Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 11, 2009

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்குமா?


சிறப்பான திறமையை கொண்டவர்களை பாரதம் எப்பொழுதும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் திறமையை பாராட்டும் அனைத்து துறையிலும் இவர்கள் ஒருவரேனும் இருப்பார்கள். நோபல் பரிசு முதல் ஆஸ்கார் வரை எந்த பட்டியல் எடுத்தலும் அதில் நம்மவர்கள் இடம் பிடிக்க தவறுவதில்லை. மேற்கத்திய நாடுகளுக்கு பாரதத்தின் மேல் ஓர் அபிமானம் வர இதுவும் ஓர் காரணம் என சொல்லலாம். ராமன் விளைவோ ரஹமான் விளைவோ அவர்களுக்கு வித்தியாசம் இல்லை காரணம் அவர்கள் சிறப்பானவற்றை ரசிக்க தவறுவதில்லை.

திறமைசாலிகளுக்கு பணமோ புகழோ நோக்கமல்ல. மக்கள் தங்களை ரசிக்கிறார்கள் என்பதை விட வேறு எதுவும் தேவையில்லை. ஒரு திறமைசாலிக்கு உலகின் உயர்விருதை கொடுத்துவிட்டு மக்கள் உங்களை ரசிக்கவில்லை என சொன்னால், அதைவிட துன்பம் அவருக்கு இல்லை என சொல்லாம். மாற்றாக.. விருதுகள் கொடுக்கப்படாமல் இருந்தாலும் மக்களின் உயிரில் கலந்திருந்தால் திறமைசாலிகளுக்கு தினமும் விருதுகள் கிடைத்த மகிழ்ச்சி உண்டாகும்.

சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்பவர் திறமையான நாடகங்களை நடத்தி மக்களின் மனதில் நின்றவர். நாடக உலகின் தந்தை என போற்றப்பட்டவர். அவருக்கு உலகின் எந்த உயர்விருதும் கிடைக்கவில்லை. அவரின் திறமையால் தமிழகம் இன்னும் திறமையான திரை துறை சார்ந்தவர்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் திரையுலகில் யாருக்கு விருது கிடைத்தாலும் சங்கரதாஸருக்கு கிடைத்து என்றே சொல்லவேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சிலர் விருது பெற்று புகழ் அடைகிறார்கள். சிலரால் விருதுகள் புகழடைகிறது.

ஆஸ்கார் பரிசு எனும் அகாடமி அவார்டுகள் ஒருவரின் திறமைக்காக கொடுக்கப்படும் பரிசாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் உலக மக்கள் கவனத்திற்கு ஓர் திறமையாளர் வருகிறார் என்றால் ஆஸ்கார் தேவைப்படுகிறது என சொல்லலாம். முன்பு சொன்னது போல ஆஸ்காருக்கு புகழ் சேர்க்க திரு ஏ ஆர் ரஹ்மானுக்கு இரண்டு பரிந்துரைகள் உள்ளன. இந்த சூழலில் அவரின் பிறப்பு ஜாதகத்தை ஆராயவேண்டும் என தோன்றியது.


ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நேர தகவல்கள் தெளிவற்ற நிலையில் இருந்ததால் பல ஜோதிட முறைகளின் துணைகொண்டு அவரின் ஜாதகத்தை உருவாக்கி உள்ளேன். இவரின் ஜாதகம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

பெயர் : ஏ ஆர் ரஹ்மான்
தேதி : 6-ஜனவரி-1966
நேரம் : 18:42 ISD
இடம் : சென்னை



கடக லக்னத்தில் பிறந்திருக்கிறார்.ஒருவர் கலைத்துறையில் புகழ் பெற 3,5 மற்றும் 11ஆம் வீடுகள் தொடர்பு தேவை. அதன் படி 5ஆம் மற்றும் 10ஆம் வீட்டுக்கு உண்டான செவ்வாய் 7ஆம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்துள்ளார்.

லக்னாதிபதி சந்திரன் 12ஆம் பாவகத்தில் இருப்பதும் சனிக்கு திரிகோணத்தில் இருப்பதாலும் அவரின் இயற்ப்பெயரை மாற்றும் சூழல் ஏற்பட்டது. மேலோட்டமாக ஜோதிடத்தை அறிந்தவர்கள் இவரின் ஜாதகத்தை பார்த்தால், பல தோஷங்கள் இருப்பதாக சொல்லி வாதிடுவார்க்ள். உண்மையில் நட்சத்திர நிலை வைத்து ஆராய்ந்தோமானால் அனைத்து கிரகங்களும் மேன்மையை கொடுக்கிறது.

