Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, October 9, 2009

ஆன்மீகவாதியின் டாப் 15 லட்சணங்கள்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

6) ஆன்மீக வாழ்க்கை என்பது அனைவராலும் திடீரென பின்பற்றக்கூடிய விஷயமல்ல. அதனால் ஆன்மீக வாழ்க்கையின் பிறப்பிலேயே கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். இவர்களின் தாய் -தந்தையர் தெய்வீக குணம் கொண்ட பக்திமானாக இருப்பார்கள். அதன் பயணாக இவர் பிறந்திருப்பார். பிறக்கும் பொழுதும் சிறுவயதிலும் அனேக அதிசயங்கள் இவரை சுற்றி நடந்திருக்கும்.

7) தான் ஞானம் அடைந்த விஷயம் மற்றும் ஆன்மீக உயர்வு கொண்ட சம்பவத்தை கேட்கும் பொழுது மிக உணர்ச்சி பெருக்குடன் விளக்குவார். எப்படி ஆன்மீகத்திற்குள் வந்தார், இவரின் குரு யார் போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிப்பார். ஆன்மீகவாதி என்பவர் ஒரு திறந்த புத்தகம் என்பதால் அவருக்கு எந்த ரகசியமும் கிடையாது. அனேக ஆன்மீகவாதிகள் சுயசரிதை எழுதுவார்கள். அதில் அவர்களின் வாழ்க்கையில் எப்படி அதிசயம் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படையாக இருக்கும்.

8) பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் அல்லது திருமந்திரம் போன்ற ஏதோ ஒரு நூலை பின்பற்றியே அவரின் ஆன்மீக வாழ்க்கை இருக்கும். எந்த நூலை அவர் பின்பற்றுகிறார் என தெரிந்து கொண்டால் அவரின் ஆன்மீக வாழ்க்கை எப்படிபட்டது என எளிமையாக கணிக்கலாம். ஆன்மீகவாதி பேசும் பொழுது கூட இடை இடையே புனித நூலின் மேற்கொள்காட்டி பேசுவார்.

9) கைகளால் பணத்தை தொடுவது ஆன்மீகவாதியின் குணம் அல்ல. பணத்தை சேமிக்கவும் மாட்டார். மக்கள் பால் பழம், உடை கொடுத்திவிடுவதால் இவருக்கு தேவைகள் இருக்காது.

10) ஆன்மீகவாதிகளின் பெயர்கள் ஸ்வாமி, யோகி, மஹான், சத்குரு, ஸரஸ்வதி, பரமஹம்சர் போன்று அமையும். இப்பெயர்கள் அவர்களே வைத்துக் கொள்ளக்கூடாது. இமயமலையில் சில ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு பெயரை வழங்குவார்கள் அல்லது பெரிய மடாலயத்தில் தீட்சை வாங்கும் பொழுது இந்த பெயர்சூட்டும் வைபவம் நடக்கும்.

11) இவர்கள் திருமணம் ஆனவர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி திருமணம் செய்திருந்தாலும் குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பார்கள். மணவாழ்க்கை என்பது ஆன்மீகத்திற்கு தடை என்பதால் தனித்து இருப்பார்கள்.

12) தினமும் நித்திய பூஜை செய்வார்கள். அவர்கள் எங்கு பயணித்தாலும் அவர்களுடன் விக்ரஹங்கள் எடுத்து சென்று பூஜை தொடர்வார்கள்.

13) நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.

14) எங்கும் நிரந்தரமாக தங்காமல் சஞ்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் பக்தர்கள் கோரிக்கைக்கு இணங்க வெளிநாடு பயணம் செய்வார்கள். தர்மத்தை பிறநாடுகளில் பரப்புவது இவர்களின் கடமை. கடல் மேல் பயணிப்பது தர்மத்திற்கு எதிரானது என்றாலும் ஆன்மீக விஷயத்திற்காக அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

15) தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே அனேகமாக இருக்கமாட்டார்கள். ஒரு ஊரில் பிறந்து , வேறு ஊர்களில் சஞ்சரித்து, மற்றொரு ஊரில் ஆசிரமம் அமைத்து இருப்பார்கள். இதனால் தன் குடும்ப உறுப்பினர்களை விலக்கியே வைத்திருப்பார்கள். ஊரில் மேலும் உறவின் மேலும் பற்று இருக்க கூடாது என்பது இச்செயலின் உள்ளர்த்தம்.


