயரில் இருக்கும் விஷயங்கள் தான் அவனுக்கு மனமகிழ்ச்சியை தருகிறது. இந்நாள் வரை மனிதன் அறிவியலில் கண்டறிந்த விஷயங்கள் அனைத்தும் இயற்கையில் இருக்கிறது. ஆனால் தான் கண்டுபிடித்தது என சொல்லி அவனின் ஆணவத்தை அவன் மகிழ்வுறச் செய்தால் மட்டுமே அவனால் வாழமுடிகிறது. இப்படி அவன் இருப்பதற்கு ‘அறியாமை’ என்று கூட மனிதனே கண்டறிந்து வைத்திருக்கிறான் என்பது பரமவேடிக்கை.

சென்ற பகுதியில் நான் கூறியதை சிறிது சிந்தித்து பார்த்தால் மனிதன் கண்டறிந்த செல்போன் என்ற பொருள் இயற்கையாகவே இருப்பது புரியும். ஆனால் மனிதன் தான் கண்டறிந்ததை தான் நம்புவான்.

ஒரு தகவல் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு மரத்திற்கு தெரிந்த விஷயத்தில் ஒரு சதவீதம் கூட மனிதனுக்கு தெரியாது. இதை உங்கள் மனித ஆணவம் ஏற்றுக்கொள்ளாது. வேறு வழி இல்லை மேற்கொண்டு மரங்கள் என்ன செய்யும் என பார்ப்போம்.

மரங்களின் உறுப்புகளில் உள்ள அதிர்வுகளை உள் வாங்கும் சில விஞ்ஞான கருவிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். நீங்கள் ஒரு மரத்தின் அருகில் சென்று திட்டினால் அந்த மரம் உயிர் என்பதால் ஒரு வித உணர்வுகளை வெளிப்படுத்தும் அல்லவா? அதுவும் உங்களை நோக்கி ஏதோ சொல்ல முயலும் அல்லவா அதை உங்கள் மொழியில் மொழிபெயர்க்கும் கருவியைதான் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். நம்புங்கள் இது கண்டுபிடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இக்கருவியில் சினிமா தெரியாது, புகைப்படம் எடுக்க முடியாது மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப இயலாது என்பதால் புகழ்பெறவில்லை :)

தாவரத்தின் உணர்வுகள் உண்டு என கண்டறிந்த ஜகதீஷ் சந்திர போஸ் உலகலாவிய பெயரையோ, அறிவியல் உயர் பரிசுகளையோ பெறவில்லை என்பது வேடிக்கை. அவர் அறிவில்லாத இந்திய சமூகத்தில் பிறந்தவர் என்றார்கள் பிரிட்டீஷ்காரர்கள். அவரை பற்றி நீங்கள் பாடப்புத்தகத்தில் படித்தது மிகக்குறைவே. மேலும் படிக்க விருப்பம் இருந்தால் இங்கே சொடுக்கவும்.

சில மின்னனுக்கருவிகள் மூலம் தாவரத்தின் மின்காந்த அதிர்வுகளை மனித குரலாக மாற்றும் கருவியை ஜெர்மனிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். இந்த கருவியின் துணைகொண்டு தாவரங்கள் மனிதனுடன் உரையாடுகிறதாம். நானும் இதை நேரில் பார்த்தேன். ஜெர்மன் மொழியில் கேட்ட கேள்விகளுக்கு அதே மொழியிலும், தமிழில் நான் பேசியதற்கு தமிழிலும் உரையாடியது ஒரு செடி. ஒரு பாடலை பாடினால் கூட அதே போல சுருதி பிசகாமல் பாடிக்காட்டியதை பார்த்து வியந்தேன். இப்பொழுது கூறுங்கள் தாவரங்கள் மனிதனை காட்டிலும் அறிவு குறைந்ததா?

இவை எல்லாம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் செயல்பட்ட விஷயம். விஞ்ஞானத்தை கடந்த ஒரு விஷயமும் ஒன்று நடந்தது. மரத்திடம் பேசும் பயிற்சியை முன்பு செய்ய சொன்னேன் அல்லவா? அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது. உங்களுக்கு இது முட்டாள் தனமாகவும், மேலும் கொஞ்சம் அதிகமாகவும் தெரியலாம். நான் அனுபவப்பட்டதை கூறுகிறேன். மனிதனால் கூட அவ்வாறு ஒரு சிடியை பார்த்தவுடன் அதில் இருக்கும் தகவலை உணர முடியாது. வேறு வழியில்லை நான் நம்புகிறேன். நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

எதிர்காலத்தில் ஒரு அறையில் சில மணி நேரத்திற்கு முன் என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அங்கே இருந்த செடியை கேட்கும் நிலை வரும். தடயவியல் நிபுணர்கள் எதிர்காலத்தில் குற்றத்தை இவர்கள் மூலம் எளிதல் கண்டறியலாம்.

