பன்னிரு ராசிகளும் கால நிலையையும் மாதங்களையும் குறிக்கிறது. ராசி மண்டலம் 360 பாகை கொண்டது என நாம் படித்தோம். சூரியன் தினமும் ஒரு பாகை வீதம் 360 டிகிரியை 365.25 நாட்களில் சுற்றிவருகிறார்.
"சூரியன் சுற்றிவருகிறார்” என படித்தவுடன் உங்கள் பகுத்தறிவு பாசறையை திறந்துவிடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் பஸ் முன்னோக்கி செல்லும் பொழுது அருகில் நிலையாக இருக்கும் பஸ் பின்னோக்கி செல்லுவது போல தோற்றம் கொடுக்கும். அது போல சூரியன் நிலையாக இருந்தாலும், பூமி சுற்றிவருவதால் சார்பியல் கோட்பாட்டின் படி சூரியன் சுற்றிவருவதாக சொல்லுவோம்.
ஐந்தேகால் நாட்கள் அதிகம் வருவதற்கு காரணம் பூமியின் சுற்றுபாதை நீள்வட்டமாக இருப்பதால் அகண்ட வளைவுகளில் அதிகமாக காலத்தை சூரியன் எடுத்துக்கொள்கிறார். சில ஓட்டப்பந்தையத்தில் போட்டியாளர்களை கோணலாக நிற்க வைத்திருப்பார்களே பார்த்திருக்கிறீர்களா? காரணம் ஓடுகளம் நீள்வட்டமாக இருந்தால் ஓடுகளத்தின் வெளிச்சுற்றில் இருப்பவர் அதிக கால அளவு ஓடவேண்டி இருக்கும்.
சூரியன் ஒரு டிகிரி செல்ல ஒரு நாள் எடுத்துகொள்வதால், ஒரு ராசியை முப்பது நாட்களில் கடந்துவிடுவார். ஆக ஒரு வருடம் என்பது சூரியன் பன்னிரு ராசியை 365.25 நாட்களில் சுற்றிவருவதை பொருத்து அமைகிறது.
ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷம் முதல் நாட்களும் மாதங்களும் துவங்கும். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகள் சித்திரை முதல் மீனம் வரை உள்ள மாதங்களை குறிக்கும். சூரியன் மேஷ ராசியில் முதல் பாகையில் சென்றால் அன்று சித்திரை ஒன்றாம் தேதியாகும். மேஷ ராசியில் 15 டிகிரி சென்றால் அன்று சித்திரை 15ஆம் தேதி. எளிமையாக சொல்ல வேண்டுமானால் சூரியன் இருக்கும் பாகைதான் நமக்கு தேதியாக இருக்கும்.
ஒருவர் ஆகஸ்டு 4ஆம் தேதி பிறக்கிறார் என்றால், ஜூலை 15 முதல் ஆகஸ்டு 15 வரை சூரியன் கடக ராசியில் இருக்கும். அதாவது அந்த நபர் ஆடி மாதத்தில் பிறந்திருக்கிறார் என கொள்ளவேண்டும். ஜோதிட ரீதியான மாதம் தெரியவில்லை என்றால் ஆங்கில மாதத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் இருக்கும் சமூகம் மட்டுமே இப்படி இருக்கும் நாள்காட்டியை கொடுக்க முடியும். 550 வருடம் முன்பு வரை ஆங்கிலேயர்களின் காலண்டரில் பத்து மாதங்கள் தான். காரணம் சராசரி மனிதனுக்கு எண்ணிக்கை அவனது பத்து விரலுக்கு மேல் விரிவதில்லை. ஜூலியர் சீசர் காலத்தில் நமது கலாச்சார தாக்கம் காரணமாக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் இடையே இணைக்கப்பட்டது. அதற்கு முன்புவரை செப்,அக்ட்,நவா,டிச என துவங்கும் எண்ணிக்கைகள் 7,8,9,10 எனும் வரிசையிலேயே கிரேக்கர்கள் பயன்படுத்தினர்.
திடிரென இரு மாதங்கள் இணைத்தும் 365.25 நாட்கள் வராத காரணத்தால் ஒரு மாதத்திற்கு 30 அடுத்த மாதத்திற்கு 31 என கொடுக்க ஆரம்பித்தனர். குரங்கு அப்பம் தின்ற கதையாக ஆங்கில நாள்காட்டி அலங்கோலமாக இருக்கிறது.
