Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 20, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 2

வானில் ஒளிவிடும் சூரியனுக்கு தெரியாது
தன் பெயர் சூரியன் என்று...


மனித மனம் விசித்திரமானது. தனக்கு தெரிந்த விஷயங்களை எப்பொழுதும் ஒரு பெயருடனோ, சம்பவத்துடனோ தொடர்புபடுத்திக்கொள்ளும். அப்பொழுது தான் அது நினைவு அறையில் இருக்கும் என்பது விதி. பிரபஞ்சம் தோன்றியது முதல் ஒரு ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மனிதர்கள் வகைபடுத்தி வேதம் என பெயர் சூட்டி உள்ளனர். வேதத்திற்கு பொருளோ, பெயரோ கிடையாது.


பிரபஞ்சத்தில் இருந்து ஏற்படும் ஒலியானது இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் இல்லாவிடினும் ஒலிக்கும். அதற்கு பிரணவம் என்றும் ஓம்கார ஒலி என்றும் பல பெயர்கள் சூட்டினாலும் அதனால் அதன் செயல் மாறுபடாது. அத்தகைய பிரபஞ்ச ஒலி ப்ரணவமாக செயல்படும் பொழுது ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் நமக்கு பல்வேறு வகையான ஓசையாக கேட்கிறது.

இந்த பல்வேறு ஓசையை / ஒலி நயத்தை வகைப்படுத்தி வேதம் என்கிறார்கள். வேத வியாசர் வேதத்தை நான்கு பிரிவுகளாக பிரித்தார் என்றும் அவர் இன்ன காலத்தில் வாழ்ந்தார் என்றும் வகைப்படுத்துவது அனைத்தும் மேலைநாட்டினரின் ஆய்வு மூலம் தான். மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மனியரின் கருத்து அதிகமாக இவ்விஷயங்களில் பயன்படுத்துகிறார்கள்.

ரேடியோ அலை எங்கும் நிரம்பி இருக்கிறது ஆனால் அது நம் உணர்வு உறுப்புக்களுக்கு புலப்படுவதில்லை. ரேடியோ அலையை உணரும் கருவியை கொண்டு அலைகளை பெற்று பல விஷயங்களை செய்யலாம்.

மார்க்கோனி என்பவர் கண்டுபிடிப்பதற்கு முன்னும் ரேடியோ அலைகள் இருந்தது. ஆனால் அதற்கு ரேடியோ அலைகள் என பெயர் சூட்டப்படவில்லை. அதுபோல வேதத்திற்கு நாம் வேதம் என பெயர்சூட்டியதோ , பிரித்ததோ தெரியாது. அது பிரபஞ்சத்திற்காக வேலையில் என்றும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

வேதம் என்ற அலைகளை உணரும் ரோடியோக்களாகவே ரிஷிகள் இருந்தார்கள். தொகுக்கபட்ட வேத ஒலிகளை கவனித்தால் இன்ன ஒலியை இந்த ரிஷியின் பெயரால் என தொகுத்தார் வியாசர். எளிமையாக சொல்ல வேண்டுமானால் பண்பலை ரேடியோவை உதாரணமாக கொண்டால் பாடல்கள் இன்ன ரேடியோவில் இன்ன அதிர்வெண்னில் ஒலிபரப்பபட்டது என கூறுவது போல வேத ஒலிகள் வகைப்படுத்தப்பட்டது.

வேதம் என்றும் ஒலித்துக்கொண்டே இருப்பதால் இதை புத்தகமாக அச்சிட அவசியம் இல்லை. நம்மை அந்த அதிர்வலைக்கு தயாராக்கினால் யார் வேண்டுமானாலும் அவ்வொலியை உணரலாம்.

சில தர்க்கவாதிகளால் வேதம் என்பது குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவும், அரசியல் காரணங்களால் ஜாதீய அடிப்படையிலும் பார்க்கப்படுகிறது.

வேதம் என்பது இயற்கையின் வெளிப்பாடு. அதனால் இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது போல வேதம் ஒரு சமூகத்தின் அடையாளம் அல்ல. இக்கருத்தை திருமூலரின் வார்த்தையில் கேட்போம்.

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே
.
-----------------------------------------------------------------திருமந்திரம் 52.

நம் தொடரின் நோக்கம் வேதத்தை பற்றி தெரிந்து கொள்வது அல்ல. வேத முறையில் வாழ்வது என்பதே.

