Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, February 27, 2009

சுவையான நிகழ்சிகள்


நீண்ட தூர ரயில் பயணங்கள் எனக்கு பிடித்தமான ஒன்று. விமான பயணங்கள் சென்றாலும், சூழல் அமைந்தால் ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பேன். ஒவ்வொரு ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலும் புதிய மொழி,வித்தியாசமான உடை, உணவுகள் என விதவிதமான சுவை. பாரத நாட்டில் ரயிலில் பயணம் செய்வது கல்யாண விருந்து போல அறுசுவையும் இருக்கும். எனக்கு ரயில் பயணங்களில் ஏற்பட்ட அனுபவத்தை கூறவேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதலாம்.

சில மாதங்களுக்கு முன் ரயிலில் சென்னையை நோக்கி பயணம் செய்ய கோவையில் ரயிலில் ஏறினேன். எனது இருக்கையில் வேறு ஒரு நபர் அமர்ந்திருந்தார். இதற்கும் அந்த ரயில் கோவையிலிந்து தான் கிளம்புகிறது. அவரிடம் "ஐயா இது எனது இருக்கை, தயவு செய்து உங்கள் இருக்கையில் அமருங்கள்” என்றேன்.

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “சாமி, உலகமே நிரந்தரம் கிடையாது. நீங்க இந்த சீட் மேல பற்றுவைக்கலாமா? " என்றார்.

எனக்கு எங்கிருந்து தான் அந்த ஆவேசம் வந்ததோ.. “ உலகமே நிரந்தரம் இல்லாத பொழுது இந்த ரயிலில் ஏன் பயணிக்கிறீர்கள். நீங்கள் உங்க இருக்கையில் அமரவில்லை என்றால் போலீசை கூப்பிடுவேன்” என்றேன்.

அடக்கத்துடன் அவர் இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆன்மீகவாதிகள் என்றால் பலருக்கு கிண்டாலாகவே இருக்கிறது.

அது இருக்கட்டும். அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் தத்துவம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்குமா?

------------------------------------------------------------------------

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஏராளம்.


ஆன்மீக சொற்பொழிவுக்கு இடையில் கேள்விகளை கேட்கும் இயல்புடைய வாரியார், ஒரு சிறுவனை எழுப்பி கேட்டார்.."தம்பி உங்க பெற்றோருக்கு நீ எத்தனாவது குழந்தை? "

"நான் தான் கடைசி பையன்" என்றான் அவன்.

உடனே வாரியார்.. “தம்பி அதை நீ முடிவு செய்ய கூடாது, உங்க பெற்றோர்தான் முடிவு செய்யனும்” என்றார்.

இதற்கு பேருதான் டைமிங்கா?

----------------------------------------------------------------------------

ஒரு புகழ் பெற்ற ஆன்மீக சொற்பொழிவாளர் அவர்.

சென்னையில் எனது மாணவரும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.
மாணவரின் இல்லத்திற்கு மதிய உணவுக்காக நானும் சொற்பொழிவாளரும் அமர்ந்திருந்தோம்.

எனக்கு ஒரு பழக்கம். உணவு சாப்பிடவுடன் எதையும் மிச்சம் வைக்கமாட்டேன். உணவு சாப்பிட்டவுடன் எனது இலையை யாராவது பார்த்தால் இன்னும் இவருக்கு உணவு பரிமாறவில்லை என நினைப்பார்கள். அவ்வளவு தொழில் சுத்தம் :))


சொற்பொழிவாளர் எனது இலையை பார்த்துவிட்டு என்னிடம் நேரடியாக கூறாமல் எனது மாணவரிடம்..

”இலையில் ஏதாவது சில உணவை மிச்சம் வைக்க வேண்டும். இலையை குப்பை தொட்டியில் போடும்பொழுது தெரு நாய் சாப்பிட ஏதுவாக இருக்கும். புண்ணியம் பெருகும்” என்றார்.

சிறிது இடைவெளி விட்டு ..."நமக்கு சாப்பிட கொடுக்காம ஏதோ ஒரு நாய் இதுக்கு முன்னாடி காலி பண்ணிடுச்சேனு அந்த நாய் நினைக்கும்" என சொல்லி சிரித்தார்.