இது போன்ற வேத சாஸ்திர விஷயங்களை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து வேதகால மின்னனுவியல் (Vedic Electronics) என்ற ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வருகிறேன். முழுமையடைந்த நிலையில் இருக்கும் அந்த ஆய்வை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

இனிவரும் காலத்தில் தாவரங்களை பார்க்கும் பொழுது உங்களை விட ஆற்றல் குறைந்த பிறவியாக பார்ப்பீர்களா? இத்தனை மனிதர்கள் தாவரத்தை மதிக்காவிட்டாலும், தாவரம் என்றும் உங்களை தாயைவிட கருணையாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேவையான அளவு தாவரத்தை பற்றி பார்த்துவிட்டோம். இனி வேதகால வாழ்க்கையின் அடுத்த பாகமான பசுவை பற்றி பார்ப்போம்.

(.....வேதம் ஒலிக்கும்)

28 கருத்துக்கள்:

Anonymous said...

அருமையான விஷயங்கள் சுவாமி. இனி மரங்களை பார்த்தால் உட்கார்ந்து பேச ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறன்! பள்ளியில் இருக்கும் பொது, மதிய உணவு எப்பொழுதும் நாங்கள் மரத்தடியில் தான் சாப்பிடுவோம். மிகவும் ஆனந்தமாகவும், அந்த மதிய வேளை கூச்சலிலும் ஒரு தனி இன்பம் இருக்கும். அந்த மரங்கள் எல்லாம் எங்கள் பள்ளி கால அனுபவங்களை எங்களை விட நன்றாக ஞாபகம் வைத்திருக்கும் என்று நினைக்கிறன்.

யோகியின் சுயசரிதை புத்தகத்தில் ஜகதிஷ் சந்திர போஸ் பற்றி மிக விரிவாக எழுதியிருந்ததை படித்தேன். அவரின் ஆரய்சிபடி உலோகங்களும் உணரும் ஆற்றல் உண்டு என்பதை தெரிந்து கொண்டேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//அவரின் ஆரய்சிபடி உலோகங்களும் உணரும் ஆற்றல் உண்டு என்பதை தெரிந்து கொண்டேன் //

நான் பணிபுரிவது ஒரு இரும்பு உருக்கு நிறுவனத்தில்தான். என் அனுபவத்தில் சொல்கின்றேன், என்னை கிறுக்கு என்று நினைத்தாலும் பரவாயில்லை...உலோகங்களுக்கும் உணரும் ஆற்றல் உண்டு.

எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் அனைத்தும் அவனை பிரமிக்கும்படியே உள்ளது.

எம்.எம்.அப்துல்லா said...

//அவரின் ஆரய்சிபடி உலோகங்களும் உணரும் ஆற்றல் உண்டு என்பதை தெரிந்து கொண்டேன் //

நான் பணிபுரிவது ஒரு இரும்பு உருக்கு நிறுவனத்தில்தான். என் அனுபவத்தில் சொல்கின்றேன், என்னை கிறுக்கு என்று நினைத்தாலும் பரவாயில்லை...உலோகங்களுக்கும் உணரும் ஆற்றல் உண்டு.

எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் அனைத்தும் அவனை பிரமிக்கும்படியே உள்ளது.

ceylonstar said...

இந்த பதிவை படித்ததும் கண்ணீர் வந்தது சுவாமி. பல வருடங்கல்லக மரத்தின் கீழ் உள்ள மண்ணில் என் கவலை எல்லாம் எழிதி விட்டு வருவேன். I consider the big trees as universal mother.

Subbaraman said...

Arpudham, Swamiji..indha katturai vegamaga sendru kondirukiradhu..Nandri. Evvaru andha maram CD-yil ulla thagavalkalai ulvaangi kondathai arindeergal..Adhe pol neengal andha marathodu pesum karuviyai veithu irukireergala?

Sabarinathan Arthanari said...

பகவான் தூணிலும், துரும்பிலும், இரும்பிலும், உயிரிலும் இருக்கிறார்.

உண்மையில் பகவான்(உண்மை, சத்தியம், ப்ரம்மம், பரமாத்மா எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள்) வேறு நாம் வேறு அல்ல. நாம் அனைவரும் பரந்து விரிந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி என உணர்வோம். - அத்வைதம்

“எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

--ஜகதீஷ் சந்திர போஸ்

Food Safety Solutions said...

தாவரம் பிராணன், உணவுக்கு மட்டும் அல்ல, அது அதையும் தாண்டி அற்புதமானது என உணர்ந்து கொண்டேன், இனி மரத்தை பார்த்தால் என் மனதில் உள்ளதை சொல்லிவிடுவேன்.

Food Safety Solutions said...

சுவாமி
மரம் கந்தசாமியை பற்றி ஒரு தகவல் சுட்டி http://www.indusladies.com/forums/forward-messages-and-jokes/36391-a.html

sowri said...

பிரமாண்டம் மெல்ல விரிகிறதோ என்ற தோன்றுகிறது.

Self Realization said...
This comment has been removed by the author.
Self Realization said...

