Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 13, 2009

பழைய பஞ்சாங்கம் 13- 05-2009

அண்டா ரமணர்

ரமண மகரிஷியை பார்க்க சிலர் அவரின் ஆசரமத்திற்கு வந்தனர். ஆசிரம முன் வாசல் வழியாக வராமல் மலை மேலிருந்து அவர்கள் வந்ததால் சமையல் அறைக்கு வெளிப்பகுதிக்கு வந்து அடைந்தனர். அப்பொழுது ஒருவர் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார்.
அவரை பார்த்து " ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருப்பார் ? என கேட்டனர்.

பாத்திரம் கழுவிக்கொண்ருந்தவர் தனது கையில் இருக்கும் அண்டாவை காட்டி இதுதான் ரமணர் என்றார். வந்தவர்களுக்கு அவரின் செயல் புரியவில்லை. மீண்டும் கேட்க. அவர் அண்டவின் மேல் ”ரமண மகரிஷி” என எழுதி இருந்ததை காட்டி இது மேல் தான் அப்படி எழுதி இருக்கிறது வேறு எங்கும் இது போல் பார்த்ததில்லை என்றார். சரியான ஆளிடம் மாட்டிக்கொண்டோம் என நினைத்து அங்கிருந்து ஆசிரத்திற்குள் நுழைந்தனர்.

பகவான் ரமணர் அமரும் ஹாலில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு எல்லோரும் பகவான் வருவதாக சொல்ல, அங்கே...

அந்த பாத்திரம் தேய்த்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
--------------------------------------------------------------------------

ஜோதிட பாடம் என்ன ஆச்சு?

பலர் என்னிடம் ஜோதிட பாடம் என்ன ஆச்சு ? எழுதுவதில்லை என்கிறார்கள். மேலும் சிலர் உரிமையுடன் துணுக்குகள் எழுத நேரம் இருக்கிறது,
நகைச்சுவை எழுத நேரம் இருக்கிறது ஆனால் ஜோதிட பாடம் எழுத நேரம் இல்லையா என கேட்கிறார்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடம் பயிற்றுவித்து இருக்கிறேன். ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது. ஒரு நாளில் முழு ஜோதிடத்தையும் கற்றுகொடுத்துவிடுவேன். ஆனால் இணைய வழியில் பயிற்றுவிப்பத்தில் சில அசெளகரியங்கள் உண்டு. நிறைய விளக்கங்கள் தேவைப்படும். அதை சில தொழில்நுட்ப ரீதியாக தீர்த்து வருகிறேன். விரைவில் ஜோதிட பாடம் வரும்.
----------------------------------------------------------------------

எச்சிக்கலை சித்தர்


காரைக்குடிக்கு சென்று இருக்கும் பொழுது அங்கே சில ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒவ்வொரு கோவிலும் பிரம்மாண்டம், அழகு, தெய்வீகம். வரும் வழியில் ஒரு சித்தரின் சமாதிக்கு அழைத்து சென்றார் எனது மாணவர். வாசலில் இருந்த பெயர்பலகையில் “எச்சிக்கலை சித்தர்” என இருந்தது. என்னுடன் வந்த சுப்பாண்டி இதை பார்த்தவுடன் நமட்டு சிரிப்புடன், “சுவாமி போற போக்கை பார்த்தா நானும் சித்தராயிரலாம் போல இருக்கே..!” என்றார். உன் நல்ல புத்தியை கோவிலுக்கு வெளியே வை. உள்ளே சென்று விசாரிக்கலாம் என கூறி உள்ளே சென்றேன்.

அப்புறம் தான் தெரிந்தது, “ எசசிக்கலையும் (எந்த சிக்கலையும்) போக்கும் சித்தர்” என்பது. தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி என நினைத்துக்கொண்டேன். :) குப்பை மேடுகளிலும் பேருந்து நிலையத்திலும் வாழ்ந்த ஆன்மீக மஹான் அந்த சித்தர். சில நிமிடம் தியானித்தேன்.

அற்புதமான ஆற்றல் பெற்ற இடம்.

------------------------------------------------------------------------------------------------------
சென்னை விஜய பேரறிக்கை

கோடைவிடுமுறைக்கு வருவதாக உறவினர் அனுப்பிய கடிதம் பார்த்தவுடன் நம் ஆட்கள் வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். உறவினர் வரும் பொழுது பெரிய பூட்டு தொங்கும். இதை நான் சொல்ல காரணம் நான் சென்னை வருகிறேன் என்றவுடன் முக்கியமாக நான் சந்திக்க நினைத்த அனைவரும் “ஜூட்”.

அப்படி இருந்த போதும் புரூனோ, உமாசங்கர், பிரபாகரன் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது. அப்துல்லா மற்றும் டோண்டு ராகவன் ஆகியோருடன் தொலைபேசவும் முடிந்தது. அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தது...

இருங்கப்பா அடுத்தமுறை சொல்லாம வரேன்...
----------------------------------------------------------------------------

தேர்தல் சமயத்தில் போதை வஸ்துக்களை கொடுக்ககூடாது என்றாலும் அதையும் மீறி எனது கவிதையை வெளியிடுகிறேன் :)

குரு நிலை

உங்களை போல குருவாக வேண்டும்
என கேட்கும் சிஷ்யா...
நீ குருவாக
"நான்"
இருக்கக்
கூடாது.