வேதம் என்பது இயற்கையான ஒரு ஆற்றல் என்றேன். அந்த வேதத்தின் வழியே வாழ்தல் என்றால் இயற்கையின் வழியே வாழ்வது என்பதாகும்.

இயற்கையாக வாழ்ந்தால் மட்டுமே பிரபஞ்ச ஒலியான வேதத்தை உணரவும் அதன் ஆற்றலை புரிந்துகொள்ளவும் முடியும்.

தற்சமயம் நாம் வாழும் வாழ்க்கை முறையானது இயற்கைக்கும் நமக்கும் இடையே கோடிக்கனக்கான கிலோமீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. நாம் இயற்கை வழியில் வாழும் முறையான வேதகால வாழ்க்கையை தெரிந்து கொண்டோமானால் இந்த இடைவெளியை ஒரு ஷணத்தில் கடந்துவிடலாம்.

முன்விளக்கமே நீண்டு விட்டது. இன்னும் நான் வேதகால வாழ்க்கை என்பதை பற்றி கூறவில்லை...

(வேதம் ஒலிக்கும்....)

22 கருத்துக்கள்:

எறும்பு said...

//முன்விளக்கமே நீண்டு விட்டது. இன்னும் நான் வேதகால வாழ்க்கை என்பதை பற்றி கூறவில்லை//

ஒன்னும் அவசரமே இல்லை... ஆற அமர மெதுவா ருசி பார்க்கலாம்

Rajagopal.S.M said...

//நம்மை அந்த அதிர்வலைக்கு தயாராக்கினால் யார் வேண்டுமானாலும் அவ்வொலியை உணரலாம்//
இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அந்த ப்ரீக்வன்சிகு tune பண்றது அவ்ளவு சுலபமில்லையே சுவாமிஜி...

Rajagopal.S.M said...

Swamiji - I have copied an intersting article (OM - Earth is humming) which i received through mail long back.

==
Earth gives off a relentless hum of countless notes completely
imperceptible to the human ear, like a giant, exceptionally quiet
symphony, but the origin of this sound remains a mystery.
Now unexpected powerful tunes have been discovered in this hum.
These new findings could shed light on the source of this enigma.
The planet emanates a constant rumble far below the limits of human
hearing, even when the ground isn't shaking from an earthquake. (It
does not cause the ringing in the ear linked with tinnitus.) This
sound, first discovered a decade ago, is one that only scientific
instruments - seismometers - can detect. Researchers call it Earth's
hum.
Investigators suspect this murmur could originate from the churning
ocean, or perhaps the roiling atmosphere. To find out more,
scientists analyzed readings from an exceptionally quiet Earth-
listening research station at the Black Forest Observatory in
Germany, with supporting data from Japan and China.
Different types
In the past, the oscillations that researchers found made up this
hum were "spheroidal" - they basically involved patches of rock
moving up and down, albeit near undetectably.
Now oscillations have been discovered making up the hum that, oddly,
are shaped roughly like rings. Imagine, if you will, rumbles that
twist in circles in rock across the upper echelons of the planet,
almost like dozens of lazy hurricanes.
Scientists had actually expected to find these kinds of
oscillations, but these new ring-like waves are surprisingly about
as powerful as the spheroidal ones are. The expectation was they
would be relatively insignificant.
New thinking
This discovery should force researchers to significantly rethink
what causes Earth's hum. While the spheroidal oscillations might be
caused by forces squeezing down on the planet - say, pressure from
ocean or atmospheric waves - the twisting ring-like phenomena might
be caused by forces shearing across the world's surface, from the
oceans, atmosphere or possibly even the sun.
Future investigations of this part of the hum will prove
challenging, as "this is a very small signal that is hard to
measure, and the excitation is probably due to multiple interactions
in a complex system," said researcher Rudolf Widmer-Schnidrig, a
geoscientist at the University of Stuttgart, Germany.
Still, a better understanding of this sound will shed light on how
the land, sea and air all interact, he added.
Researcher Dieter Kurrle and Widmer-Schnidrig detailed their
findings March 20 in the journal Geophysical Research Letters.
==

AUM SHANTI: SHANTI: SHANTI:

Rajagopal.S.M said...

//நாம் இயற்கை வழியில் வாழும் முறையான வேதகால வாழ்க்கையை தெரிந்து கொண்டோமானால் .//
நீங்க சொல்ல வரது எனன்னா.. நாங்கெல்லாம் வேதத்தின் கண்மணியா இருக்கிறோம் ஆனா கண்ண திறந்து பாக்க மாட்டேன்கிறோம்... அதானே ...

