அடுத்தது என்ன?... எனும் தேடல் அனைவருக்கும் இருப்பது இயல்பு. ஜோதிடம் எனும் சாஸ்திரத்தின் பரிமாணத்தை மனிதர்கள் முழுமையாக உணர்ந்தது இல்லை.சாஸ்திரம் தன்னை முழுமையாக வெளிப்படித்துக் கொண்டாலும் மனிதன் தனக்கு வகுத்துகொண்ட தடையால் ஜோதிடத்தை அனைத்து துறையிலும் பயன்படுத்துவதில்லை. இது மனித இயல்பு.
சாஸ்திரத்தை முழுமையாக பயன்படுத்தாத இச்செயல், மஹா பலம் பொருந்திய யானையை தன்வசமாக்கி தெருத் தெருவாக கூட்டி சென்று பிச்சையெடுப்பதற்கு சமம். இதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்.
வேத சாஸ்திரத்தை பயிலும் போதும் “மாயை”, “கர்மா” எனும் வாசகங்கள் எதிர்கொள்ளும் பொழுது அவற்றிக்கு பொருள் தெரியாமல் விழிப்பது இயல்பு. இதற்கு உதாரண கதைகள் கூறியோ, அகராதியில் பொருள் தேடினாலும் நிறைவை ஏற்படுத்தாது.
ஜோதிட சாஸ்திரத்தை பயின்றால் ஓரு மனிதனின் வாழ்க்கை நிகழ்வை சாட்சியாக இருந்து பார்க்கும் தன்மை ஏற்படும். தொழில் ஆரம்பித்து மேன்மை ஏற்படும் எனும் நம்பிக்கையுடன் ஒருவர் செயல்பட்டுக்கொண்டிருப்பார். ஜாதக ரீதியாக அவர் தோல்வி அடைவார் என முன்பே தெரிந்து கொள்ளும் தன்மை நமக்கு இருந்தால், அவரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் “மாயை” நிறைந்திருப்பது புரியவரும். அம்மனிதன் தோல்வியை தழுவும் பொழுது அது தான் அவர் “கர்மா” என புரியும்.
வேதத்தின் கண்(Vedic Eye) என்று அழைக்கப்படும் ஜோதிடத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைதளம், அதன் அடுத்த பரிமாணத்தை நோக்கி பயணிக்கிறது. "ஜனநாயக” முறைப்படி ஓட்டு எடுப்பில் ஜோதிடத்தை ஆய்வு வரை பயிற்சி பெற அனைவரின் பெரும்பான்மையான வாக்கும் விழுந்திருக்கிறது.
வாக்கு பதிவை உங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளேன்.
ஜாதக ஆய்வு வரை கற்று கொள்ள விருப்பம் ----82 (75%)
அடிப்படை மற்றும் கற்றுக்கொள்ள விருப்பம் ----21 (19%)
இணையவழியில் கற்றுக்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை---- 1 (0%)
எனக்கு விருப்பம் இல்லை ----5 (4%)
விரைவில் அடிப்படை ஜோதிட பாடத்தை துவங்க இருக்கிறோம்.
இந்த வலைதளத்தின் வலது பக்கம் இருக்கும் “ வேதத்தின் கண்-மணிகள்” எனும் பகுதியில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்.
உங்கள் அறிவு பெருக எனது வாழ்த்துக்கள்.
8 கருத்துக்கள்:
ஏற்கனவே வாத்தியார் அய்யா நடத்துகிறார்...
http://classroom2008.blospot.com
வணக்கம் ஓம்கார் அவர்களே!
தங்களின் வகுப்பிலும் இணந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்...
எங்கள் மரியாதைக்குரிய சுப்பையா ஆசான் (வகுப்பறை) அவர்கள் எங்களுக்கு நிறைய அடிப்படை சோதிட அறிவை தந்துள்ளார்.
அதனுடன் சேர்த்து தங்களின் கே.பி முறையினையும் கற்றுக் கொள்ள ஆவலாய் உள்ளோம்....
சுப்பையா ஆசான், மற்றும் உங்களை போல் உள்ளவர்களால் தான் வேததிதின் கண் இன்னும் மூடாமல் அனைவருக்கும் வழிகாட்டி கொண்டு இருக்கிறது....
பாடங்களை எதிபார்த்துக் கொண்டே இருக்கிறோம்.....
நன்றி
பாடங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். நன்றி~
We are egaerly waiting for the lessons. Thanks in advance.How to join in Kanmanis please?
//How to join in Kanmanis please?//
Just Click "Follow this blog" link.
// Thanks//
when class will starts?
ஜாதக ஆய்வு வரை கற்று கொள்ள விருப்பம்
நன்றியுடன்,
முருகன் அடிமை
Post a Comment