28 கருத்துக்கள்:

yrskbalu said...

swamji- are you voted?

Mahesh said...

//நீ குருவாக
"நான்"
இருக்கக் கூடாது.
//

இது மேட்டர்...

Unknown said...

சுவாமி,தில்லியை சேர்ந்த சில சோதிடர்கள், இப்போது அமையப்போகும் பாராளுமன்ற சபை அல்பாயுசில் முடியும் என்கின்றனரே. உங்கள் கருத்தை அறிய ஆவல்.

ஷண்முகப்ரியன் said...

ரமணர்,எச்சிக்கலச் சித்தர்,எல்லாமே அருமை ஸ்வாமிஜி.
சென்னையில் உங்களைப் பார்க்க முடியாமல் போனதற்கு நாங்கள்தான் வருத்தப் படவேண்டும்.அது எங்கள் ஜாதகக் கோளாறு என்று நினைக்கிறேன்!

கோவி.கண்ணன் said...

//உங்களை போல குருவாக வேண்டும்
என கேட்கும் சிஷ்யா...
நீ குருவாக
"நான்"
இருக்கக் கூடாது.//

பஞ்ச்......சாங்கம் !
:)

ஒரு சின்ன திருத்தம் 'உன் உடலுக்கு நான் இருக்கக் கூடாது' !
:)

மதி said...

>>>>ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது.<<<<

அப்படியா...நான் உங்களிடம் வந்து ஜோதிடம் கற்க தயார்...ஆனால் உங்களைப்போல் குரு அமையா (ஜோதிடத்தில்) கொடுப்பினை வேண்டுமே...!!!

sundaresan p said...

vanakam swami

inimel jothida paadam nadatha maatergala?

Unknown said...

ரமண மகரிஷி, சித்தர், இவர்களை பற்றியெல்லாம் படிக்கும்போது மேலும் படித்துகொண்டே இருக்க தோன்றுகிறது. இதுபோல பதிவுகளை தொடரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

புருனோ Bruno said...

//ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது. ஒரு நாளில் முழு ஜோதிடத்தையும் கற்றுகொடுத்துவிடுவேன்//

நான் தயார் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. Yrskbalu,

சில பிரபலங்களை போல எனக்கும் ஓட்டு இல்லை :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நந்தன்,

தில்லி ஜோதிடர்களை எனக்கு நன்கு தெரியும். அவர்களுடன் பத்து நாள் வாழ்ந்து இருக்கிறேன்.

ஜோதிட அறிவு சிறிதும் இல்லாமல், மீடியாவின் தயவால் மட்டுமே வாழ்பவர்கள்.

மேலும் அரசியல் சார்ந்த கருத்துக்களை நான் விளியிடுவதில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

ஒரு பரிகாரம் செய்வோம்.விடுங்கள் :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. கோவி.கண்ணன்,


திரு மதி,

திரு சுந்தர், (ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம்)

திரு பிரபு,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரூனோ,

எல்லாத்துக்கும் தயாரா இருக்கீங்க :)

உங்கள் வருகைக்கு நன்றி.

கிரி said...

//ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது//

ஸ்வாமி மிகைப்படுத்தி கூறி விட்டீர்களோ!

VIKNESHWARAN ADAKKALAM said...

நானும் சித்தர் தான் :))

மதி said...

>>>>ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம்<<<<

மிக்க நன்றி...

கே.பழனிசாமி, அன்னூர் said...

>>>>ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம்<<<<

மிக்க நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி,

மிகைப்படுத்தவில்லை. பல தேசத்திலிருந்தும் எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். விடியோ மூலம் 6 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளுகிறார்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விக்னேஷ்வரன்,
திரு மதி,
திரு.கே.பழனிச்சாமி,

உங்கள் வருகைக்கு நன்றி

Geekay said...

//மிகைப்படுத்தவில்லை. பல தேசத்திலிருந்தும் எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். விடியோ மூலம் 6 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளுகிறார்கள்.//

Its true , I am happy to say Swamiji's student, I have recently received his video course, its really excellent.
You can learn with in 6 hrs,( but you need to wait for atleast 25 days to get the course materials.)

மதி said...

>>>மிகைப்படுத்தவில்லை. பல தேசத்திலிருந்தும் எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். விடியோ மூலம் 6 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளுகிறார்கள்.<<<


can explain more... how to get this?price,topic coved and so on.

எம்.எம்.அப்துல்லா said...

super summer shot :)

எம்.எம்.அப்துல்லா said...

Mahesh said...

//நீ குருவாக
"நான்"
இருக்கக் கூடாது.
//

இது மேட்டர்...


//



இதுதான் மேட்டரு :))

மோகன் said...

பெங்களூர் விஜயம் ஏதாவது இருக்கிறதா???

aaaaaaa said...

how to leave a comment in tamil in this blogger. because i don't have a tamil font for this blog. pl give a advice.
regards
Narayanan.S

ஆ.ஞானசேகரன் said...

//அப்புறம் தான் தெரிந்தது, “ எசசிக்கலையும் (எந்த சிக்கலையும்) போக்கும் சித்தர்” என்பது. தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி என நினைத்துக்கொண்டேன். :) //

புரிந்துகொண்டேன்..