சூரிய மண்டலம் மற்றும் அதில் இருக்கும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். சூரியனும் , பிற கிரகங்களும் கோள் வடிவமாக இருக்கிறது அல்லவா? சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் நீள் வட்ட பாதையில் சுழலுகிறது அல்லவா?
ஆக வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது.இயற்கையில் உருவாகும் அனைத்து விஷயத்திலும் வட்டம் அடிப்படை வடிவமாகவே இருக்கும். வட்டம் வளரும்பொழுது கோளம், உருளை என முப்பரிமாணமாக மாற்றமடையும்.
கரு உருவாகும் பொழுது சூல் வட்டவடிவமாக இருக்கும். உலகின் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்பான சக்கரம் வட்டவடிவமானது என வட்டத்தின் சிறப்பை கூறிக்கொண்டே செல்லலாம்.
வட்டம் ஆரம்பமும் முடிவும் அற்றது. அதனாலேயே வட்டத்தின் அடிப்படையில் இயங்கும் பிரபஞ்சமும் தோற்றமும் முடிவும் அற்றதாக இருக்கிறது.
இத்தகைய வட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.
கணிதத்தில் வட்டத்தின் சுற்றலவு 360 டிகிரி என்கிறார்கள்.
வட்டத்தை இரண்டாக பிரித்தால்....இரண்டு... 180 டிகிரியாக மாறும்.
வட்டத்தை நான்காக பிரித்தால் ... நான்கு 90 டிகிரியாக மாறும்.
இதுவரை நாம் பிரித்தது செங்கோணமாக இருக்கும் வடிவங்கள். 90 டிகிரியை இரண்டாக பிரித்தால் 45 டிகிரி கிடைக்கும். ஆனால் அது செங்கோணம் அல்ல..
90 டிகிரியை மூன்று பிரிவுகளாக பிரித்தால் 30 டிகிரி என பன்னிரெண்டு பிரிவுகள் கிடைக்கும்.
30 டிகிரிக்கு கீழே பிரிக்க வேண்டும் என்றால் 1 டிகிரி என்பதே சரியான கோணமாகி 360 பிரிவுகள் கிடைக்கும்.
பன்னிரெண்டு பிரிவான 30 டிகிரியை ஓர் அடிப்படை அலகாக (Units) கொண்டு ஜோதிடத்தில் ஆய்வு செய்கிறார்கள். இந்த பன்னிரெண்டு பிரிவகளே ராசிகள் என அழைக்கப்படுகிறது.
பன்னிரெண்டு பிரிவுகள் எவ்வாறு அமைந்து இருக்கிறது என தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஓர் ஆரஞ்சு பழத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் சுளைகள் பன்னிரெண்டு இருப்பதாக கொண்டால், பூமியின் சுற்று பகுதியில் ராசிகள் அமைத்தவிதம் எப்படி இருக்கும் என யூகிக்க முடியும்.
ஜோதிட ஆய்வு செய்யுபொழுது கருத்துக்களை எழுத சிரமமாக இருக்கும் என்பதற்காகவே வட்டதின் மூலை பகுதிகளை சீராக்கி சதுர வடிவில் அமைத்திருக்கிறோம். மற்றபடி ராசி மண்டலம் என்பது வட்டவடிவம் தான், நமது செளகரியத்திற்காக அனைத்து பிரிவுகளும் சதுரத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் வட்டத்தின் சித்தாந்தம் குலையாமல் 30 டிகிரியாகவே அமைந்துள்ளது.
ராசி மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்கென ஓர் பெயரும் கிரக ஆதிக்கமும் கொண்டு அமைக்கபட்டுள்ளது. அதன் படம் கீழே..
ராசி மண்டலம் பற்றிய பாடத்தின் வீடியோ காட்சி
-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :
ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?
செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?
நன்றாக ஜோதிடம் தெரிந்தவர் என உங்கள் நண்பர் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.
அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடையை அடுத்த பதிவில் இடுகிறேன்.
பதில் நேரம் :
சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி :
கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா?
இதற்கு பலதரப்பட்ட விளக்கம் வந்திருந்தது. கிரகணம் , கடல் அலைகள் என பல விளக்கங்கள். நான் கேட்டது மனித உடலில் கிரக வேலை செய்யும் என்றால்
எப்படி.
ஜோதிடத்தை பொருத்தவரை சூரியன் ஒரு கிரகம் அல்லவா? சூரியன் ஒளி மனிதனுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிக தோல்வியாதியால் துன்பபடுவான்.
வைட்டமின் ஈ மற்றும் டி கிடைக்காது.
கிரகம் என்றவுடன் ஒன்பது கிரகத்தையும் நினைத்து குழப்பிக்கொள்ளுகிறோம். சூரியன் எனும் கிரகம் மனித உடலில் வேலை செய்கிறது தானே?
எளிமையாக யோசிப்போம்..வளமை காண்போம் :))
-------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்
[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]
கோவில் திருவிழாவில் “டாடி மம்மி வீட்டில் இல்லேனு தடைபோட யாரும் இல்லைனு” பாடிக்கிட்டு இருக்காறே, யாரு அவரு?
அவர் “வில்லு” பாட்டுக்காரராம்.
8 கருத்துக்கள்:
பாடம் அருமை நன்றி.
பாடம் அருமையாக புரிந்தது,
பன்னிரண்டு கட்டத்திற்கான விளக்கம் புதிய தகவல் .
நன்றி,
திரு ஆனந்தன், திரு ஜீ.கே.
உங்கள் வருகைக்கு நன்றி.
பாடம் இரண்டு எளிமையாக புரியும் வகையில் இருக்கிறது. நன்றி.
கார்த்திக்
The lesson is very easy to understand. Thanks.
பாடம் அருமை,நன்றி..ஆனால் உங்கள் கேள்விக்கு பதில்....!!!
\\\\\\\\\\\ கிரகம் என்றவுடன் ஒன்பது கிரகத்தையும் நினைத்து குழப்பிக்கொள்ளுகிறோம். சூரியன் எனும் கிரகம் மனித உடலில் வேலை செய்கிறது தானே? /////////////
நீங்க இப்டி சொல்றீங்க. ஆனா உங்க வீடியோல சூரியன் ஒரு நட்சத்திரம்னு சொல்றீங்களே?
மிகவும் எளிமையாகவும்புரியும்படியாகவும் சொல்கிறீர்கள் .மிக்க நன்றி.
Post a Comment