நடப்பு தசா நாதன் சனி 1991 முதல் இவருக்கு சிறப்பான மேம்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். சனி தசா 2010 மார்ச் மாதம் வரை இருக்கிறது. சனிதசா நடந்தால் அலறி ஓடும் கனவான்களே பாருங்கள் இவரை. ஒளவை சொன்னது போல இளமையில் வறுமை கண்டவருக்கு செல்வ வருமையை கொடுத்தது சனி தசா காலமே.

சனிதசா கலத்திற்கு பிறகு வரும் புதன் தசா காலம் இவரின் புகழை மேலும் ஓங்கச் செய்யும். புதன் தசா காலத்தில் சனிதசாவில் சாதித்ததெல்லாம் எள் அளவே என சொல்லுவார்கள்.


ஆஸ்கார் கிடைக்குமா?

பிப்ரவரி 22ஆம் தேதி ஆஸ்கார் விருதுகள் வெளியிடப்படுகிறது. இவர் பெயர் இரண்டு நிலைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் ஜாதக ரீதியாக சனிதசா, குரு புக்தி மற்றும் சுக்கிரன் அந்திர காலம் நடைபெறுகிறது. சனி,குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இவருக்கு சாதக பலனை தரும் அமைப்பில் இருக்கிறது. கோச்சார கிரகங்கள் சிறிது சாதகமற்று இருப்பதால் அவருக்கு முழுமையான மேன்மை கிடைக்காது என சொல்லலாம். கிடைக்க வேண்டிய இரண்டில் ஒரு விருது கிடைக்க வாய்ப்புண்டு. முடிவாக சொல்லவேண்டுமானால் ஆஸ்கார் இவருக்கு கிடைத்து ஆஸ்கார் விருது புகழ்பெறும்.

ஜோதிட ரீதியாக ஆய்வு தேவையா?

ஆஸ்கார் விருது பலமுறை முயற்சி செய்து கிடைக்காதவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு பல அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒருவருக்கு கிரக பலன் இல்லையென்றால் கிடைப்பது சிரமமாகி விடுகிறது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?


ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்..




30 கருத்துக்கள்:

பாண்டித்துரை said...

எல்லா புகழும் ஏ ஆர் ரஹ்மான்kay

நாமக்கல் சிபி said...

//எல்லா புகழும் இறைவனுக்கு//

உண்மை!

அவனன்றி ஆட்டுவிப்பது வேறு யார்?

கோவி.கண்ணன் said...

//ஆஸ்கார் இவருக்கு கிடைத்து ஆஸ்கார் விருது புகழ்பெறும்.
//

ஸ்வாமி சோதிடம் பலித்தால் ஸ்வாமியும் புகழடைவார் !
:)

Ungalranga said...

//ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்..//

மறுக்க முடியாத உண்மை...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பாண்டித்துரை,
திரு நாமக்கல் சிபி,
திரு ரங்கன்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவியாரே..

எதாவது பழைய பகை உண்டோ ;)?

ஒரு ஜோதிடரரின் விளம்பரத்தை பத்திரிகையில் பார்த்ததுண்டா? 1976ல் எம்ஜிஆர் முதல்வர் ஆவர் என சொன்ன ஒரே ஜோதிடர் என விளம்பரம் செய்வார். 1976க்கு பின் அவர் உருப்படியாக சொல்லதில்லை என நினைக்கிறேன்.

அதுபோல எனது விளம்பரங்களில் ”ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்குவார் என முன்பே சொன்னவர்” என போட்டுக்கொள்ளத்தான்.. :)

என்ன செய்வது சமுதாயத்திற்கு நன்மை செய்யும் போலியோ மருத்து கூட சினிமாக்காரர்கள் சொன்னால்தான் மக்கள் குழந்தைக்கு கொடுக்கிறார்கள்.

இப்படியாவது ஜோதிடம் பரவட்டுமே..

அருண் said...

ஸ்வாமிகள் அருளால் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கட்டும்.

ஷண்முகப்ரியன் said...

'சொல் ஜொதிட முறையில்'கணித்ததாகச் சொல்கிறீர்களே அப்படி என்றால் என்ன ஸ்வாமிஜி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன் ஐயா..

உங்களை போன்றவர்கள் எனது பதிவை ஊன்றிப்படிப்பதால் தவறுகளை களைய முடிகிறது. பல ஜோதிட முறை என்றே வரவேண்டும். நஷ்டஜாதக கணிதம் எனும் முறையில் கணித்துள்ளேன்.