கொஞ்சம் பெரிய டிஸ்கி :

இது எல்லாம் ஆன்மீகவாதியின் அடையாளம் என மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புகள். மேற்கண்ட 15 விஷயங்களில் ஒன்றாவது நீங்கள் ஆன்மீகவாதியிடம் எதிர்பார்த்திருப்பீர்கள்.

ஆன்மீகவாதியை ஒரு சட்டதிட்டத்தில் அடக்க அவர்கள் செயற்கையான இயந்திரங்கள் அல்ல. ஆன்மீகவாதிகள்
இயற்கையான மலை, காட்டாறு போன்றவர்கள். இலக்கணத்தில் அவர்களை அடைக்க அவர்கள் ஒரு கலாச்சார சார்பு கொண்ட மொழி அல்ல. அவர்கள் அனைத்து கலாச்சாரத்தையும் தாண்டியவர்கள்.

மேற்கண்ட விஷயங்களை மக்கள் விரும்புகிறார்கள் என தெரிந்துகொண்டு சிலர் போலியாக இந்த வேடம் அணிந்து உலா வருவார்கள். அவர்களிடம் இந்த விஷயங்களை கண்டு மக்களும் மயங்கி தங்கள் அறியாமையால் வீழ்வார்கள். இந்த டாப் 15 விஷயங்களால் எத்தகைய முட்டாள்தனமும் மோசடியான விஷயங்கள் சமூகத்தில் நடந்திருக்கிறது என நாளை பட்டியலிடுகிறேன்.

நான் பல ஆன்மீகவாதிகளுடன் பழக்கம் உள்ளவன். அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

40 கருத்துக்கள்:

*இயற்கை ராஜி* said...

//"ஆன்மீகவாதிகள் இயற்கையான மலை, காட்டாறு போன்றவர்கள்."//

:-)

Unknown said...

ஆன்மீக வாதின்னா எனக்கு தெரிஞ்சு அது ஓம்கார் தான். வேற யார் இதுக்கு வர முடியும்

ஷண்முகப்ரியன் said...

எப்படி இருக்கக் கூடாது என்பதை சஸ்பென்ஸாகக் கூறி டிஸ்கியில் ட்விஸ்ட் அடித்து இண்டர்வெல் கார்ட் போட்டிருக்கிறீர்களே,ஸ்வாமிஜி!

நேற்று வியாசர்-ஜெயமினி சீனில் கவர்ச்சிக் காட்சிக்கான அனைத்து பொடன்ஷியலும் வைத்திருந்தீர்கள்.

பூர்வ ஜெனம்த்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராக இருந்திருப்பீர்களோ என்ற எனது ஐயம் வலுப்பட்டுக் கொண்டே வருகிறது.

Raju said...

//நான் பல ஆன்மீகவாதிகளுடன் பழக்கம் உள்ளவன். அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.//

Yes, please!

yrskbalu said...

பூர்வ ஜெனம்த்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராக இருந்திருப்பீர்களோ ?

YES . SAME THING I PREVIOUSLY THINKED

BUT I FEELED YOU MAY GOOD WRITER IN

YOUR PREVIOUS BIRTHS.

Jawahar said...

நிச்சயமாக எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். எனக்கு ஒரு இடுகைக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்தது இந்த ஆர்டிக்கிள். அதற்கு நன்றி.

http://kgjawarlal.wordpress.com

supersubra said...

Eagerly waiting

Self Realization said...

surely i need to know how a good saint should be.Please post for me...

மதி said...

>>>>உங்களுக்கு தெரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.<<<<


விருப்பம் உண்டு, கூறுங்களேன்

ஆண்மை குறையேல்.... said...

அகோரிக‌ள் ப‌ற்றி ஒரு தொகுப்பு எழுதினால் ம‌கிழ்ச்சி....
நீங்க‌ள் ச‌ந்தித்து இருக்கிறீர்க‌ளா?
புராண‌ கால‌ அகோரிக‌ள் யார் யார்?