ஷண்முகப்ரியன் said...

ஒரே ஒரு ஐயம்,ஸ்வாமிஜி.

காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.
எனில் நீங்கள் சொல்லும் ’பிரணவ ஒலி’ நாம் கேட்கும் ஒலியிலிருந்து வேறு பட்டதா?
அதனால்தான் அதனை ‘நாதம்’ என்று கூறுகிறார்களா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு எறும்பு,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

//இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அந்த ப்ரீக்வன்சிகு tune பண்றது அவ்ளவு சுலபமில்லையே சுவாமிஜி...//


உங்கள் கண்களால் உங்களையே பார்த்துக்கொள்ள முடியுமா? என்றால் முடியாது. ஆனால் கண்ணாடி முன் சென்றால் முடியும்.

அது போல கண்ணாடியாக ஒரு குரு இருந்தால் அனைத்தும் ஈஸி. :)
அதாவது He see...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

//இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அந்த ப்ரீக்வன்சிகு tune பண்றது அவ்ளவு சுலபமில்லையே சுவாமிஜி...//


உங்கள் கண்களால் உங்களையே பார்த்துக்கொள்ள முடியுமா? என்றால் முடியாது. ஆனால் கண்ணாடி முன் சென்றால் முடியும்.

அது போல கண்ணாடியாக ஒரு குரு இருந்தால் அனைத்தும் ஈஸி. :)
அதாவது He see...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,
//Swamiji - I have copied an intersting article (OM - Earth is humming) which i received through mail long back//

உங்கள் கருத்துமிக்க கட்டுரைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியான்,
//காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.
எனில் நீங்கள் சொல்லும் ’பிரணவ ஒலி’ நாம் கேட்கும் ஒலியிலிருந்து வேறு பட்டதா?
அதனால்தான் அதனை ‘நாதம்’ என்று கூறுகிறார்களா?//

ஆங்கிலத்தில் Crux என சொல்லுவார்கள்.அது போன்ற புள்ளியில் கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.

காற்று என்ற ஊடகம் ஒலியை பரவச்செய்ய தேவை. ஆனால் இந்த பிரபஞ்ச ஒலி என்பது ஆற்றல் பயணிப்பதால் ஏற்படுவது.

அதிக வேகத்துடன் நெருப்பு எரியும் பொழுது ஒரு சப்தம் ஏற்படுமல்லவா? அது ஓரளவு இதற்கு உதாரணமாக அமையும்.

ப்ரணவ ஒலியானது நம் புலன் உறுப்பான காதுகளால் கேட்க கூடியது அல்ல. அறிவியல் கூறுவது போல சில அதிவெண் மட்டுமே நம்மால் கேட்கமுடியும்.

நம் உடலின் உள்ளே ப்ரணவம் உண்டு. உள்ளும் வெளியும் ஒரே அதிவெண் ஏற்படுவது தியானம். அத்துடன் ஐக்கியமாவது சமாதி.

ஒரு ஒலியானது இடைவிடாது கேட்டால் அதற்கு நாதம் என பெயர்.
இடைவிடாது ஓசை எழுப்புவதால் ஒரு இசைக்கருவிக்கு நாதஸ்வரம் என பெயர்.

Siva Sottallu said...

// முன்விளக்கமே நீண்டு விட்டது. //

அடிப்படை தெளிவாக தெரிந்துகொள்வது ரொம்ப நல்லது தானே ஸ்வாமி. அவசரமில்லை மெதுவாக செல்லலாம்.

வேதகால வாழ்க்கை பற்றி அறிய நாம் கொடுத்துவைதுருக்க வேண்டும். மிக்க நன்றி ஸ்வாமி.

ஸ்வாமி, பிரபஞ்சமும் பிரணவமும் ஒன்றா? பிரணவம் என்றால் என்ன ஸ்வாமி?

// பிரபஞ்ச ஒலி ப்ரணவமாக செயல்படும் பொழுது //

இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி.

yrskbalu said...

pl finally convey your conclusion or your view clearly. so that other readers can understand easily.

like joe readers will understand better .i expect joe will ask or clarify at end.

Anonymous said...

சுவாமி, அருமையான தொடராக இருக்கும் என்று நம்புகிறேன் நான். வேதங்களை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன், அதை இப்படி அழ்ந்த உண்மை கருத்துடன் தெரியவிருக்க போவதை நான் நினைத்து பார்க்கவில்லை. தொடரை ஆவலுடன் எதிர்பார்கிறேன்!

