அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
ஜோதிட கல்வியை வலைதளம் மூலம் கற்றுகொள்ளும் கல்வி பட்டறை இன்று முதல் துவங்குகிறது. ஜனவரியில் துவங்கும் என அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் ஆவலுடன் பின்னூட்டம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எப்பொழுது என ஆவலாக கேட்டார்கள். ஜோதிடம் என்பதே காலதேவனின் கணக்கு என இருக்கும் பொழுது, கல்வியை துவக்கும் நேரம் நல்ல நேரமாக பார்த்து ஆரம்பிக்க வேண்டாமா?
இதோ தைமாதத்தின் முதல் நாளில் ஜோதிட பயிற்சியை துவக்கியிருக்கிறோம். சூரியன் மகரம் எனும் ராசிக்கு செல்லும் தருணம், வான சாஸ்திரத்திற்கும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
வேதிக் ஐ எனும் இந்த வலைதளத்தில் ஜோதிட கல்வி தேவைதானா?
ஜோதிட சாஸ்திரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வளைதளம் செயல்படுகிறது. ஜோதிடத்தை நிரூபணம் செய்யும் நோக்கமோ, நாங்கள் சொல்லுவது தான் ஜோதிடம் எனும் கருத்தை திணிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல.
ஜோதிடத்தில் பல முறைகள், யுக்திகள் உண்டு. அதில் நாங்கள் விளக்கும் முறையை பற்றிய அறிவு இருந்தால் விளக்கத்தை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கும்.
கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் உயர் நிலை ஜோதிடத்தை தெரிந்து கொள்வது எளிதான ஒன்று. இதை கற்றுகொடுப்பவர்களும், ஜோதிடத்தை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர்களும் கிருஷ்ண மூர்த்தி ஜோதிட முறையை சமூகத்திலிருந்து துடைத்து எறிய முயற்சி செய்கிறார்கள்.
.......காரணம் பல.
விஞ்ஞான ரீதியான மற்றும் எளிய முறையில் பயன்படுத்த கூடிய KP ஜோதிட முறையை கற்றுக்கொள்ள உங்களை அனைவரையும் வரவேற்கிறோம்.
உங்களுக்கு ஜோதிடம் கற்றுகொடுக்க என்ன தகுதி இருக்கிறது?
கடந்த பத்துவருடங்களாக ஆயிரத்துக்கும் மேம்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடம் கற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக ஜோதிடத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டிய அனுபவம். சில ஜோதிட புத்தகங்களும், மாத பத்திரிகை மூலம் மக்களிடம் கருத்தாடிய அனுபவம் எங்களை ஜோதிடம் கற்றுக்கொடுக்கும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
வீடியோ மூலம் வெளிநாடுகளில் வாழும் மாணவர்களுக்கு கற்று கொடுத்து அவர்களுக்கு நேரடியாக கற்றுகொண்ட அனுபவத்தை அளித்துள்ளோம். பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம், பங்குசந்தை, ஆன்மீகம், வாழ்வியல் என அனைத்து துறையிலும் ஜோதிடத்தை பயன்படுத்திய அனுபவம் உண்டு.
.......மேலும் பல.
முன்பே ஒருவர் ஜோதிட பாடம் நடத்துகிறாரே?
திரு.சுப்பையா அவரது வலைதளத்தில் ஜோதிட பாடம் நடத்தி வருகிறார். அதில் நாங்களும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதுண்டு. அவரின் பணிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
தனது ஓய்வு நேரத்தில் தான் படித்தவைகளை பகிர்ந்து கொள்கிறார், ஆனால் இந்த தளம் கே.பி முறையை பற்றி பேச கூடியது - ஜோதிடம் எனும் பொதுவான கருத்தை பற்றி அல்ல. அடிப்படை நிலையில் ஜோதிடம் ஒரு போல இருந்தாலும் பயன்பாடுகளில் வேறுபடுகிறது.
கே.பி முறையில் அப்படி என்ன விஷேஷம்?