நிகழ்காலத்தில்... said...

பதிவு அருமைங்க...

இன்னிக்கு வீட்ல சின்ன ஒரசலுங்க..

பின்ன என்னங்க., எப்பவும் வைக்கிற எவர்சில்வர் பாத்திரத்தில் சாம்பார் வைக்கிறத விட்டுட்டு மண்சட்டியில சாம்பார் வச்சு என் மானத்த வாங்கறாங்க..

ஏன்னு கேட்டா,சட்டிய ஏன் பார்க்கிற..
சாம்பார் ருசி எப்படினு பாரு அப்படிங்கிறாங்க்க..

என்னமோ போங்க..

நீங்க தொடர்ந்து எழுதுங்க..

--புரியாத பொன்னுச்சாமி

எம்.எம்.அப்துல்லா said...

//
ஆண்மை குறையேல்.... said...
அகோரிக‌ள் ப‌ற்றி ஒரு தொகுப்பு எழுதினால் ம‌கிழ்ச்சி....
நீங்க‌ள் ச‌ந்தித்து இருக்கிறீர்க‌ளா?
புராண‌ கால‌ அகோரிக‌ள் யார் யார்?

//

அதெல்லாம் சாமி முன்னாடியே எழுதிருச்சு. இந்த சுட்டில போய் பாருங்க


http://vediceye.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)))

//மணவாழ்க்கை என்பது ஆன்மீகத்திற்கு தடை என்பதால்//

:)))

//அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன்//

சொல்லுங்க ஸ்வாமி! கேட்டுக்கறோம்!
ஆனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்ற கணக்குகளை விட்டுட்டு....
* நாம எப்படி இருக்கணும்?
* ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம், நாம எப்படி இருக்கணும்
என்பதை மக்கள் யோசிச்சாலே போதும்! ஆன்மீகம் பொழைச்சிக்கும்! :)

ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம், நாம எப்படி இருக்கணும் என்பதை ஒரு நாள், அனைவரும் பயன் பெறுமாறு சொல்லுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதோ, போலி குருக்களை அடையாளம் காண முடியுமா? என்று முன்பு ஆசார்ய ஹிருதயத்தில் இட்ட பதிவு!

அதில் இருந்து சில துளிகள்...

சான்றோர்களை அடையாளம் காண்பது தான் அரிது! போலிகளை வெகு எளிதில் கண்டு கொள்ளாலாமே!
தங்களைக் குரு என்று கூறிக் கொள்ளும் போலி குருமார்கள், முக்கியமாக அடக்கமின்றி இருப்பார்கள்! மந்திரங்களிலும், தந்திரங்களிலும் ஆற்றல் படைத்தவர்களாக அவர்கள் இருக்கலாம்! ஆனால் இறை உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள்! மெய்ப்பொருளை ஆய்ந்து இருக்க மாட்டார்கள்!

வேதங்களின் உண்மைகளை உணர்ந்து சிக்கலின்றி பிறருக்கு உணர்த்தும் வல்லமை அவர்களுக்கு அருளப் பெற்றிருக்காது!!

இறைவன் திருநாமத்துக்கு உருகாத உள்ளத்தை எளிதில் கண்டு விடலாம்! காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவர்களால் முடியாது! அது ஒன்றே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்!

உன்னால் அவர்கள் நாடகத்தைக் காண முடியவில்லை என்றால், உன் தேடல் குருவை நோக்கி அல்ல! வேறு ஏதோ தன்னலமான ஒன்றை நோக்கி! அவ்வளவு தான்! :)

Thirumal said...

உள்ளேன் ஐயா........

Siva Sottallu said...

நன்றி ஸ்வாமி.

// ஆன்மீகவாதியை ஒரு சட்டதிட்டத்தில் அடக்க அவர்கள் செயற்கையான இயந்திரங்கள் அல்ல. //

// அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன். //

மாறுபட்ட கருத்து போல் இருக்கிறது ஸ்வாமி. ஒரு சட்டதிட்டத்தில் அடக்க முடியாது என்கிறிர்கள் மேலும் எப்படி இருப்பார்கள் என்று கூறுகின்றேன் என்கிறிர்கள்.