வருகைக்கு நன்றி

YOGANANDAM M said...

good predictions

all the best to rahaman.

Selva said...

do you have Prabaharan's horoscope? Can you say whether we'll get tamil EElam or not. If we know for certain then all the political parties can change their stand accordingly.

Cable சங்கர் said...

உங்களிடம் என் ஜாதகத்தை காட்டி பலன் கேட்க வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொள்வது.. சுவாமிஜி..

nagai said...

i am psychologist but i think same so...

Da VimCi Code said...

ஐய்யா..

ரஹ்மான் அவர்கள் 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த வருடம் அவர் தமது 42 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

http://en.wikipedia.org/wiki/A._R._Rahman

மற்றும் பல தகவல்களின் அடிப்படையில் அந்த வருடத்தை உறுதிபடுத்திக் கொண்டேன்.நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு யோகானந்தம் உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செல்வா,

அரசியல் ரீதியானவர்களை நான் ஆய்வு செய்வதில்லை. நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேபிள் சங்கர்.

வியாபார ரீதியாக யாருக்கும் நான் ஜாதகம் பார்ப்பதில்லை. உங்களுக்கு எனது ஆலோசனை தேவைப்பட்டால் swamiomkar at gmail.com எனும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தாவின்சி கோட்,

உங்களை போல எனக்கும் குழப்பம் இருந்தது. அவரின் பிறந்த நேர தகவல்கள் சுமார் 10க்கும் மேற்பட்ட தேதிகள் இருக்கிறது.

ஜனவரி 5 அல்லது 6 என்பதிலும் குழப்பம் உண்டு.

நஷ்டக ஜாதக கணிதம் எனும் முறையில் பல நாட்கள் ஆய்வுக்கு பின் முடிவு செய்தது தான் நான் கொடுத்த தகவல்.

பிரபலமானவர்கள் தங்களது பிறந்த தேதியை சிலகாரணத்தால் மறைத்துவிடுவார்கள். உதாரணம் எம் ஜீ ஆர். சட்ட ரீதியாக அவருக்கு கொண்டாடும் பிறந்த நாள் அவரின் உண்மையான பிறந்த நாள் கிடையாது.

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல விஷ்யம் சொல்லியிருக்கிறார்...சுவமிகள்...நம்புகிரோம்...நன்றி...

ஸ்ரீதர்கண்ணன் said...

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கி விட்டார். :))))))

எம்.எம்.அப்துல்லா said...

சாமி உங்க ஆரூடம் பலித்து விட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கேனு அவார்ட்டை வாங்கிட்டார்.

அருண் said...

2 Awards!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதர்கண்ணன், அப்துல்லா அண்ணே..

நன்றி.

நான் ஆருடம் பார்த்தது ஒரு விருது கிட்டும் என நினைத்தேன். இரண்டும் வாங்கி விட்டார்.


இசை , பாடல்கள் என இரு துறையிலும் வாங்கினாரா.. அல்லது பாடல்களில் மட்டுமே இரண்டையும் வாங்கினார என தெரியவில்லை.

விரிவான செய்தியை பார்த்து விட்டு கருத்து கூறிகிறேன்.

புருனோ Bruno said...

//ஆஸ்கார் விருது பலமுறை முயற்சி செய்து கிடைக்காதவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு பல அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும்//

சாமி, இதற்கு பெயர் நக்கல்

//எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்..//
அருமையான வரி

krish said...

Swami Congrats.He got award in both.

சுரேகா.. said...

Congrats Swami !

Your prediction was Proved.
Super...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ, திரு கிருஷ், திரு சுரேகா,

உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கு நன்றி.

kargil Jay said...
This comment has been removed by the author.
kargil Jay said...

This is to announce that Swami Omkar is being awarded prestigious 'Osrayaan award' for having predicted correctly about Oscar and Chandrayaan. This award is entitled by convocation bench(people in bench without job) on the date of February 25th 2009

-----
prostrations,
Kargil Jay

vedhalam said...

ஐயா... நான் புதிய வரவு ..... உங்கள் லக்ன கணிப்புமுறை படி(26-02-2009) கணித்தல் மிதுன லக்னம் வருகிறதே????
[சூரியன் தனுஷு (5:30 am தொடங்கி ...எனவே 5:30pm to 7:30pm வரை மிதுனம் தானே ???)]

ஆனால் கடக லக்னம் என்று கனிந்து இருக்கிறே ??????