சித்திரை முதல் பங்குனி வரை கூறப்படும் மாதங்கள் தமிழ் மாதங்கள் அல்ல. மாதத்தின் பெயர்களான சித்திரை, வைகாசி என்பதும் தமிழ் பெயர்கள் அல்ல.
தமிழனுக்கு சொந்தமான நாள்காட்டியை உருவாக்க இங்கு நிறைய குடிதாங்கிகள் இருக்கிறார்கள். அதனால் இந்த மாதங்களை "ஜோதிட மாதங்கள்" என கொள்வோம். விஞ்ஞான ரீதியான நாள்காட்டியை பயன்படுத்தமாட்டோம் என சொல்லும் தமிழனை என்ன என்று சொல்லுவது? சூரியன் தமிழனுக்கு மட்டும் சொந்தமா என்ன? நமக்கு எதுக்கு அரசியல், வாருங்கள் பாடத்தை கவனிப்போம்.
ராசி நிலையில் நேரங்கள் :
சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகை செல்லுவதாக சொன்னேன். ஒரு நாள் என்பது ஒரு மாதம் மற்றும் வருடம் உருவாக காரணமாக இருக்கிறது.
நாள் எப்படி காரணியாக இருக்கிறதோ அது போல நேரம் ஒரு நாள் உருவாக காரணமாகிறது. 24 மணி நேரத்தில் பூமி தன்னை தானே சுற்றுவதை ஒரு நாள் என்கிறோம். எனவே ஒரு ராசிக்கு இரண்டு மணி நேரம் வீதம் பன்னிரெண்டு ராசிகளில் நேரம் ஒரு நாளில் பயணிக்கும்.
( 24 மணி நேரம் / 12 ராசிகள் = 2 மணி நேரம்).
தினமும் நேரம் சூரியன் இருக்கும் ராசியில் தான் துவங்கும். உதாரணமாக சித்திரை மாதம் ( ஏப்ரல் 14 முதல் மே 15) காலை 5.30 மணி மேஷ ராசியில் துவங்கும். 5.30 என்பது இந்திய தேசிய மணி. ( IST)
காலை 5.30 துவங்கி 7.30 வரை இரண்டு மணி நேரம் , நேரமானது மேஷ ராசியில் பயணிக்கும். 7.30 முதல் 9.30 வரை ரிஷபம் என இரண்டு இரண்டு மணி நேரமாக பன்னிரு ராசிகளை 24 மணி நேரத்தில் நேரமானது கடக்கும்.
மேலே நேரம் என நான் சொன்னதை வடமொழியில் எளிமையாக லக்னம் என சொன்னார்கள். லக்னம் என்பது ராசிநிலையில் நேரம் காட்டும் குறியீடு என அறிக. மிகவும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது , சூரியன் இருக்கும் ராசியிலிருந்து தான் லக்னம் ஆரம்பிக்கும். சித்திரை என்பதால் மேஷ ராசியில், ஐப்பசி என்றால் துலாராசியில் என சூரியன் இருக்கும் ராசியில் தான் காலை 5.30க்கு லக்னம் துவங்கும்.
லக்ன ஓட்டத்தையும் சூரியனின் மாற்றத்தையும் எளிமையாக நினைவில் வைக்க கடிகார முள் சிறந்த உதாரணம். லக்னம் எனும் பெரிய முள் ராசி மண்டலத்தை 30 முறை சுற்றினால், சூரியன் எனும் சின்ன முள் ஒரு ராசி நகரும். எந்த வருடமானாலும் லக்னம் மற்றும் சூரியனின் இந்த மாற்றம் நிலையானது.
-------------------------------------------------------------------
கேள்வி நேரம் :
28 பிப்ரவரி ஆம் தேதி காலை 10 மணிக்கு பிறந்தவருக்கு சூரியன் மற்றும் லக்னம் எந்த ராசியில் இருக்கும் ?
பின்னூட்டத்தில் பதில் சொல்லவும்.
-----------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள் :
டீக்கடையில் அண்ணாச்சிகள் இருவர் அரசியல் பேசுகிறார்கள்.
அண்ணாச்சி 1 : ஏலே கேட்டியா.. புதுவருசம் சனவரிக்கு மாத்தீட்டாகல்லே..வெளிநாட்டுக்காரன் கணக்கா நாமும் கொண்டாடலம்வே..
அண்ணாச்சி 2: எல்லாத்தையும் வெளிநாட்டுக்காரன் கணக்க செஞ்சா அடுத்த தேர்தல்ல பேப்பரு இலவசமா கொடுப்பானுவே. போயி சோலிய பாரும்.
