உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.
------------------------------------------------------------- - திருமந்திரம் 84
வேதகால வாழ்க்கை என்று நான் ஆரம்பித்து விளக்க துவங்கியதும் பல்வேறு மின்னஞ்சல்கள். வேதம் என்றால் ‘இது’ என இவர் சொல்லி இருக்கிறார். ‘அது’ என அவர் சொல்லி இருக்கிறார் என பல விளக்கங்கள். ஒரு சிலர் நீங்கள் அந்த ஜாதியை சார்ந்தவரா? இப்பொழுது தான் உங்கள் சுயரூபம் தெரிந்தது என வசைகள்.
இவை இரண்டுக்கும் விளக்கம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. காரணம் இந்த இரண்டு நிலைகளையும் இல்லாத சுத்த பெருவெளியில் நான் நிற்கிறேன். அங்கே எனக்கு அடையாளம் இல்லை. உருவம் இல்லை. உணர்வுகள் கிடையவே கிடையாது. என்னுள் இயங்குவது என் விரல்களையும் இயக்குகிறது. கொஞ்சமேனும் என் பிரஞ்ஞை அது இயக்கி இருந்தால் உங்களை விடவும் அதிக கேள்விகள் கேட்பவனாக இருந்திருப்பேன். அதை தெரிந்து கொண்டே என்னை இயக்கமற்ற சிந்தனையற்ற ஒரு எழுதுபொருளாக்கி இருக்கிறது.
இயற்கையாக வாழுதல் என்பது அனைவரின் உள் உணர்விலும் ஏக்கமாக இருக்ககூடியது. சுத்தமற்ற உணவும், அசுத்தமான காற்றையும் சுவாசிக்கும் எவரும் தன் மனதால் சித்திக்காவிடினும் அவர்களின் உடலும் ஆன்மாவும் அத்தகைய வாழ்க்கைக்காக் தவம் இருக்கும் என்பது உண்மை.இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு முன்னால் இயற்கையை தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கை என்றால் என்ன என யாரையாவது கேட்டுப் பாருங்கள்.. உடனே மலை, கடல் அல்லது ஆறு இவையெல்லாம் இயற்கை என்பார்கள்.
உண்மையில் இவையெல்லாம் இயற்கை வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூழல்கள் மட்டுமே. இயற்கை என்பது உங்களை தவிர இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிர்கள் அனைத்துமே என்பதை உணருங்கள்.
உங்களை விடுத்து அனைத்து உயிர்களையும் இயற்கை என உணர்ந்து இப்பொழுது கடல், மலை மற்றும் ஆறுகளை பாருங்கள். அதில் பல உயிர்களின் வாழ்விடம் என உங்களுக்கு புரியும்.
உயிரினம் என்பது பறவைகள் மற்றும் விலங்களை மட்டும் குறிப்பிடவில்லை. தாவரங்களும் உயிர்கள் தானே? அவற்றையும் இணைத்தே கூறுகிறேன். கடல் மற்றும் மலை என எந்த இயற்கை சூழல் இருந்தாலும் அதில் தாவரமும் , விலங்கினங்களும் இருக்கும்.
அத்தகைய உயிரினங்கள் நமக்கு பல விதத்தில் நன்மையை கொடுக்கிறது என்பது தெரியாமலேயே நாம் அவற்றைவிட்டு தூரமாக வாழ்கிறோம். இதனால் நமக்கு வாழ்க்கை முழுமையற்ற நிலையில் இயங்குகிறது.
வேதகால வாழ்க்கை என்பது இயற்கை பகுதியுடன் உங்களை இணைத்து வாழ்வது. இயற்கை என்ற உயிர்பொருட்களுடன் நீங்கள் ஒன்றினைந்து வாழ்ந்தால் அவற்றின் மூலம் உங்களின் வாழ்வாதாரம் முழுமை பெறும்.
வேதம் என்றால் ஒரே பொருளின் அங்கம் பிரிந்து இருக்கும் தன்மையை வேதம் என்றேன் அல்லவா? அது போல தாவரம், மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தும் பிரிந்திருந்தாலும் உண்மையில் அனைத்தும் ஒரே வஸ்துவால் ஆனது என்பதை உணர்ந்து வாழ்தல் வேதகால வாழ்க்கை என்கிறேன்.
மனிதனின் வாழ்க்கை இயக்கம் ப்ராண சக்தியின் அடிப்படையில் அமைந்துள்ளது. பிரபஞ்ச சக்தி ப்ராண சக்தியாக மனித உடலுக்குள் நேரடியாக நுழைய முடியாது. மனிதனை தவிர பிற இயற்கை பொருட்கள் பிரபஞ்ச சக்தியை ப்ராண சக்தியாக மாற்றும் கேந்திரங்களாக செயல்படுகிறது.
