Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 29, 2008

இணைய வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?

அனைவருக்கும் வணக்கம்.


இந்த இனிய நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.


ஜோதிட சாஸ்திரத்தை மெய்யுணர்வுடன் பயன்படுத்தும் நோக்கில் இந்த வலைதளம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே.ஜோதிட விழிப்புணர்வு வரவேண்டும் என்றால் அதிக பட்ச மக்கள் ஜோதிடத்தை தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அதை செயல்படுத்தும் விதமாக இணைய வழியில் ஜோதிட கல்வி அளிக்கும் எண்ணம் உருவானது.


ஜோதிட சாஸ்திரம் என்பது வேதம் தோன்றிய காலத்தில் உருவானதாக இருந்தாலும் சுலோகங்கள் மற்றும் கடினமான விதிகள் நிறைந்தது. ஆனால் அனைவரும் எளிமையாக கற்றுக்கொள்ளும் நோக்கில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறையை கற்றுக்கொடுக்க இருக்கிறோம்.


கிருஷ்ண மூர்த்தி முறை (KP) என்பது நவீன காலத்தில் உருவான விஞ்ஞான பூர்வமான முறை.
கற்பது எளிது மேலும் துல்லிய தன்மை மிகுந்தது.


ஜோதிடத்தை கற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால் அருகில் இருக்கும் சட்டகத்தில் ஓட்டளியுங்கள்.

பெருவாரியான ஓட்டுக்கள் விழும் கருத்தை மக்கள் கருத்து என கொள்ளாமல் மகேஸ்வரனின் கருத்தாக எடுத்துகொண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படலாம்.

மேலும் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

27 கருத்துக்கள்:

Athisha said...

சாமீ உங்களுக்கு மெய்யாலுமே வயசு 108 ஆ...?

அதென்ன 108 ராசி நம்பரா...

Athisha said...

சாமீ உங்க போட்டோ 1947ல எடுத்தததா .. இளமையா இருக்கீங்க

இன்னா சாப்டுறீங்கோ.. எங்களுக்கும் சொல்லிகுடுத்தா நாங்களும் வாழுவோம்ல 108வயசு வரைக்கும்(ஸாரி அதுக்கு மேலயும் இளமையோட )

மதுரை சொக்கன் said...

traditional vedic astrology ஓரளவுக்குப் படித்திருக்கிறேன்.KP முறை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகிறேன் நன்றி.

ஊர்சுற்றி said...

இங்கயும் வந்துட்டீங்களா சாமீ....
முடியலீங்கோ...

அப்படியே 'நிஷா' மாதிரி வேற எதாவது வருதான்னு கரெக்டா ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னீங்கன்னா நாங்க எல்லாம் கொஞ்சம் உஷாராயிடுவோம்.

இதப்பத்தியெல்லாம் ஒரு வார்த்தெ யாரும் பேசின மாதிரி தெரியலீங்களே!!!

ஸ்வாமி ஓம்கார் said...

அதிஷா...

மெய்யில்(உடம்பில்) வயசு குறைவு.

108 என்பது நமது உடலில் இருக்கும் சக்தி பகுதிகள். அதை சரியான முறையில் பயன்படுத்தினால் நன்றாக வாழ முடியும்.

ராசி நம்பர் எல்லாம் இல்லை.

இளைமையாக இருக்கும்பொழுதுதே யாரும் உருப்படியா இல்லை. இதில் 108க்கு மேலையும் இளமையா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரை சொக்கன்,

KP முறைகற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் வரவேற்க தக்கது.

மதுரை மக்களுக்கு இப்பொழுது தான் வகுப்பு முடித்து வந்தேன். நீங்கள் மதுரையில் இருக்கிறீர்களா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு முகமுடி ஊர்சுற்றி அவர்களுக்கு,

///இங்கயும் வந்துட்டீங்களா சாமீ....
முடியலீங்கோ...
///


எங்கே போக இங்கேயே தானே இருக்கேன். நீங்க தான் இங்கயும் வந்துட்டீங்க.

//அப்படியே 'நிஷா' மாதிரி வேற எதாவது வருதான்னு கரெக்டா ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னீங்கன்னா நாங்க எல்லாம் கொஞ்சம் உஷாராயிடுவோம்.
//

நாங்க மீன் பிடிச்சு கொடுக்க மாட்டோம். மீன் பிடிக்க ”கற்று” கொடுப்போம்.(வேளச்சேரியில் மீன் வருதா? )
ஜோதிடம் கத்துகிட்டு நீங்களே நிஷாவோ உஷாவோ பத்தி சொல்லுங்க.

sarul said...

வணக்கம் ஸ்வாமி
முதலில் உங்களுடைய நல்ல முயற்சிக்காக என்னுடைய பாராட்டுக்கள்.இந்த தெளிவான கே.பி முறையக்கற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளேன்.
இதில் சில புத்தகங்களை நான் படித்துள்ளேன்.அதந் நம்பகத்தன்மை எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
என்னையும் உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்வீர்களா.

sundar said...

Yes guruji,

We are looking forward to your kind lessons.

Thank you

Sundar

விளையாட்டுப்பிள்ளை said...

ஏற்கனவே classroom2007.blogspot.com என்ற ஒரு இணையதளம் ஜோதிடத்தைப்பற்றி இருக்கின்றதே. அதுக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு??