17 கருத்துக்கள்:
>>28 பிப்ரவரி ஆம் தேதி காலை 10 மணிக்கு பிறந்தவருக்கு சூரியன் மற்றும் லக்னம் எந்த ராசியில் இருக்கும்?<<
மேஷராசி (7 1/2 பாகை அஸ்வினி நச்சத்திரம்னு நினைகிறேம்)
திரு ஓம்கார் அவர்களே,
அருமையாக & எளிமையாக எளிதில் புரியும் வகையில் விளக்குகிறீர்கள்.
உங்கள் கேள்விக்கு விடை (i.e. எனக்குத் தெரிந்த விடை :) ): சூரியன் கும்பத்திலும் லக்னம் மேஷத்திலும் இருக்கும்.
மிக்க நன்றி!!
உங்கள் மாணாக்கன் வினோத்
இன்னும் உங்க பழைய பதிவெல்லாம் படிச்சு முடிக்கல. அப்பறமா கேள்விக்கு விடையெல்லாம் சொல்லறேன். படிச்ச வரைக்கும் ரொம்ப எளிமையாத்தான் இருக்கு. ரொம்ப நாள இதுல என்னதான் இருக்குன்னு மண்டைக் குடைச்சல் இருந்துது. இப்பவும் இருக்கு :))) தொடர்ந்து எழுதுங்க. நன்றி,
கேக்க மறந்துட்டேனே... உங்களுக்கு 108 வயசுதான் ஆச்சா? ரொம்ப சின்னவரா இருப்பீங்க போல. எனக்கு 378 முடிஞ்சு 419 நடக்குது :)))))))))))))
present sir,
Ans for questions:
kumbathil suriyan and lagnam meenam
Very good lesson. But one thing is missed if u don't give sun rise time in the question thn its problem for beginer to know.
Yoga
Answer to the question. Sun in Kumbam and langnam in meenam.
Correction lagnam in mesham.
எளிமை.தெளிவு.அருமை.நன்றி,ஸ்வாமிஜி.
//தமிழனுக்கு சொந்தமான நாள்காட்டியை உருவாக்க இங்கு நிறைய குடிதாங்கிகள் இருக்கிறார்கள்.//
:))
சாமி கடி தாங்க முடியவில்லை (சொறியச்சொல்லாதீர்கள்)
கேள்விக்கு விடை மேட லக்னம் , கும்பத்தில் சூரியன் என்று நினைக்கிறேன்.
அரசியல் நமக்கு வேண்டாமே.
பிப்ரவரி 28 என்பது மாசி 16 , மாசி மாதம் சூரியன் இருக்கும் ராசி கும்பம்,
அன்று சூரிய உதயம் காலை 6.30 மணிக்கு ஆகவே அன்று காலை 6.30 முதல் 8.30 வரை கும்ப லக்னம், 8.30 முதல் 10.30 வரை மீன லக்னம். ஆகவே உங்கள் கேள்விக்கு விடை. சூரியன்-கும்ப ராசி. லக்னம்-மீனம்.
என்ன சரியா?
திரு மதி,திரு வினோத், திரு மகேஷ், திரு யோகானந்தம், திரு க்ரிஷ், திரு கேஎஸ், திரு ஷண்முகப்ரியன், திரு ஆனந்தன்.
உங்கள் வருகைக்கு நன்றி.
கேள்விக்கான விடை :
சூரியன் இருக்கும் ராசி கும்பம்.
லக்னம் இருக்கும் இடம் மேஷம்.
திரு மதி, திரு வினோத், திரு கிருஷ் உங்கள் விடைகள் சரி.
நாம் இந்திய நேரத்தில் (IST )கணிப்பதால் நமக்கு சூரிய உதயம் தேவை இல்லை.
சூரிய உதயத்தை கொண்ட கணிப்பதில் நிறைய குழப்பம் உண்டு. உங்கள் பிறந்தெ நேர லக்னம் கூட இதே முறையை பயன்படுத்தி கணித்துபாருங்கள்.
திரு ஓம்கார் அவர்களே,
இந்தப் பாடம் தொடர்பாக சில கேள்விகள் (உங்கள் கேள்விக்கு நான் சரியாக பதிலளித்ததால், இப்பொழுது என் முறை :) ):
(1) "சூரியன் ஒரு டிகிரி செல்ல ஒரு நாள் எடுத்துகொள்வதால், ஒரு ராசியை முப்பது நாட்களில் கடந்துவிடுவார்." -- அப்படியானால் 12 ராசிகளை 360 நாட்களில் கடந்து விடுவாரே? மீதமுள்ள 5.25 நாட்கள் எவ்வாறு பங்கிடப் படுகின்றன?
