ராசிநிலையில் உடல் உறுப்புக்கள்
ராசிகளின் தன்மைகளை சென்ற வகுப்பில் பார்த்தோம். ஒவ்வொரு ராசியும் மனித உடலின் சில பாகங்களை குறிக்கும்.மேஷம் முதல் மீனம் வரை பன்னிரு ராசிகள் குறிக்கும் உடல் பகுதிகள் எளிதில் புரிய படமாக கீழே கொடுத்துள்ளேன்.
ராசிகள் குறிக்கும் உடல் உறுப்புகளை மனதில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி உண்டு. ஒரு மனிதனை தலை முதல் பாதம் வரை மேலிருந்து கீழாக பன்னிரண்டு பிரிவாக பிரித்தால் எளிமையாக கூறலாம்.
ராசிகள் மட்டுமல்லாமல் , கிரகக்களும் மனித உடலின் உறுப்புக்களையும் வியாதியின் தன்மையையும் குறிக்கும்.
சூரியன் : ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம்
சந்திரன் : பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரயீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள்
செவ்வாய்: அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்
புதன் : நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு
குரு : ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்
சுக்கிரன்: சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்
சனி : தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்
ராகு : அதிகமான வலி, அலர்ஜி
கேது : வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்
மனித உடலில் ஏற்படும் நோய் மற்றும் உறுப்பு இழத்தல் (அங்கஹீனம்) ஆகியவற்றை அறிய மேற்கண்ட தன்மைகள் பயன்படும். மேலும் ஒருவரி உடலில் இருக்கும் மச்சம் மற்றும் தழும்புகள் எந்த பகுதியில் இருக்கிறது எனவும் காணலாம். கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உடல் உறுப்பை குறிக்கிறது, ஆனால் ராகு கேதுக்கள் உறுப்புகளை குறிக்காது. காரணம் ராகு-கேதுக்கள் உருவமில்லா கிரகம் என்பதால், அவை குறிக்கும் விஷயமும் உருவம் இல்லாமல் இருக்கிறது. வலியை கண்களால் பார்க்க முடியுமா?
ராசி தன்மையுடன் இணைத்து கிரகத்தன்மையை பயன்படுத்தும் பொழுது பலன்கள் மேலும் துல்லியமடையும்.உதாரணமாக நோய் கொடுக்கும் கிரகம் ஒருவருக்கு ரிஷபராசியில் இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு கண், காது, மூக்கு , வாய் மற்றும் தொண்டை பகுதியில் நோய்வரும் என பொதுவாகத்தான் சொல்ல முடியும். ஆனால் கிரகத்தன்மையை இணைத்தால் மேலும் துல்லியமாக்கலாம்.
நோய் கொடுக்கும் கிரகம் சூரியனாக இருந்து ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு கண் சம்பந்தபட்ட நோய் மட்டுமே வரும் என சொல்லலாம். காரணம் ரிஷப ராசிக்கும் சூரியனுக்கும் பொதுவான தன்மை கண்கள். மேலும் நீங்கள் நன்கு சிந்திப்பவராக இருந்தால் பலனை ஆழமாக சொல்ல முற்படுவீர்கள்.
கண்களில் நோய்வரும் என்பது மட்டுமல்லாமல் ஜாதகர் ஆணாக இருந்தால் வலது கண்ணிலும், பெண்ணாக இருந்தால் இடது கண்ணிலும் நோய்வரும் என சொல்லி உங்கள் பலனை துல்லியமாக்கலாம்.
மருத்துவ ஜோதிடம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஓர் தனிப்பிரிவு. நடைமுறை உலகிற்கு நன்கு பயன்படக்கூடிய துறையும் கூட. உயர்நிலை மருத்துவ ஜோதிடம் கற்றால் மருத்துவ ஜோதிடர் ஆகி நோய்வரும் தன்மை, எது போன்ற மருத்துவ முறையில் குணமாகும், எவ்வளவு காலம் அவர் நோயில் துன்பப்படுவார் போன்ற விஷயங்காளை சொல்ல முடியும். அனைத்துக்கும் இதுதான் அடிப்படை, எனவே இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :
இந்த வார கேள்வி :
பாடத்தில் சூரியன் ரிஷபத்தில் இருந்தால் கண் நோய் வரும் என சொல்லி இருந்தேன். குரு துலா ராசியில் இருந்தால் எந்த உறுப்பில் நோய் வரும்?
பின்னூட்டத்தில் உங்கள் பதில்களை கூறுவும்.
----------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்
டாக்டருக்கும் ஜோஸியருக்கும் என்ன வித்தியாசம்?
டாக்டர் கிட்ட போன நம்ம பல்ஸை பார்ப்பாரு
ஜோஸியர்கிட்ட போன நம்ம பர்ஸை பார்ப்பாரு
22 கருத்துக்கள்:
பாடம் அருமை! நன்றி
ஸ்வாமி,
துலா ராசியில் நீசமடையும் சூரியனால் ஏற்படக்கூடிய துன்பங்கள்
சிறுநீரகம்,கருப்பை ஆகிய பாகங்கள் பாதிக்கப்படுவதால் உண்டாகும்.