பின்குறிப்பு :
இக்கட்டுரையில் “எங்கள் -நாங்கள்” என குறிப்பிடப்படுவதால் பலர் இணைந்து எழுதுகிறார்களோ? என சந்தேகம் வேண்டாம். ஜோதிடம் என்பது என் குல சொத்து அல்ல, நான் கண்டு பிடித்ததும் அல்ல. பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் உலகக்கு அளிக்கப்பட இந்த அற்புதத்தை “நான் -எனது” என சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? அதனால் நாங்கள் என்பது ரிஷிபுருஷர்கள் முதல் ஸ்வாமி ஓம்கார் வரை என அனைவரையும் குறிக்கும்.
இத்தளத்தில் வரும் ஜோதிட கட்டுரைகள் புத்தக வடிவில் வர இருப்பதால், ஜோதிட கல்வி சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.

- மேலோட்டமாக இல்லாமல் கிரகங்கள் நட்சத்திர ரீதியாக ஆராயும் முறை.
- டிகிரி முறையில் ஜாதகங்கள் துல்லியமாக கணிக்கப்படுவதால் பலன்களும் துல்லியமானதாக அமையும்.
- கே பி முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் ஒருவருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு அமையாது.
- (வெறும் ராசி நவாம்ச வைத்து பார்க்கப்படும் ஜோதிடம் 480 நபர்களுக்கு ஒன்று போலவே இருக்கும். இது போன்ற பொதுவான ஜோதிடம் அல்ல கே.பி முறை)
- 27 நட்சத்திரங்களை பகுத்து மிகவும் அதிக நுண்ணிய பிரிவுகளாக 249 உட்பிரிவில் ஜாதகம் கணிக்கலாம்.
- ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறிப்பட்ட தேதியில் நடக்கும் என கூறும் அளவிற்கு துல்லியமாக கூற முடியும்.
- பரிகாரங்கள், தோஷங்கள் போன்ற தகிடுதத்தங்கள் இல்லை.
பின்குறிப்பு :
இக்கட்டுரையில் “எங்கள் -நாங்கள்” என குறிப்பிடப்படுவதால் பலர் இணைந்து எழுதுகிறார்களோ? என சந்தேகம் வேண்டாம். ஜோதிடம் என்பது என் குல சொத்து அல்ல, நான் கண்டு பிடித்ததும் அல்ல. பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் உலகக்கு அளிக்கப்பட இந்த அற்புதத்தை “நான் -எனது” என சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? அதனால் நாங்கள் என்பது ரிஷிபுருஷர்கள் முதல் ஸ்வாமி ஓம்கார் வரை என அனைவரையும் குறிக்கும்.
இத்தளத்தில் வரும் ஜோதிட கட்டுரைகள் புத்தக வடிவில் வர இருப்பதால், ஜோதிட கல்வி சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.
21 கருத்துக்கள்:
Swami Namaskar,
Happy Pongal for you and all our friends.
தமிழர் திருநாளில் ஆரம்பமாகும் சுவாமிஜியின் ஜோதிடக் கல்வி
பெருவாரியான ஆன்மீக அன்பர்களை சென்றடைந்து நற் பயன்கள் கோடி தர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.
கார்த்திக்
thanks for starting the class, i am eager to learn , can you also give the links for sri.subbiahs class also
Swamiji waiting for ur classes
http://classroom2007.blogspot.com/ is the link for sri subbiah's class.
Since I did not follow sri subbiah's class from beginning, I am expecting eagarly your class.
ஹைய்யா ! class start ஆகிடுச்சு....
வணக்கம் ஓம்கார் அவர்களே, ஜோதிட கல்விக்கு அடியேன் பதியவில்லை,இருந்தாலும் தங்கள் அனுமதியுடன் படித்து தெரிந்துகொள்ளலாம் தானே.
சிலேட்டு பலப்பம் மற்றும் கால்குலேட்டருடன் வகுப்பிற்குள் நானும் பிரவேசித்துவிட்டேன்!
வாத்தியாரின் ஆசியுடன் முதல் பெஞ்சிலேயே அமர்ந்துகொள்கிறேன்!
யாராவது என் கூட கடைசி பெஞ்சுக்கு வரீங்களா? (சிபி அண்ணே கால்குலேட்டர் எதுக்கு?)
ஸ்வாமிஜி!
ஒருவரது ஜாதகத்தில் 8 ம் வீட்டை அனைத்து 9 கிரகங்களும் குறி காட்டினால் என்ன பொருள்?