எப்படி இருக்க மாட்டர்கள் என்று கூறினால் ஒருவேளை என்போற்றவர்களுக்கு அடையாளமும் காண உதவியை இருக்கும் என்றி கருதுகின்றேன்.

நான் முன்பு ஒருமுறை உங்களிடம் கேட்ட கேள்வி, தலைபிற்கு சேராத காரணத்தினால் நீங்கள் விடை கொடுக்கவில்லை என்று நினைக்கின்றேன். அதை இந்த தலைப்பு சரியாக இருக்கும் என்று நினைத்து கேட்கின்றேன் ஸ்வாமி.

1. ஆன்மீகத்திற்கும் காவி வண்ணத்திற்கும் என்ன சம்பந்தம். ஏன் காவி வண்ண உடைகலையே பெரும்பாலானோர் உடுத்துகின்றனர்?

2. பெரும்பாலான ஆன்மீக குருமார்கள் நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும் இருக்க தங்கள் சீடர்கள் மட்டும் ஏன் முகசவரம் செய்து தலை மொட்டை செய்தும் உள்ளனர்?

இந்தமுறை உங்கள் பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன் ஸ்வாமி.

வால்பையன் said...

//கடல் மேல் பயணிப்பது தர்மத்திற்கு எதிரானது என்றாலும் ஆன்மீக விஷயத்திற்காக அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.//

இதில் கொஞ்சம் முரண் படுகிறேன்!

ஆன்மீகவாதிகள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறார்கள், அப்போதெல்லாம் வான் வழி பயணத்துக்கு வழியில்லை! தீடிரென்று முளைத்த போது அதன் மேல் உள்ள அச்சத்தால் அப்படி சொல்லி கொள்வார்கள் என நினைக்கிறேன்!

ஆன்மீகவாதிகளே தரையில் கால் ஊனாமல் இருப்பவர்கள் தானே! வான் வழி பயணம் எவ்வாறு தவறாகும்!?

வால்பையன் said...

// jaisankar jaganathan said...

ஆன்மீக வாதின்னா எனக்கு தெரிஞ்சு அது ஓம்கார் தான். வேற யார் இதுக்கு வர முடியும்//

பக்தர்ன்னா நீங்க ஒருத்தர் தான்!
வேறு யார் அதுக்கு வரமுடியும்!

Anonymous said...

அருமை சுவாமி! உண்மையை கூறி எங்கள் மனத்திரையை விலகுங்கள். இயற்கையை தனியாக பார்பவர்களுக்கு இயற்கை சட்டம் உண்டு. இயற்கையோடு ஒன்றாக இருப்பவர்களுக்கு இயற்கை போன்ற சுதந்திரம் உண்டு. உங்கள் உதாரணங்களுக்காக காத்திருக்கிறேன்!

Unknown said...

நீங்க ஒருத்தர் தான் நல்லவருங்கோ.

Unknown said...

Blogger வால்பையன் said...

// jaisankar jaganathan said...

ஆன்மீக வாதின்னா எனக்கு தெரிஞ்சு அது ஓம்கார் தான். வேற யார் இதுக்கு வர முடியும்//

பக்தர்ன்னா நீங்க ஒருத்தர் தான்!
வேறு யார் அதுக்கு வரமுடியும்!
----------------------------------------------------------------------
இது பக்தி இல்லை ஜால்ரா....
இப்போ புரியிதா போலி சாமியாருங்க எப்படி உருவாகிறார்கள் என்று?

எம்.எம்.அப்துல்லா said...

//பக்தர்ன்னா நீங்க ஒருத்தர் தான்!
வேறு யார் அதுக்கு வரமுடியும்! //

வால் அண்ணே மதவாதிக்குத்தானே பக்தர்கள் இருப்பார்கள்? ஆன்மீகவாதிக்கு எப்படி??

Unknown said...

//இது பக்தி இல்லை ஜால்ரா....
இப்போ புரியிதா போலி சாமியாருங்க எப்படி உருவாகிறார்கள் என்று?
//

அவர் உபதேசத்தை கேட்பவர்களுக்கு அவர் குரு. அதனால் அப்படி எழுதினேன்.

