Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 29, 2009

பழைய பஞ்சாங்கம் 29 - மே - 2009

இவர்களா நாளைய உலகம்?

பதிவு தபால் அனுப்ப தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.( தபால் நிலையம் போனாலும் நாங்க பதிவு போடுவோம்..!) சிறப்பு தபால் அனுப்பும் பிரிவில் நீண்ட வரிசையில் பலர் நின்றிருந்தார்கள். அனைவரும் பொறியியல் கல்விக்கான விண்ணப்பம் அனுப்ப வந்தவர்கள். இன்னும் பொறியியல் படிப்புக்கு மோகம் இருப்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. சிலர் தனியாகவும்,சிலர் பெற்றோருடனும் வந்திருந்தனர்.

என்பது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் ஒரு சிறிய தபால் உறையுடன் வரிசையில் நிற்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருந்தார். கால் பலம் இல்லாமல் அருகில் இருக்கும் நாட்காலியில் உற்கார்ந்தார். அவரின் நிலையை பார்த்து நான், முன்னால் இருப்பவர்களிடம் (15 பேர் நின்றிருந்தனர்) பெரியவரை அனுமதிக்குமாறு கேட்டேன். என்னை வேற்றுகிரக வாசியாகவும், அந்த முதியவரை ஒரு வைரஸ் கிருமி போலவும் பார்த்தார்கள். பின்னர் முகத்தை திருப்பிக்கொண்டனர்.

நேராக அழைத்து சென்று தபால் அலுவலரிடம் சொன்னேன். அவரின் தயாள குணத்தையும் கருணையும் அளவிடமுடியாததாக இருந்தது. ஒரு மணி நேரம் செலவிட்டு, எனது முறை வந்ததும் அவரின் தபாலை அனுப்ப சொல்லிவிட்டு பின்பு நான் அனுப்பினேன். எனது பின்னால் இருந்தவர்கள் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் வாங்கி கட்டிக்கொண்டார்கள்.

தெரியாமல் தான் கேட்கிறேன்... இவர்கள் பொறியியல் படித்து என்ன கிழிக்க போகிறார்கள்? மனித நேயம் தெரியாமல் அமெரிக்கா சென்று குடும்பத்துடன் தற்கொலை செய்யவா? எல்லாம்...நமது கல்வி முறையை சொல்லவேண்டும்.. பார்ப்போம் தர்மம் மறுபடி வெல்லும்..!

-------------------------------------------------------------------------------

காரைக்குடியில் ஒர் ஆலயம்


நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமான கோவில்களை நிர்மாணித்துள்ளனர். ஒன்பது கோவில்கள் காரைக்குடி சுற்றி இருப்பதாக கேள்வி. அனைத்து கோவிலுக்கும் செல்ல முடியாவிட்டாலும் சில கோவிலுக்கு செல்ல முடிந்தது. அதில் குறிப்பிடத்தக்க கோவில் இரணியூர் சிவன் கோவில். பாரம்பரிய கட்டட கலையின் சிறப்பில் ஒளிரும் கோவில். நரசிம்ம அவதாரம் காலத்தில் ஏற்பட்ட சூழலை தலபுராணமாக கொண்டது.

கோவிலில் நுழைந்ததும் முன்னால் இருந்த தலைமை பூஜாரியை பார்த்து எனது மாணவர்
கோவிலைபற்றி சொல்லுங்கள் என்றார். கோவிலின் தன்மையை அற்புதமாக விளக்கினார். கோவிலில் பிரகாரத்தில் வலது பக்கம் ஒரு சிற்பம் இருந்தது, சிவன் ஒரு அசுரனை வதம் செய்ய செல்வது போல அமைந்திருந்தது. சிவனின் தேரின் சக்கரமாக சூரியனும் சந்திரனும் இருக்க, தேவர்கள் குதிரையாக இருப்பதாக வடிவமைக்க பட்டிருந்தது.

தேரில் ஒரு பக்கம் கடையாணி இருக்க மறுபக்கம் இல்லாமல் இருந்தது. சந்திரன் இருக்கும் பகுதியில் கடையாணியும், சூரியன் இருக்கும் பகுதியில் கடையாணி இல்லாமலும் இருந்தது. விநாயகரை வழிபடாமல் சென்றதால் ஒருபக்கம் கடையாணி உடைந்ததாக புராணம் சொன்னார் பூஜாரி.

சூரியனுக்கு அச்சுகிடையாது, சந்திரனுக்கு மட்டுமே சுழலும் அச்சு இருக்கிறது என்ற வானவியல் கோட்பாட்டை தெரிந்துகொண்டு உருவாக்கிய சிற்பியை நினைத்து வியப்படைந்தேன். இதை உணராமல் இருக்கும் பூஜாரியை நினைத்து வருந்தினேன்...