நான் புன்கைத்தபடியே சொன்னேன், “ இதை எல்லாமா மனுஷன் சாப்பிடறானு நாய் நினைக்ககூடாதுனு தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். புண்ணியம் வேண்டுமானால் தனியாக தர்மம் பண்ணனும். நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்.”

நீங்க என்ன நினைக்கிறீங்க?

22 கருத்துக்கள்:

அருண் said...

\\அது இருக்கட்டும். அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் தத்துவம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்குமா?\\

நச். சுத்தமா பிடிக்காது.

கோவி.கண்ணன் said...

இந்த மாதிரி Bit Bit கோர்வை பதிவுகளுக்கு கதம்பம்(அண்ணாச்சி), அவியல்(பரிசல்), கிச்சடி(மணிகண்டன்) என்று பெயர் வைக்கிறார்கள், நீங்க ஆன்மிகவாதியாக இருப்பதால், 'பஞ்சாமிர்தம்' என்று பெயர் வைத்திருக்கலாம்.
:)

கோவி.கண்ணன் said...

//எனக்கு ஒரு பழக்கம். உணவு சாப்பிடவுடன் எதையும் மிச்சம் வைக்கமாட்டேன். உணவு சாப்பிட்டவுடன் எனது இலையை யாராவது பார்த்தால் இன்னும் இவருக்கு உணவு பரிமாறவில்லை என நினைப்பார்கள். அவ்வளவு தொழில் சுத்தம் :))
//

Same Blood !

கோவி.கண்ணன் said...

//உடனே வாரியார்.. “தம்பி அதை நீ முடிவு செய்ய கூடாது, உங்க பெற்றோர்தான் முடிவு செய்யனும்” என்றார்.//

வார்ரே......வாரியார்... இப்படி 'காம'டியாகவும் ஜோக் அடிப்பாரா ? நம்ப முடியலை :)

வெட்டிப்பயல் said...

//புண்ணியம் வேண்டுமானால் தனியாக தர்மம் பண்ணனும். நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்.”
//

கலக்கல்...

Mahesh said...

1. பிடிக்காது
2. :)))
3. ரொம்பச் சரி

நாமக்கல் சிபி said...

//நான் புன்கைத்தபடியே சொன்னேன், “ இதை எல்லாமா மனுஷன் சாப்பிடறானு நாய் நினைக்ககூடாதுனு தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். புண்ணியம் வேண்டுமானால் தனியாக தர்மம் பண்ணனும். நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்.”//

:))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அருண்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//இந்த மாதிரி Bit Bit கோர்வை பதிவுகளுக்கு கதம்பம்(அண்ணாச்சி), அவியல்(பரிசல்), கிச்சடி(மணிகண்டன்) என்று பெயர் வைக்கிறார்கள், நீங்க ஆன்மிகவாதியாக இருப்பதால், 'பஞ்சாமிர்தம்' என்று பெயர் வைத்திருக்கலாம்.//


நான் ஏன் பஞ்சாமிர்தம் என வைக்கவேண்டும் ;))
பரிசல்,மணிகண்டன் இருவரும் தொழில் முறையில் சமையல்காரர் போலவும், அண்ணாச்சி தொழில் முறை பூக்கடைகாரராகவும் இருப்பது போல் அல்லவா சொல்லுகிறீர்கள்.


ஏதோ என்னால முடிஞ்ச ஆராய்ச்சி..


வார்ரே......வாரியார்... இப்படி 'காம'டியாகவும் ஜோக் அடிப்பாரா ? நம்ப முடியலை :)

”காம”டியா சொல்லலை. லாஜிக்கா சொல்லிருக்கார். அவங்க அவங்க பார்வையை பொருத்து.. :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெட்டிப்பயல்,
திரு மகேஷ்,
திரு நாமக்கல் சிபி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

//அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் தத்துவம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்குமா?//

ஏஞ்சாமி அடிப்படை ஒழுங்கு இல்லாமல் தத்துவம் பேச வருமா???

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க என்ன நினைக்கிறீங்க?
//

ரொம்பச் சரி

:)

ஷண்முகப்ரியன் said...