கோவி.கண்ணன் said...

//ஆன்மீகவாதியின் டாப் 15 லட்சணங்கள் //

பெருத்த சந்தேகம்

ஆன்மிக அன்பர்கள் ஏன் வாதியாக இருக்கனும் ?

:)

Unknown said...

//ஆன்மிக அன்பர்கள் ஏன் வாதியாக இருக்கனும் ?
//

மத்தவங்க கிட்ட ஆன்மீகம் பத்தி வாதம் பண்ணுறதுனால ஆன்மீகவாதி

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை,

கூகிளில் ‘இயற்கை’னு தேடி அந்த பதிவுக்கு போயி பின்னூட்டம் போடுவீங்களா? முடியல :)

வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர்,

//ஆன்மீக வாதின்னா எனக்கு தெரிஞ்சு அது ஓம்கார் தான். வேற யார் இதுக்கு வர முடியும்//
//அவர் உபதேசத்தை கேட்பவர்களுக்கு அவர் குரு. அதனால் அப்படி எழுதினேன்.//

ஏன்ன பிரச்சனையா இருந்தாலும் பேசிக்கலாம். இப்ப எதுக்கு எனக்கே கூச்சமா இருக்கு :)

வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்பிரியன்,

எல்லாம் உங்கள் உற்சாகமே காரணம்.

எல்லாரும் கேட்டுக்குங்க எனக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை காத்துக்கிட்டு இருக்கு :)

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜூ,
திரு பாபு,
திரு ஜவஹர்,
திரு சூப்பர்சுப்ரா,
திரு செல்ப்ரியலைசேஷன்,
திரு மதி,

உங்கள் வருகை நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரியாத பொன்னுச்சாமி,

//ஏன்னு கேட்டா,சட்டிய ஏன் பார்க்கிற..
சாம்பார் ருசி எப்படினு பாரு அப்படிங்கிறாங்க்க..

என்னமோ போங்க..

நீங்க தொடர்ந்து எழுதுங்க..

--புரியாத பொன்னுச்சாமி//

நான் உங்க வீட்டம்மா பக்கம்னாலும் சாம்பாரை பார்க்காம சிலர் காப்பர் பாட்டம் பாத்திரம்தான் வேனும்னு கேட்கறாங்க.

இல்லைனா இத்தனை பாத்திரக்கடை வந்திருக்குமா :) ?


உங்கள் வருகை நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

/
அதெல்லாம் சாமி முன்னாடியே எழுதிருச்சு. இந்த சுட்டில போய் பாருங்க
//

உங்க கடமை உணர்ச்சிக்கு தலைவணங்குகிறேன் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே ஆர் எஸ்,
//ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம், நாம எப்படி இருக்கணும் என்பதை ஒரு நாள், அனைவரும் பயன் பெறுமாறு சொல்லுங்கள்!//

இதை சீரியசா படிக்கவும் :))

நீங்கள் மாதவிப்பந்தல் துவங்கி சங்கிதம் வரை பல வலைபதிவில் எழுதுகிறீர்கள்.
நான் இருக்கும் ஒரு வலைப்பூவில் எழுத மேட்டர் கிடைக்காமல் சஸ்பென்ஸ் என்ற பெயரில் இருபதிவாக போட்டுக் கொண்டிருக்கிறேன்.:)

நீங்கள் பின்னூட்டம் என்ற பெயரில் நான் எழுதவேண்டியதை எழுதினால் நான் எதைத்தான் எழுதுவது :)

வேனும்னா உங்கபதிவு பட்டியலில் இதையும் இணைச்சுக்குங்க :)

உங்கள் வருகைக்கும். அற்புதமான சுட்டிக்கும் நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருமால்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//மாறுபட்ட கருத்து போல் இருக்கிறது ஸ்வாமி. ஒரு சட்டதிட்டத்தில் அடக்க முடியாது என்கிறிர்கள் மேலும் எப்படி இருப்பார்கள் என்று கூறுகின்றேன் என்கிறிர்கள்.//

எப்பொழுதும் நான் மாறுபட்ட கருத்தாவே எழுதறேனா ? இனிமேல் மாற்ற முற்சிக்கிறேன். அடுத்த பதிவு வரை காத்திருப்போம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வால்பையன்,

///கடல் மேல் பயணிப்பது தர்மத்திற்கு எதிரானது என்றாலும் ஆன்மீக விஷயத்திற்காக அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.//

இதில் கொஞ்சம் முரண் படுகிறேன்!