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே எஸ்,

உங்களுக்கு முன்பே இந்த ஜோதிட முறை நல்ல அறிமுகம் உண்டு என நினைக்கிறேன்.

அனைவரையும் போல் நாமும் இங்கு கற்று பயனடைவோம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வில்லியனூர் சந்தோஷ் ,

திரு சுப்பையா அவர்களால் சிறப்பாக அடிப்படை ஜோதிட கூறுகள் கற்றுக்கொடுக்கப்படும் தளம் அது.

ஓர் முழுமையான ஜோதிட ஆய்வை அதன் மூலம் செய்வது கடினம். ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்து அதன் மூலம் வாழ்க்கை சம்பவங்களை இந்த தேதியில் நடக்கும் என்ற அளவுக்கு கூறக் கூடிய ஜோதிடம் இது.

Geekay said...

Oh Great Sir,

Expecting your lessions.

Regards,

Gopal,

YOGANANDAM M said...

yes i am intrested for basic and research.

நாமக்கல் சிபி said...

நானும் கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன் சுவாமி!

நல்ல முயற்சி!
புத்தாண்டில் இருந்து எங்களுக்கு இன்னுமொரு புதுவிருந்து!

வாழ்த்துக்கள்!
(எனக்கு வாழ்த்த வயசிருக்கா?)
அப்போ என்னை ஆசீர்வதியுங்கள்!

நாமக்கல் சிபி said...

என்னையும் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!

குருப் பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரக!
குரு சாட்ஷாத் பரப்பிரம்மை
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர், கேஎஸ்,ஜீகே, யோகாநந்தம்,

ஜனவரி மாதம் முதல் சிறப்பான ஓர் பகிர்தலை தொடருவோம். ஓட்டுக்கள் அதிகமாகவும் சாதகமாகவுமே உள்ளன.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நாமக்கல் சிபி,

உங்கள் ஆர்வத்திற்கு எனது பாராட்டுக்கள்.

ஆனால் குரு சிஷ்யன் என்ற தளம் நான் பயணிக்கும் தளம் அல்ல.

ஒர் அகல் விளக்கு மற்றொரு அகல் விளக்கை ஒளி கொடுப்பதன் மூலம் இரு அகல்விளக்குகளும் வேறுபடுவதில்லை. அது போலவே இங்கே நாம் இருவரும் பகிர்ந்து கொள்வதும்.

ஓம் தத் சத்.

நாமக்கல் சிபி said...

ஜாதக ஆய்வு வரை கற்று கொள்ள விருப்பம்

நாமக்கல் சிபி said...

//ஆனால் குரு சிஷ்யன் என்ற தளம் நான் பயணிக்கும் தளம் அல்ல//

உங்களைப் பொறுத்தவரை அவ்வாறு இருக்கலாம்!

என்னைப் பொறுத்தவரை தாங்கள் கற்றுக் கொடுக்கிறீர்கள்! நான் கற்றுக் கொள்கிறேன்!

கற்றுக் கொடுப்பவர் எவராயினும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களே! அவருக்கு உரிய மதிப்பை ஒரு மாணாக்கனாய் நான் நல்கியே ஆக வேண்டும்!
:)
(என் வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி ஆசிரியரையும் கூட அதே உயர்ந்த ஸ்தானத்தில்தான் வைத்துப் பார்க்கிறேன்)

நன்றி!

கோவைகத்துக்குட்டி said...

வணக்கம் குருஜி,
உங்கள் பதிவுகளை ஆர்வமாக எதிர்பார்கிறேன்

நன்றியுடன்
செல்லி

அமர பாரதி said...

//இணைய வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா? // இல்லை ஸ்வாமி. இணைய வழியில் ஜோதிடத்தை ஒரு சிறிய அளவு கூட கற்றுக்கொள்ள முடியாது என்பதே என் கருத்து. அரை குறையாக கற்றுக்கொள்வதை விட கற்றுக்கொள்ளாமலே இருக்கலாம். மேலும் பெரும்பாலானோருக்கு ஜோதிடம் என்பது கற்றுக்கொண்டு அலச வேண்டிய அவசியமில்லை. தேவையென்றால் நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். அவ்வளவே. இது என்னுடைய கருத்து மட்டுமே.

ஆனால் நீங்கள் எழுதினால் நிச்சயமாக படிப்பேன்.

KARMA said...

நானும் ஆர்வமாயிருக்கிறேன்.

தாங்களின் ஆன்மிக ஈடுபாடும், கற்றரிந்த ஜோதிட ஞானமும் அனைவர்க்கும் பலன் தருவதற்கு என் நன்றியும் வணக்கங்களும்.

மதுரை சொக்கன் said...

நான் இருப்பது சென்னை,ஸ்வாமி.

மதி said...

""கிருஷ்ண மூர்த்தி மற்றும் மிக துல்லிய சந்திர கலா நாடி முறை""

பற்றி அரிய ஆவலாக உள்ளேன்.

ஜோதிட பற்றிய அவநம்பிகையை அகற்றி இளையோர்களுக்கு நம்பிகையை வளர்க்கும் தங்களின் முயர்ச்சி அளப்பரியது.

sowri said...

swami,
I am at Chennai and interested in learning. Also i have few questions to ask? Can i email to you?