Man is a nature being...swamji you are connecting man with nature..It is important to understand that every thing is a part of nature...

every thing is immortal and has unbelievable powers...

when our mind understand absolute..the real enlightenment will be realized..

Thank you and wishing u for your research in vedic electronics...do your service for the best of all creatures..

சீனு said...

//அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது.//

சுவாமி. நிச்சயம் நான் நம்பபில்லை...

விஜய் said...

இப்போது நமது நாட்டில் கலப்பின பசுக்களே உள்ளது. சுபாஷ் பாலேக்கர் அவற்றை பசு வடிவில் இருக்கும் ஒரு விலங்கு என்றே கருதுகிறார். ஏனெனில் நமது பூர்வீக பசுக்களுக்கு திமில் உண்டு. அவை பிரபஞ்ச ஆற்றலை உள் இழுக்கும் சக்தி கொண்டது. பாரம்பரிய பசுக்களின் வயிற்றில் வயலுக்கு தேவையான அசோஸ்பைரில்லம், பாஸ்பொ பாக்டீரியா உரங்கள் கிடைக்கிறது.

விஜய்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ்பாபு,

உங்கள் கருத்து சரியே.ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களை உலகிற்கு வெளிச்சமிட்டவர்களில் முதன்மையானவர் பரமஹம்ச யோகாநந்தர் .

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

உங்களை பலர் கிறுக்கு என நினைக்க நினைக்க நீங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம் :)

இப்படிக்கு
தலைவர்
கிறுக்குகள் இருக்கு சங்கம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிலோன் ஸ்டார்,

உங்கள் உணர்வை புரிந்துகொள்ளும் நிலையில் இறைவன் என்னை வைத்திருக்கிறான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சபரிநாதன்,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மனோஹர்,

உங்கள் வருகைக்கும் அற்புதமான சுட்டிக்கும் நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

உங்கள் யூகம் சரியே.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு self realization,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சீனு,

//சுவாமி. நிச்சயம் நான் நம்பபில்லை...//

நானும் நம்பவில்லை. முதலில்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விஜய்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்புராமன்,

//Evvaru andha maram CD-yil ulla thagavalkalai ulvaangi kondathai arindeergal..Adhe pol neengal andha marathodu pesum karuviyai veithu irukireergala?//

அத்தகைய கருவி என்னிடம் இல்லை.
ஆனால் ஒரு மனிதனிடத்தில் நான் பேசுவதை காட்டிலும் மரங்களிடத்தில் ஆழமாக கலந்துரையாடும் ஆற்றல் இறைசக்தி எனக்கு வழங்கி உள்ளதாக நினைக்கிறேன்.

முயன்றால் அனைவருக்கும் சாத்தியமே.

Siva Sottallu said...

// சென்ற பகுதியில் நான் கூறியதை சிறிது சிந்தித்து பார்த்தால் மனிதன் கண்டறிந்த செல்போன் என்ற பொருள் இயற்கையாகவே இருப்பது புரியும். //

சிந்தித்து பார்த்தேன் ஸ்வாமி,
//அரச மரத்தின் அடியில் இப்பயிற்சியை செய்கிறீர்கள் என்றால் அதே அரசமரத்தின் அடியிலோ அல்லது வேறு அரச மரத்தின் அடியிலோ சென்றாலும் இது நடக்கும்.
//
இந்த வரியை படிக்கும் பொழுது, எனக்கு செல்போன் விளம்பரவரிகள் ஞாபகத்திக்கு வந்தது, "Airtel to Airtel outgoing Free".

உங்களின் "வேதகால மின்னனுவியல்" ஆய்விற்கு வாழ்த்துக்கள் ஸ்வாமி, விரைவில் அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்.

Siva Sottallu said...

ஒரு அருமையான சுட்டி இன்னைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி திரு. மனோகர் .

மரம் தங்கசாமி சொல்கிறார் "மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்."

ஸ்வாமி கூறியபடி சொன்னால் , மரம் தங்கசாமி ஒரு யோகி, அவர் வளர்க்கும் மரங்கள் கற்பக விருட்சம்.

ஷண்முகப்ரியன் said...

சரணங்கள்,ஸ்வாமிஜி.

மரங்கள் எப்படித் தங்களுக்குள் தகவலகளை அனுப்புகின்றன எனபதை ‘JURASSIC PARK' நாவலில் மைக்கேல் க்ரைட்டன் அற்புதமாக விவரித்திருப்பார்.நாவலின் சுவாரஸ்யத்தில் இந்தப் பேருண்மையைக் கோட்டை விட்டு விட்டேன்.

அதே போல் நீங்கள் எழுதுவதைப் படிக்கும் ஆர்வத்தில் எத்தனை உண்மைகளைத் தவற விடப் போகிறேனோ என்று அச்சமாக இருக்கிறது.

அப்பா டக்கர் அமீர்பர் said...

yo dubakoor

கோவி.கண்ணன் said...

//அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது.//

:)

நமீத நடித்த ஜெகன்மோகினி சிடியைக் கேட்கப் போகிறது மரம்.