-------------------------------------------------------------------------------


கணக்கம்பட்டி கடும்சொல்


பழனிக்கு நான்கு கிலோமீட்டர் அருகில் திண்டுக்கல் போகும் சாலையில் இருக்கும் சிறிய கிராமம் கணக்கம் பட்டி. விவசாயம் தவிர வேறு பணிகள் இல்லை. அங்கே ஒரு மஹான் இருக்கிறார்...கணக்கம்பட்டி ஸ்வாமிகள்..

நிற்க.. மஹான் என்றதும் தூய வெளாடையில் கையில் ஒரு ஜபமணியுடன் இருப்பார். அனைவருக்கும் ஆசிவழங்குவார் என நினைத்து சென்றீர்கள் என்றால் மனமுடைந்து மருத்துவ மனையில் சேரவேண்டிவரும்.

அவர் சித்தர் அல்ல பித்தர். முழுமையான பரபிரம்ம நிலையில் இருப்பவர். யார் அவர்முன் வந்தாலும் மூன்று பரம்பரைக்கு கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். சிலரை குச்சியால் அடித்தும், சிலரை ஓட சொல்லியும் துரத்துவார். ( ஒரு சிரிப்பு நடிகரின் காட்சி மனதில் ஓடுகிறதா? )

அழுக்கான உடையில் குளிக்காத தேகமும் அவரின் லட்சணங்கள். யாரோ ஒருவரின் தென்னந்தோப்பில் இருக்கும் பம்ப்செட்டுதான் அவரின் ஆசனம். கர்மா மிகுந்த நிலையில் ஒருவர் வந்தால் கேவலமாக அவரை அசிங்கபடுத்தி அவரின் ஆணவம் எனும் இரும்பு திரையை தகர்த்துவிடுவார்.

ஆன்மீகமானவர்கள் சென்றால் அவர்களை உட்காரவைத்துவிட்டு அவரும் அமைதியாக இருப்பார்.

இவரின் செயல்கள் சாமானியர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கும். இவரை பற்றி சொல்லாமல் சுப்பாண்டியை இவரிடம் கூட்டி சென்றேன். சுப்பாண்டிக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. என்னிடம் இருக்கும் மாணவர்கள் சிலரையும் இவரிடம் அனுப்பியதுண்டு. அவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

ஆன்மீகம் என்றால் இது தான் என நீங்கள் முடிவுசெய்தால் நான் என்ன செய்ய முடியும்?

-------------------------------------------------------------------------

ஆணவன்


எதை புதைத்தாலும் உரமாக்கி தருகிறது மண்.
எவ்வளவு மாசுற்றாலும் தென்றலாகிறது காற்று.
தனது நிலைதவறாமல் ஒளி தருகிறது நெருப்பு.
அசுத்தத்தை ஏற்படுத்தினாலும் அசுத்தமடையாத ஆகாயம்.

சாக்கடை நீரானாலும், கடல் நீரானாலும்,

தூய்மையான நீரையே வழங்குகிறது மழை.

கொடியவிஷத்தை அளித்தாலும்,
அழுகிய பொருளை வீசினாலும்,
உனக்கு அற்புதத்தையே தருகிறது தாவரம்.

இத்தனையும் உன்னை சுற்றி இருந்தும் மனிதா
நீ பஞ்சபூதத்தால் ஆனவன் என ஏற்கமறுக்கிறேன்.
நீ ஆனவன் அல்ல ஆணவன்.

16 கருத்துக்கள்:

அது ஒரு கனாக் காலம் said...

அந்த வரிசை மிகவும் சங்கடபடுத்தியது ... இவர்கள் படித்து, சம்பாதித்து இதே போன்ற பெரியவர்களை ( பெற்றோர்களை ) காப்பாற்ற வேண்டும்....இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும்.

Sanjai Gandhi said...

அட.. ஸ்வாமியும் பிட்டு பதிவில் இறங்கிட்டார் போல.. பேஷ்.. பேஷ்.. :))

உங்க தபால் நிலையம் அனுபவம் போலவே ரயில் நிலையங்களின் பல முறை நான் பார்த்திருக்கிறேன் ஸ்வாமி. மனிதாபிமானம் இனி மறந்துவிட வேண்டியது தான். :(

thiru said...
This comment has been removed by the author.
thiru said...

1. தாங்களும் ஒரு காலத்தில் தள்ளாமையால் தடுமாறுவோம் என்று உணர்ந்தாலே போதும். வயதானவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அரவணைப்பும் தானே கிடைக்கும்.
ஏதோ இவர்கள் உடம்பு மட்டும் கல்லில் செய்து வைத்ததாக நினைப்பு ! நீங்கள் சொல்வது போல் "தர்மம்" மறுபடி வெல்லட்டும் !!
2.அச்சில்லாத சூரியன்,அச்சுடன் சுழலும் சந்திரன் அற்புதம்.
( பிள்ளையார்பட்டி,வைரவன்பட்டி எல்லாம் போய் வந்தீகளோ ? )
3.முகம் பார்க்கும் கண்ணாடி போல் நம் மனதில் இருப்பதை பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்த சித்தர். சிரிக்கும் மனதிற்கு சிரிக்கும் சித்தர் காட்சி. பிறரைத் துன்புறுத்தும் மனதிற்கு தண்டனை.
4."ஆணவன்" - ஆணவம் எல்லாம் பஞ்சபூதத்திற்கு முன் தூசு. ஆழிப் பேரலை (சுனாமி), பூகம்பம், காட்டுத்தீ, பேய்மழை,சூறாவளி இவற்றுக்கு முன் பதர்கள் என்னவாயினர் ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திர ராமன்,

உண்மைதான். இவர்களும் முதுமையடைவார்களே என்ற எண்ணம் இல்லை.