ஆன்மீகவாதிகள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறார்கள், அப்போதெல்லாம் வான் வழி பயணத்துக்கு வழியில்லை! தீடிரென்று முளைத்த போது அதன் மேல் உள்ள அச்சத்தால் அப்படி சொல்லி கொள்வார்கள் என நினைக்கிறேன்!//

விமான பயம் எல்லாம் இல்லை. இந்த தடை விமானம் கண்டறியும் முன்னேயே இருக்கிறது.

கடல் மேல் பயணம் என்பதை மனுதர்ம சாஸ்திரம் கூடாது என்கிறது.சன்யாசிகள்,ப்ராமணர்களுக்கு இந்த தடை. பிறருக்கு அல்ல.

விமானம், கப்பல் என்பது வாகனம். இவர்கள் கடல் என பாதையை குறிப்பிட்டு சொல்லுகிறார்கள்.

உங்கள் பகுத்தறி’வால்’ இதற்கு என்ன காரணம் என சிந்தித்து கூறுங்கள். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராகேஷ்,

என்னை பற்றி எதுவும் இதில் எழுதவில்லை.

நீங்கள் மதிக்கும் அல்லது துதிக்கும் ஒருவரின் செயல் இந்த பட்டியலில் இருக்கலாம். அது உங்களுக்கு ஆந்தங்கத்தை உருவாக்கி இருக்கும்.

மக்களிடையே இருக்கும் அறியாமையை சுட்டிகாட்டவே எழுதி இருக்கிறேன்.

அனைவரும் சுகந்திரமாக செயல்பட மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன். உங்களால் பிறரின் சுகந்திரத்தை கெடுத்துவிடாதீர்கள்.
பதிவை பற்றியும் அதில் உள்ள கருத்தைபற்றியும் விமர்சியுங்கள்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடுங்கள் என்னை பற்றிய விமர்சனம் செய்ய உங்களுக்கு அதிகாரம் நான் வழங்கவில்லை.



உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//பெருத்த சந்தேகம்

ஆன்மிக அன்பர்கள் ஏன் வாதியாக இருக்கனும் ?

:)//

ஆன்மீக அன்பர்கள் என எழுதினால் அவர்கள் ஏன் அன்பா இருக்கனும் என கேட்ப்பீர்கள்.

சரி நடந்துங்க :)

நிகழ்காலத்தில்... said...

திரு கோவி.கண்ணன்,

//பெருத்த சந்தேகம்

\\ஆன்மிக அன்பர்கள் ஏன் வாதியாக இருக்கனும் ?

:)//

ஆன்மீக அன்பர்கள் என எழுதினால் அவர்கள் ஏன் அன்பா இருக்கனும் என கேட்ப்பீர்கள்.

சரி நடத்துங்க :)\\


:))))

கலியுக சித்தன் said...

13) நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.

?//you revealed yourself OMKAR...whom you are in this//?

"TRUTH WILL REVEAL ITSELF"

Unknown said...

கொஞ்சம் லேட் ஆக வந்தேன்.
மக்களிடம் உள்ள அறியாமையை சுட்டி காட்ட உங்களுக்கு அதிகாரம் இருக்கும் பொது, உங்கள் பேரை கூட சொல்ல துணிவில்லாத உங்களை பற்றிய விமர்சனம் செய்ய எல்லோருக்கும் அதிகாரம் உண்டு.

சபைக்கு வந்து விட்டேர்கள் நண்பரே. உங்களுக்கு பக்குவம் இல்லாவிட்டால் இதை உங்கள் ஜால்ரா பக்கங்களாக மாற்றி கொள்ளுங்கள். comment moderation செய்யுங்கள்.

நன்றி.