Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, February 8, 2009

சுவையான நிகழ்வுகள்

வலையுலகவாதிகளுக்கு நமஸ்காரம்...

வந்தோமா ஜோதிடம் பற்றி எழுதினோமா என்று இருக்கத்தான் இந்த வலைதளம்இருந்தது. குறுகிய காலத்தில் வலையுலக நண்பர்கள் அறிமுகமும்,அவர்களின் எழுத்தாற்றலையும் கண்டு எனக்குள் சில மாற்றங்கள் நிகழத்துவங்கின...

இனிவரும் காலத்தில் சுவையான நிகழ்வுகள் எனும் தலைப்பில் எனது வாழ்வியல் அனுபவங்கள், கேள்விப்பட்ட சுவையான சிலவற்றை இங்கே பதிவுசெய்ய இருக்கிறேன். நான் எனது மாணவர்களுடன் இருக்கும் தருணங்களில் சிலவேடிக்கையான நிகழ்வு நடைபெறும். சில கருத்துக்கள் சிந்திக்கவும், சிலகருத்துக்கள் சிரிக்கவும் வைக்கலாம்.

நன்றாக இருந்தால் பின்னுட்டம் இடுங்கள். நன்றாக இல்லை என உங்களுக்கு தோன்றினால் பின்னூட்டம் இடுங்கள் ( எதை செஞ்சாலும் எனக்கு பின்னூட்டம் வந்தா சரி ;) )
-----------------------------------------------------------------------------


நான்...
அவியல் வைக்க நான் பரிசல்காரனோ
காக்டெயில் கலக்க கார்க்கியோ
கதம்பம் சூட்ட வடகரையாரோ அல்ல.

நிகழப்போவதை சொல்ல ஜோதிடன் அல்ல..
நிகழுவதை சொல்ல இது வழியும் அல்ல
நிகழ்ந்ததை சொல்லும் நிஜமானவன்..
அகமகிழ்ந்ததை சொல்லும் எளியவன்.

( ஒன்னு கீழ் ஒன்னு போட்டாதான் கவிதையாம்...!)

---------------------------------------------------------------------------------

சில மாணவர்களுடன் திருவண்ணாமலை பயணத்தில் இருந்தேன்..

ரமணாஸ்ரமம் முன்பு இருக்கும் பழக்கடையில் இரவு உணவுக்காக பழங்கள் வாங்க மாணவர்களுடன் சென்றேன்.

பழக்கடைக்காரர் : சாமி இந்தாங்க புதுசா சப்போட்டா பழம் வந்திருக்கு. ஒரு பழமே கால் கிலோ இருக்கும். பெரிய பழம் சாமி..

நான் : சப்போட்டா பழமா இது?

மாணவர் : ஆமாம் ஸ்வாமிஜீ. என்ன சந்தேகம் இதுல?

நான் : பெரிசா இருக்கறதாலமெயின்பழம்னே சொல்லலாமே? இன்னும் என்ன "சப்போர்ட்வேண்டிக்கிடக்கு?

அன்று இரவு உணவுக்கு மாணவர்கள் பழம் கொடுத்தார்களா என்பதை உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

------------------------------------------------------------------------------------

எனது யோகா மாணவர் ஒருவர் ஜிம்க்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்பவர்.
சிக்ஸ் பேக் வேண்டுமானால் தையல் கடைக்காரரிடம் சொல்லாமல் ஜிம்மில் கஷ்டப்படுபவர்.
ஒரு நாள் வேடிக்கையாக பேசும் சமயம் தனது கைகளை உயர்த்தி தனது புஜபலத்தை காட்டினார்.

நான் : பரவா இல்லையே, நீங்க சந்திரனுக்கு போகலாம் போல இருக்கே.

மாணவர் : ஏப்படி ஸ்வாமி ?

நான் : உங்க ஆர்ம் ஸ்ராங்க இருக்கே..!
-----------------------------------------------------------------------------------------------------------------

திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று..

திருமணம் ஒன்றில் தலைமை தாங்க வாரியார் சென்றிருந்தார்.
அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.
இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.

சாமி.. முருகனுக்கு ஆறு தலைன்றனுகோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்து
க்கொண்டு பிசியாக இருந்த மணமக்களின் தந்தைகளை அழைத்தார்.

அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” அவர்கள் இருவரும் "இன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறதுஎன்றார்கள்.