புன்னகையை விட மெல்லிய சங்கீதம் ஏது,ஸ்வாமிஜி?

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே.. கேள்விகேட்ட பதில் சொல்லனும், திருப்பி கேள்வி கேட்க பிடாது. :)

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//
புன்னகையை விட மெல்லிய சங்கீதம் ஏது,ஸ்வாமிஜி?//

நிச்சயம் கிடையாது.

குழந்தையின் சினுங்கள், தாயின் அரவணைப்பு , கிழவியின் முக சுறுக்கம். இவை அனைத்தும் கூட சங்கத சுவடுகளே..

பரிசல்காரன் said...

அருமை ஸ்வாமிஜி..

தப்பா நெனைக்கலைன்னா ஒண்ணு சொல்லவா?

இந்த மாதிரியான கலவைக் கருத்துகளுக்கு கேச்சிங்கா எதுனா டைட்டில் குடுத்து, தேதியோட போடுங்கஜி. ரொம்ப நல்லா இருக்கு. நிறைய பேர்கிட்ட போய்ச் சேரட்டுமே...

இன்னொன்னு சொல்ல நெனைச்சு மறந்துடுச்சு.. ரகுமான் ஆஸ்கார் வாங்கின அடுத்த நிமிஷம் உமாகிட்ட உங்களைப் பத்தி சொன்னேன். (நீங்க எழுதியிருந்தீங்கள்ல) ஜோதிடம் பற்றிய நம்பிக்கை/அவ நம்பிக்கை - அதெல்லாம் விடுங்க.. நம்மாளு சொன்னாரேன்னு ஒரு சந்தோஷம்தான்!

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி பரிசல்.

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு?

கோவியாரும் இதேதானே சொன்னார். உங்கள் விமர்சனமும் கருத்தும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம்.

//இந்த மாதிரியான கலவைக் கருத்துகளுக்கு கேச்சிங்கா எதுனா டைட்டில் குடுத்து, தேதியோட போடுங்கஜி. ரொம்ப நல்லா இருக்கு. நிறைய பேர்கிட்ட போய்ச் சேரட்டுமே...//


கேச்சிங்கா டைட்டில்னா....?

பந்து, கோந்து இதில் எதுனா வைக்கலாமா :))

ஆஸ்கார் ரஹ்மான் பற்றிய பாராட்டுக்களுக்கு நன்றி.

ரகுமான் என சொல்லாதீர்கள், ரஹ்மான் என சொல்லுங்கள். அதுதான் சரியான அரேபிய உச்சரிப்பு.

இராமாயணத்தில் வரும் மாரீச்சன் தான் ரகு-மான் :)).

Raju said...

//நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்//
அருமையான வரிகள். சிலர் கொங்கனிகள் / பிராமணர்கள், உண்ணும் முன், கட்டாயம் சிறிது பரிமாறப்பட்ட உணவில் இருந்து, கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஓரம் வைப்பார்கள். எச்சில் இல்லாத ஐட்டம்!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//நீங்க என்ன நினைக்கிறீங்க?///

நீங்க சொன்னது மிகசரின்னு நினைக்கிறேன் !

Vin said...

Swami ...Sorry if I am wrong.
Leaving some food for the dogs is not to gain "Punniyam". we can't always do things just to gain anything.I feel "Punniyam" should be the reward for the noble action but doesn't meant that we can always expect for that action. Please leave some food for dogs,ants etc.

kargil Jay said...

ஸ்வாமிஜி
அனேகமாக நீங்கள் குறிப்பிடும் 'அனைத்தும் அறிந்தோம் யாம்' சொற்பொழிவாளர் சுகி.சிவம் என்று நினைக்கிறேன். ஆன்மீகத்தின் ஆழத்தை அறியாமல், எதிரில் இருப்பவர்களை பாமரர்களாக‌ எண்ணுபவர் அவர். சன் டீவி பார்க்கும் பாமரர்க்கு அவர் சொல்வதே தெய்வ வாக்கு.

பட்டாம்பூச்சி said...

1. நச்.பிடிக்காது
2. வாரியார் சுவாமிகளுக்கு டைமிங் சென்ஸ் அதிகம் :)))நன்று.
3. ரொம்பச் சரி.