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய்,
//ஸ்வாமியும் பிட்டு பதிவில் இறங்கிட்டார் போல//

இது எண்ண பிரமாதம்.. ஒருத்தர் பிட்டுக்கு மண்ணே சுமந்துருக்கார்.நான் ஆவது பதிவு தான் போடறேன்.

கோவையில் இது போல அடிக்கடி நடக்கிறது.

வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

அன்புள்ள திரு,

உங்களை பிறர்மாதிரி அழைக்கமுடியவில்லை.உங்களுக்கு மறுமொழி கூற முடியாமல் நான் முழிப்பதாக நினைப்பார்கள். :))

//பிள்ளையார்பட்டி,வைரவன்பட்டி எல்லாம் போய் வந்தீகளோ ? //

பிள்ளையார்பட்டி,வைரவன்பட்டி, இரணியூர்,வைணவ திருத்தலம் என காலை முதல் மாலைவரை ஷேத்திராடணம் தான்.


உங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

ஹி ஹி , இவர்கள் பொறியியல் படித்து அமேரிக்கா போகட்டும், ஆனால் அமெரிக்காவில் உள்ள பொது மக்கள் மிகவும் மனிதாபிமானம் கொண்டவர்கள். விமான நிலையத்தில் குழந்தையோடு வந்தால் உடனே வழி விடுவார்கள். எல்லா இடங்களிலும் ஊனமுற்றவர்களுக்கு சட்டப்படி அவர்களுக்க சுலபமாக வர போக பார்க் செய்ய வசதி உள்ளது. சாலையில் யாருக்காவது கஷ்டம் என்றால் உடனே வந்து உதவி செய்வார்கள். இவ்வளவு என், ஒரு தடவை என் மகள் தெரியாமல் கடையில் ஜூஸ் பாட்டில் உடைத்ததற்கு, காசு தருகிறேன் என்று சொன்னதற்கு கூட காசு வாங்கவில்லை அவர். நிறைய நல்ல உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் இங்கே. பொறியியல் படித்து அமெரிக்க வர போகிறார்கள் என்றால் அவர்களுக்கு இங்கே பெரிய ஷாக் காத்திருக்கிறது!

எம்.எம்.அப்துல்லா said...

//மனித நேயம் தெரியாமல் அமெரிக்கா சென்று குடும்பத்துடன் தற்கொலை செய்யவா?

//


சவுக்கடி.

எம்.எம்.அப்துல்லா said...

//ஆன்மீகம் என்றால் இது தான் என நீங்கள் முடிவுசெய்தால் நான் என்ன செய்ய முடியும்?

//

:)

ஆ.ஞானசேகரன் said...

//பதிவு தபால் அனுப்ப தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.( தபால் நிலையம் போனாலும் நாங்க பதிவு போடுவோம்..!) //

அதுவும் சரி...

ஆ.ஞானசேகரன் said...

//தெரியாமல் தான் கேட்கிறேன்... இவர்கள் பொறியியல் படித்து என்ன கிழிக்க போகிறார்கள்? மனித நேயம் தெரியாமல் அமெரிக்கா சென்று குடும்பத்துடன் தற்கொலை செய்யவா? எல்லாம்...நமது கல்வி முறையை சொல்லவேண்டும்.. பார்ப்போம் தர்மம் மறுபடி வெல்லும்..!//

இதுதான்... நல்லாதான் சொல்கின்றீர்கள் ஐயா...

ஆ.ஞானசேகரன் said...

//சாக்கடை நீரானாலும், கடல் நீரானாலும்,
தூய்மையான நீரையே வழங்குகிறது மழை.//

ரசித்தவை

புருனோ Bruno said...

//சூரியனுக்கு அச்சுகிடையாது, சந்திரனுக்கு மட்டுமே சுழலும் அச்சு இருக்கிறது என்ற வானவியல் கோட்பாட்டை தெரிந்துகொண்டு உருவாக்கிய சிற்பியை நினைத்து வியப்படைந்தேன்.//

வாவ் !!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

நீங்கள் சொல்லுவது உண்மை.
எனது அமெரிக்க மாணவர்கள் இங்கே வந்து அதிர்ச்சி அடைந்த சம்பவங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல...

அவர்களில் சமூக செயல் (social movements) நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல் அவர்கள் நம்மிடம் அறிவு சார்ந்த முயற்சியை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா அண்ணே,

திரு ஞானசேகரன்,

திரு புருனோ,

உங்கள் வருகைக்கு நன்றி..