நடிகவேள் அவர்களை பார்த்து வரியார் சொன்னார்...
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்சே இவங்களுக்கு தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு தூக்கம் எப்படி வ்ரும் ? தூங்கறதுக்கு நேரம் ஏது?

----------------------------------------------------------------------------------
நேற்று நடந்த லேட்டஸ்ட் சம்பவம் ...


இன்னைக்கு தைபூசம்மும் அதுவுமா முருகப்பெருமானுக்கு உடம்பு சரியில்லாம போயிடுத்தோ?

ஏன் அப்படி?

எல்லா கோவிலிலும் சிறப்பு (syrup) அபிஷேகம் செய்யறாளே. அத்தான்கேட்டேன்.


(இதில் என்னிடம் அகப்பட்டவர் கோவியார் என்பது சிறப்பு செய்தி...!)

27 கருத்துக்கள்:

sarul said...

Hi Swami
the change is good ,human mind always expects change in everything .
may god give you long life and good health .
Don't stop the astrology class ,I like to learn more from you.

சின்னப் பையன் said...

ஸ்வாமி -> கவிதை சூப்பர்....
வாரியாரின் பதில் சூப்பரோ சூப்பர்....

நாமக்கல் சிபி said...

:))

சூப்பர்!

ஷண்முகப்ரியன் said...

மதிப்பிற்குரிய ஸ்வாமிஜியின் இமேஜுடன் அவரது 'கடி'ஜொக்குகளை என்னால் பொருத்திப் பார்க்க முடியவில்லை.மன்னிக்கவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு KS,

வாரம் ஒரு முறை ஜோதிட பாடம் வெளிவரும். பிற நாட்களில் வேறு கட்டுரைகளுக்கான இடம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ச்சின்னப்பையன் ( செல்வன்.ச்சின்னப்பயன் - எது சரி;) ?),


உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நாமக்கல் சிபி,

நன்றி நன்றி :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்பிரியன் ஐயா,

தவறல்ல. சில ஆன்மீகவாதிகள் தங்களுக்கு என ”இமேஜ்” வைத்திருக்கிறார்கள். மக்களும் இப்படித்தான் அவர்கள் இருப்பார்கள் என ஓர் கற்பனையில் இருக்கிறார்கள்.

நகைச்சுவையும் ஓர் தியானம் தான்.

ஒருமுறை நீங்கள் சிரிக்கும் பொழுதும் உங்கள் சுவாசம் உள்முகமாகி, மனம் வெறுமை அடையும்.
மனம் ஒடுங்கி ஆன்மா மேலிடுவதே தியானம்.
அதனால் தான் ஆனந்தமாக இருத்தல் என்பது ஆன்மீகத்தின் உயர்நிலையாக கொள்ளப்படுகிறது.

என்னால் முடிந்த அளவு நகைச்சுவையால் துளி பொழுது பிறரை தியானிக்க செய்கிறேன்.

எப்பொழுதும் கைகளில் ருத்திராட்ச மணி கொண்டு ஜபம் செய்தும், முகத்தில் உமிழ்ந்தாலும் புன்சிரிப்புடன் இருப்பதும், பழங்களை மட்டும் உண்பேன் என கூறம் “இமேஜ்” எனக்கு ஆன்மீகமாக தெரிவதில்லை. இவை அனைத்தும் அகந்தையின் லட்சணங்களே.

ஆன்மீகவாதி என்பவன் இயற்கையானவன்.
நீர்,காற்று, ஒளி மற்றும் மண் எனும் பஞ்ச பூதங்கள் தன்னை இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளுமோ அதுபோல ஆன்மீக வாதி இயல்பானவன், இயற்கையானவன்.

நீருக்கும், நெருப்புக்கும் ஏது ”இமேஜ்” :)

Damodar said...

the post is good. expecting interesting lessons also on astrology

ATOMYOGI said...

:-)

நாமக்கல் சிபி said...

//ஒருமுறை நீங்கள் சிரிக்கும் பொழுதும் உங்கள் சுவாசம் உள்முகமாகி, மனம் வெறுமை அடையும்.
மனம் ஒடுங்கி ஆன்மா மேலிடுவதே தியானம்.
அதனால் தான் ஆனந்தமாக இருத்தல் என்பது ஆன்மீகத்தின் உயர்நிலையாக கொள்ளப்படுகிறது.