Mahesh said...

நல்லாத்தான் போகுது.... தொடருங்கள்...

//அதிக வேகத்துடன் நெருப்பு எரியும் பொழுது ஒரு சப்தம் ஏற்படுமல்லவா? அது ஓரளவு இதற்கு உதாரணமாக அமையும்.//

அதுவும் காற்றுனாலதானே !!!

Subbaraman said...

Thanks, Swamiji. Nice article.

கபிலன் said...

அருமை...தொடருங்கள்...
ரொம்ப புதுசா இருக்கு...உங்களுடைய விளக்கங்கள்...
இந்த விஷயங்களெல்லாம் எந்த நூலில் சொல்லி இருக்காங்க......ஸ்வாமி?

sarul said...

//காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.//

மேற்கூறப்பட்ட கருத்து பெளதிக அடிப்படையில் தவறானது.காதினால் கேட்கப்படக்கூடியஒலியின் அதிர்வெண் 20 hz to 20000hz வரை,இது திரவம் திண்மம் போன்றஎதிலும் பரவலாம் ,கேடகப்படலாம்.
தண்ணீருக்குள் கடலில் ஒலியைக் கேட்டே நீர்மூழ்கியின் நடமாட்டத்தை அவதானிக்கிறார்கள்.
மனிதக் காதில்கூட புறச்செவி மட்டுமே காற்றில் தங்கியுள்ளது. அதைக்கூட பிரதியிடமுடியும் ,சாதாரண ஆய்வுகூடப்பரிசோதனை மூலம் bypass செய்யமுடியும். ( grade 10 physics படித்த மாணவர்களிடம் கேட்டுப்பாருங்கள் )
intracranial implant மூலம் காதுகேட்கும் தன்மை சீர்செய்யப்படும்போது மேற்கூறிய தத்துவமே பயன்படுகிறது.

ஸ்வாமியின் புதியதொடருக்கு என் நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//அதுவும் காற்றுனாலதானே !!!//

ஒரு சக்தியின் அசைவில் ஏற்படும் ஒலி என்பதற்காக சொன்ன உதாரணம். அந்த வரிகளிலும் ஓரளவு என கூறிவிட்டேனே.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கபிலன்,

//இந்த விஷயங்களெல்லாம் எந்த நூலில் சொல்லி இருக்காங்க......ஸ்வாமி?//

அப்படி நூல்கள் இருந்தால் பதிவில் குறிப்பிட்டுவிடுவேனே.. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே எஸ்,

//.காதினால் கேட்கப்படக்கூடியஒலியின் அதிர்வெண் 20 hz to 20000hz வரை,இது திரவம் திண்மம் போன்றஎதிலும் பரவலாம் //

திரு ஷண்முகப்ரியன் அவர்களுக்கு கூறிய பதிலில் இதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஒலி பரவ ஊடகம் தேவை என்கிறது அறிவியல்.காற்று என்பது வெளி நிலையில் இருக்கும் ஊடகம்.

பிரபஞ்ச ஒலி என நான் குறிப்பிடுவதற்கு ஊடகம் தேவை இல்லை. ஊடகம் இருந்தால் அதிக செறிவுடன் இருக்கும் என்பதே என் கூற்று.

உங்கள் வருகைக்கு நன்றி.

sarul said...

வணக்கம் ஸ்வாமிஜி

உங்களின் தளத்திற்கு வரும்போது இந்த எச்சரிக்கை வருகிறது ,ஏனென்று தெரியவில்லை,.தயவுசெய்து யாராவது உதவுங்கள் .இது தொடர்பான screen shot ஸ்வாமியின் ஈ மெயிலுக்கு அனுப்பியுள்ளேன்.

//Safe Browsing
Diagnostic page for vediceye.in

What is the current listing status for vediceye.in?
Site is listed as suspicious - visiting this web site may harm your computer.

Part of this site was listed for suspicious activity 1 time(s) over the past 90 days.

What happened when Google visited this site?
Of the 1 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-10-14, and the last time suspicious content was found on this site was on 2009-10-14.
Malicious software is hosted on 1 domain(s), including t-age.ru/.

This site was hosted on 2 network(s) including AS36351 (SOFTLAYER), AS13601 (INNERHOST).//

நன்றி.

sarul said...

ஸ்வாமி
முதலில் குறிப்பிட்ட எச்சரிக்கை சம்பந்தமான சுட்டி இதோ
http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?site=http://vediceye.in/img/head.gif&client=googlechrome&hl=en-US