உதாரணமாக தாவரங்கள் பிரபஞ்ச சக்தியை நேரடியாக ப்ராணனாக மாற்றும் கருவியாக இருக்கிறது. அதனால் தான் மனிதன் தாவரங்கள் இல்லாத பாலைவனத்திலும், பனிப்பிரதேசங்களிலும் அதிககாலம் வாழ முடியவில்லை.
முழுமையான ப்ராணனுடன் மனிதன் வாழ்ந்தால் அதனால் அவனும் சமூகமும் அடையும் பயன் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி முழுமையான ப்ராணனுடன் மனிதன் வாழ்ந்து இயற்கையுடன் ஒன்றிணைவதே வேதகால வாழ்க்கை முறை என கூறலாம்.
வேதகால வாழ்கை என்பதை செயல்படுத்த மூன்று இயற்கை பொருட்கள் தேவை. அவை தாவரம், பசு மற்றும் மனிதன். ஒவ்வொரு பகுதியையும் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

-------------

( ....வேதம் ஒலிக்கும்)
12 கருத்துக்கள்:
வணக்கம் ஸ்வாமி
பசுவைப்பறி நினைக்கையில் பசுவைப்பற்றிய பதிவு வருகிறது இது தற்செயலா அல்லது coincidence ஆ தெரியவில்லை.( இங்கே கனடாவில் பசுவளர்ப்பதை நினைக்கக்கூடமுடியாது)
தயவுசெய்து இந்த warning வருவதைத்த்டுக்க ஏதாவது செய்யுங்கள் ,ஒவ்வொருமுறையும் வந்து சிரமம் கொடுக்கிறது.
அதற்கானசுட்டி இங்கே
http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?site=http://vediceye.in/img/head.gif&client=googlechrome&hl=en-US
திரு கே.எஸ்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டதை பார்த்தேன். என் கணினியில் அப்படி வருவதில்லை. நீங்களோ அல்லது யாரேனும் கணினி கற்ற ஜித்தர்களோ இதற்கு உதவினால் மகிழ்வேன்.
உங்களை போல ஞாநிகளுக்கே விளங்காத விஷயம் எப்படி சாதரண மனிதர்களுக்கு தெரியும்?
உள்ளத்தின் அடி ஆழம் வரை ஊடுருவும் விளக்கங்கள்.
சரணம்,ஸ்வாமிஜி.
//தாவரம், மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தும் பிரிந்திருந்தாலும் உண்மையில் அனைத்தும் ஒரே வஸ்துவால் ஆனது என்பதை உணர்ந்து வாழ்தல் வேதகால வாழ்க்கை என்கிறேன்.//
பாயிண்டு....
ஸ்வாமி, தங்களிடம் எவ்வாறு ஜோதிடம் கற்றுக் கொள்வது? நன்றி.
'ஏட்டினிலே கை, எண்ணம் அகண்டாகாரம், இயற்கை ரகசியம் மலர்ந்து, எழுத்தாய் மாறும்
----வேதாத்திரி மகரிஷி'
இடுகையை படித்தவுடன் நினைவுக்கு வந்தது.!!
மகிழ்ச்சி அடைகிறேன் ..
திரு KS,
Looks like you are coming from http://VedicEye.in , I am not sure if Swamy has it registered and have redirected from there. I would recommend you can using the below link to visit this site.
http://VedicEye.blogspot.com
This should not give you any such warning. Hope this helps.
Have a wonderful day!
படிக்க படிக்க இன்னும் நிறைய படிக்கணும் போல் உள்ளது ஸ்வாமி. மிக்க நன்றி.
ஸ்வாமி, பிரபஞ்சமும் பிரணவமும் இரண்டும் ஒன்ற ஸ்வாமி?
கேந்திரம் என்றால் என்ன ஸ்வாமி? இயந்திரம் என்று எடுதுகொள்ளலமா?
Romba Thelivana Vilakkam Swamiji. Nandri.
//இயற்கை என்பது உங்களை தவிர இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிர்கள் அனைத்துமே என்பதை உணருங்கள். //
தன்னைத்தவிர்த்து மத்தது இயற்கைன்னா சொல்ல வரீங்க? சொல் தொடர் சரியா வரலையோ?
திரு திவா,
//தன்னைத்தவிர்த்து மத்தது இயற்கைன்னா சொல்ல வரீங்க? சொல் தொடர் சரியா வரலையோ?//
மனிதன் தன்னை எதிலும் ஐக்கியபடுத்தி கொண்டதில்லை. தன் உடல், ஆன்மா இவை இயற்கையானது என என்றும் நினைப்பதில்லை. இதற்கு அவனின் ஆணவம் காரணமாக இருக்கிறது.
உயிர்கள் அனைத்தும் இயற்கை. பிற உயிர்களை பார்ப்பவன் தன்னை அதில் அடையாளபடுத்துவதில்லை. அதனால் அப்படி எழுதி உள்ளேன்.
Post a Comment