(2) சித்திரை மாதம் என்பது April 14 - May 15ஆ அல்லது April 15 - May 15 ஆ?
(3) சித்திரை மாதத்தில் மேஷ லக்னம் எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடியும்?
(அ) 5:30 - 7:30
(ஆ) 5:30 - 7:29
(இ) 5:31 - 7:30
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி!!
வினோத்
*********(1) "சூரியன் ஒரு டிகிரி செல்ல ஒரு நாள் எடுத்துகொள்வதால், ஒரு ராசியை முப்பது நாட்களில் கடந்துவிடுவார்." -- அப்படியானால் 12 ராசிகளை 360 நாட்களில் கடந்து விடுவாரே? மீதமுள்ள 5.25 நாட்கள் எவ்வாறு பங்கிடப் படுகின்றன?
*********************
கட்டுரையிலேயே சொல்லி இருக்கிறேன்.
ஐந்தேகால் நாட்கள் அதிகம் வருவதற்கு காரணம் பூமியின் சுற்றுபாதை நீள்வட்டமாக இருப்பதால் அகண்ட வளைவுகளில் அதிகமாக காலத்தை சூரியன் எடுத்துக்கொள்கிறார்.
விளக்கமாக சொல்ல வேண்டுமானால்...
மகரம் மற்றும் கடகராசியிலும் கன்னி மற்றும் மீன ராசியிலும் சூரியனின் நகர்வு கூடுதலாக இருக்கும்
**********(2) சித்திரை மாதம் என்பது April 14 - May 15ஆ அல்லது April 15 - May 15 ஆ?
*************
சூரிய சிந்தாந்தம் எனும் இந்த மாதங்கள் துவங்கும் சரியான ஆங்கில தேதி சொல்ல இயலாது.
ஆங்கில மாதத்தின் 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்குள் இருக்கும்.
சில வருடங்களில் இது 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நீடிப்பதும் உண்டு. சூரியன் நகர்வை பொருத்து தான் நமக்கு நாள்காட்டி அமைகிறது. ஆங்கிலம் போன்று நிலையானது கிடையாது.
*******(3) சித்திரை மாதத்தில் மேஷ லக்னம் எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடியும்?
(அ) 5:30 - 7:30
(ஆ) 5:30 - 7:29
(இ) 5:31 - 7:30
******
Aptitude test போல் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி :).
அ என்பதே சரியான விடை. 5.30க்கு தான் மேஷம் துவங்கும், மீன ராசி முடியும். காரணம் ராசிமண்டலம் வட்டமாக இருப்பதால் ஆரம்பமும் முடிவும் ஒன்றுதான்.
திரு ஓம்கார் அவர்களே,
உங்கள் விரிவான விளக்கத்துக்கு ந்ன்றி.
"சூரிய சிந்தாந்தம் எனும் இந்த மாதங்கள் துவங்கும் சரியான ஆங்கில தேதி சொல்ல இயலாது." -- அப்படியானால் சூரிய சிந்தாந்த நாட்காட்டி இணையத்திலோ அல்லது புத்தக வடிவிலோ கிடைக்குமா? உங்களது இந்த அருமையான பாடங்களைக் கற்று அதனை பயன்படுத்திப் பார்க்க எண்ணும் போது இந்த நாட்காட்டி விவகாரம் குழப்பி விடக் கூடாதல்லவா. :)
3-வது கேள்வி/ பதில் குறித்து: ஒருவர் சித்திரையில் காலை 5:30 க்குப் பிறந்தால், லக்னம் மேஷமாகவோ or மீனமாகவோ இருக்கலாமா, அல்லது மேஷமாக (i.e. துவங்கும் லக்னம்) மட்டுமே இருக்க முடியுமா?
ரொம்ப கேள்வி கேட்டு படுத்துகிறேன் என்று தோன்றினால் தெரிவிக்கவும், வாயை மூடிக் கொள்கிறேன் :).
நன்றி (மீண்டும்)!!
வினோத்
வணக்கம்.. ஸ்வாமிஜி.. தங்களின் ஜோதிடம் பற்றிய மேலும் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Swamiji,
namaskar.
I think with this method one can correct his exact birth time and accurate natal chart . am i correct?
I have one previous class doubt regarding child , how can we predict child planet from one birth chart?
Post a Comment