அவருக்கு திசை புத்தி என்ற பாரபட்சம் இல்லாமல் விபத்துக்கள் நேருமா? அல்லது வேறு ஏதேனும்!!!! விளக்க வேண்டுகிறேன்....
ஆசானுக்கு வணக்கங்கள்
நற்பணி தொடரட்டும்
//யாராவது என் கூட கடைசி பெஞ்சுக்கு வரீங்களா? (சிபி அண்ணே கால்குலேட்டர் எதுக்கு?)//
இந்த KB மெத்தேட் விஞ்ஞானம் மற்றும் கணித முறைப்படி ஆராய்ந்து துல்லியமா கணிக்கவல்லது!
அதான மனக் கணக்கு போட்டு ஏதாச்சும் தப்பாயிடுச்சுன்னா பலன்கள் சொதப்பிடுமே! அதுக்குத்தான் கால்குலேட்டரும் கையுமா வந்துட்டேன்!
//ஸ்வாமிஜி!
ஒருவரது ஜாதகத்தில் 8 ம் வீட்டை அனைத்து 9 கிரகங்களும் குறி காட்டினால் என்ன பொருள்?
அவருக்கு திசை புத்தி என்ற பாரபட்சம் இல்லாமல் விபத்துக்கள் நேருமா? அல்லது வேறு ஏதேனும்!!!! விளக்க வேண்டுகிறேன்....//
இன்னும் பாடம் ஆரம்பிக்கவே இல்லை! அதுக்குள்ளே சந்தேகமா!
அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி. முதல் வகுப்பு விரைவில் துவங்கும்.
ஸ்வாமி ஓம்கார்
திரு நாமக்கல் சிபி & அணுயோகி,
இங்கு நடக்கும் ஜோதிட வகுப்புக்கு எந்த ஒரு கருவியும் தேவை இல்லை.
குழந்தைய போன்ற மனநிலையில் திறந்த மனமுடன் வந்தால் போதும்.
மேலும் முன்பு படித்திருக்கும் ஜோதிட விஷயங்களை விட்டு விடவும்.
ஒரு பெட்டியில் முன்பே ஒரு பொருள் இருந்தால் புதிய பொருள் வைக்க முடியுமா? புதிய பொருள் வைக்கும் அளவுக்கு உங்கள் உள்நிலையை காலியாக்கி கொள்ளுங்கள்.
இது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.
//ஒரு பெட்டியில் முன்பே ஒரு பொருள் இருந்தால் புதிய பொருள் வைக்க முடியுமா? புதிய பொருள் வைக்கும் அளவுக்கு உங்கள் உள்நிலையை காலியாக்கி கொள்ளுங்கள்//
அப்படியே ஆகட்டும் ஸ்வாமி!
**ஒரு பெட்டியில் முன்பே ஒரு பொருள் இருந்தால் புதிய பொருள் வைக்க முடியுமா? புதிய பொருள் வைக்கும் அளவுக்கு உங்கள் உள்நிலையை காலியாக்கி கொள்ளுங்கள்**
அபபடியே ஸ்வாமிஜி!!!
பாடங்கள் ஆரம்பமாவதை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ஸ்வாமிஜி. கணிதத்திற்கு அதிகம் முக்கியம் தராமல் என்னை போன்ற பாமரர்களுக்கு புரியும்படி பாடங்கள் எளிதாக அமைந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
உயர்திரு சுவாமிஜி அவர்களுக்கு,
வணக்கம்.
ஜெயமோகன் வலைத் தலத்தில் சோதிடம் பற்றிய தங்களின் அருமையான,ஆழமான கருத்துக்களைப் படித்தேன்.அடுத்தாற்போலவே எனது கருத்துக்களையும் நண்பர் ஜெயமோகன் வெளியிட்டிருந்தார்.
கிட்டத் தட்ட சுவமிஜியின் எண்ணங்களையே நானும் ப்ரதிபலித்திருந்ததை எனது பேறாகக் கருதுகிறேன்.நன்றியும்,வணக்கங்களும்.
present
ஸ்வாமிஜி கொஞ்சம் லேட்-௮ வந்துட்டேன்!! என்னையும் சேத்துக்குவீங்களா??
Post a Comment