குருவே , குரு துலா ராசியில் இருந்தால் வயிறு, ஜீரன உறுப்புகள் சம்பந்தமான நோய் வரலாம், கருப்பை கட்டி வரவும் வாஇப்பு உள்ளது
present swami
ungal kelvikku pathil
ஜீரன உறுப்புகள் சம்பந்தமான நோய
Very good lesson
by
Yoganandam
நோய்யை கொடுக்கும் கிரகத்தை எவ்வாறு கண்டு பிடிப்பது ?தய கூர்ந்து விளக்குங்கள்
//டாக்டருக்கும் ஜோஸியருக்கும் என்ன வித்தியாசம்?
டாக்டர் கிட்ட போன நம்ம பல்ஸை பார்ப்பாரு
ஜோஸியர்கிட்ட போன நம்ம பர்ஸை பார்ப்பாரு//
அருமை! நன்றி
ஸ்வாமி,
சூரியன் நீசமடையும் துலா ராசியில் குரு இருந்தால் ஏற்படக்கூடிய துன்பங்கள்
சிறுநீரகம்,கருப்பை ஆகிய பாகங்கள் பாதிக்கப்படுவதால் உண்டாகும்.
வணக்கம் ஸ்வாமிஜி,
பாடம் அருமை!
அது என்ன "நோய் கொடுக்கும் கிரகம்" ? 6 ம் பாவத்தின் குறிகாட்டிகளா?
குரு துலா ராசியில் இருந்தால் எந்த உறுப்பில் நோய் வரும்?
ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி(கருப்பை) தொடர்பான நோய்கள்.. கரெக்டுனு தான் நினைக்கிறேன் கரெக்டா?
பாடங்கள் அருமையாக இருக்கின்றன..
ஸ்வாமிஜி ஒரு வேண்டுகோள்: வாரத்திற்கு இரு முறை பாடங்களை பதிப்பிக்க வேண்டுகிறோம்....
//நோய்யை கொடுக்கும் கிரகத்தை எவ்வாறு கண்டு பிடிப்பது ?தய கூர்ந்து விளக்குங்கள்//
ரிப்பீட்டேய்!
திரு நாமக்கல் சிபி,
வருகைக்கு நன்றி. கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கலாமே?
திரு ராம் குமார், திரு யோகானந்தம்,
பாடத்தை கவனமாக கவனிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.
உங்கள் விடை சரியானது.
சகோதரி கனிமொழி
உங்கள் வருகைக்கு நன்றி. (நீங்க அவங்க இல்லயே ;) )
திரு அணுயோகி, முதல் பாதி விடை சரியானது.
ஜீரண உறுப்பு பாதிக்கப்படும்.
திரு தியாகராஜன் மற்றும் பிற வாசக அன்பர்கள்,
இந்த தளத்தில் வரும் ஜோதிட பாடங்களை மனதில் உள்வாங்க வேறுவகையான ஜோதிட ஞானம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்பே ஜோதிடம் தெரிந்திருப்பின் அதை விட்டு விட்டு வெறுமையாக வாருங்கள்.
கிரகத்தின் நீச்சம், உச்சம் என பழமையான விஷயங்களை நாம் பயன்படுத்த போவதில்லை. பாடத்தில் கேட்கப்படும் கேள்விகள் பாடம் சார்ந்தும் உங்கள் புத்திசாலித்தனம் சார்ந்தும் இருக்கும். எளிமையாக யோசித்தால் பலன் செல்லிவிடலாம்.
//நோய்யை கொடுக்கும் கிரகத்தை எவ்வாறு கண்டு பிடிப்பது ?தய கூர்ந்து விளக்குங்கள்//
இப்பொழுதுதான் ஆம் அடிப்படை படிக்கிறோம். முன்பு வந்த பாடத்தில் கிரகத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பிறகு சொல்கிறேன் என சொன்னே.
உங்கள் ஜாதகத்தில் பலன் பார்க்க அவ்வளவு அவசரமா? :)
பொருத்திருங்கள் விரைவில் தெரிந்துகொள்ளலாம்
ஜீரண உறுப்பு சுவாமி! Digene சாப்பிடவேண்டும்! He he :)
சுவாமி, தாங்கள் Twitter kku வரவேண்டும் என அன்புடன் வேண்டிகொள்கிறேன். என் Twitter ID - dineshbabu. http://www.twitter.com
Thanks Swami.
///வெறுமையாக வாருங்கள்.///
OK ஸ்வாமிஜி.
ஸ்வாமிஜி !
இலங்கை போர் பற்றி, நம் தமிழர் நிலை பற்றி சோதிடம் என்ன கூறுகிறது. சற்று விளக்கமாக கூற வேண்டுகிறேன்.
Swami,
Please forgive to me if I am wrong.According to astrology each person got their own lifeline as they have their own Jathagam.Then how can 200,000 people can die togther during Tsunami? Don't tell me everybody's Jathagam was same and the planet positions are same?.
திரு ஓம்கார் அவர்களே,
உங்கள் பாடங்கள் மிகவும் எளிமையாக, எளிதில் புரியும்வண்ணம் உள்ளன. தொடர்ந்து கற்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.
நன்றி!
வினோத்
Post a Comment