என்னால் முடிந்த அளவு நகைச்சுவையால் துளி பொழுது பிறரை தியானிக்க செய்கிறேன்.

எப்பொழுதும் கைகளில் ருத்திராட்ச மணி கொண்டு ஜபம் செய்தும், முகத்தில் உமிழ்ந்தாலும் புன்சிரிப்புடன் இருப்பதும், பழங்களை மட்டும் உண்பேன் என கூறம் “இமேஜ்” எனக்கு ஆன்மீகமாக தெரிவதில்லை. இவை அனைத்தும் அகந்தையின் லட்சணங்களே.

ஆன்மீகவாதி என்பவன் இயற்கையானவன்.
நீர்,காற்று, ஒளி மற்றும் மண் எனும் பஞ்ச பூதங்கள் தன்னை இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளுமோ அதுபோல ஆன்மீக வாதி இயல்பானவன், இயற்கையானவன்.//

அருமையான விளக்கம்!

நாமக்கல் சிபி said...

இந்த சிரிப்பைத்தான் சுவாமி பித்தானந்தாவும் வலியுறுத்துகிறார்!

கவலைகள் மறந்தே சிரிப்பே ஆன்மாவுக்கு நல்லது என்று!

பரிசல்காரன் said...

பதிவு அருமை ஸ்வாமிஜி. அதைவிட ஷண்முகப்ரியனுக்கு நீங்கள் குடுத்திருக்கும் விளக்கம் தனிப்பதிவாகவே போட வேண்டிய அளவுக்கு அசத்தல்!

அத்திரி said...

சுவாமிஜி ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது

Selva said...

since you have asked us to send comments, i'm sending. Sincerely speaking i did not enjoy any of your jokes. Too much kadi. Given the nature of the articles and other writings appear in Tamilish, yours is substandard. but you can continue to write them in your blog.

பிரேம்குமார் அசோகன் said...

நிகழ்வுகளுக்குப் பின் உங்கள் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமே!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நாமக்கல் சிபி,

நன்று சொன்னேன் நினைவிருக்கிறதா? கட்டுடைத்தல் என்பது ... :))

எனது பின்னூட்டத்தையும் படித்து சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

உங்கள் பாரட்டுக்கு நன்றி. நிறைய கருத்துக்களை பதிவாக போட எண்ணி தவிர்த்துவிடுவதுண்டு. காரணம் சிலருக்கு அதிக பிரசங்கம் செய்வதாகப்படும்.

உண்மையில் கேள்வி கேட்கப்படாமல் இருப்பதாக நினைது அந்த பதிலை படித்துப்பாருங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

அத்திரி, உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

வணக்கம் கோவியாரே.
உங்களை வைத்து காமடி செய்ததற்காக ஒரு சிரிப்பா ;)

நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செல்வா, நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரேம்,

உண்மையில் எண்ணுடன் இருக்கும் அனைவருக்கும் நான் நகைச்சுவையாக இருப்பேன் என தெரியாது. அல்லது அவர்கள் தெரிந்துகொள்ளும் சூழலில் இல்லை.

அனைவரையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டால் நீங்கள் சொன்னது போல குறையலாம். :)

ஸ்வாமி ஓம்கார் said...

பதிவுலகவாதிகளுக்கு,

இன்று எனது பதிவை கண்டு சுவைத்த அனைவருக்கும் என நன்றிகள்.

அறிவை உருக்கி எழுதிய பதிவை விட, எளிதாக எழுதிய இந்த பதிவுக்கு கிடைத்த ஆதரவு அதிகம் :)

திருமங்கலத்தனமாக தமிழிஷ்-ல் 11 ஓட்டுக்கள் போட்டு என்னை முன்னிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கும் எனது நன்றிகள்.

Anonymous said...

சிரிப்போ சிரிப்பு சுவாமி! நன்றாக இருந்தது :)

ஷாஜி said...

வாரியாரின் பதில் சூப்பரோ சூப்பர்....

கார்க்கிபவா said...

அடடா ஸ்வாமி நம்ம கடைக்கு வந்து காக்டெய்ல் எல்லாம் அடிச்சது உண்டா? :))

சிறப்பு மேட்டர் வெகு சிறப்பு

கிரி said...

பதிவு சூப்பர் சாமி :-)