Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 15, 2012

காசி திருப்பயண அனுபவம்



மாணவர்களின் அனுபவங்கள் இரு பகுதிகளாக வரும். தங்களின் அனுபவங்களை உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்கள் சிலர்.


திரு.தேவராயன் DR - கோவை 

  காசியாத்திரை ஒரு புதிய அணுகுமுறையை எனக்கு கற்பித்ததாக உணர்கிறேன். யாத்திரை செல்லும் இடம் ஒன்று என்றாலும் அதை அடைய பல்வேறு உணவு, மொழி, மாநிலங்களையும் மற்றும் பல சீதோஷணங்களை கடந்து செல்லுவது புதிய அனுபவமாக இருந்தது. காசி நகரில் பசுக்கள் நடமாடி எம்மை பார்த்து நிற்கும் பொழுது வீட்டில் ஒரு பெரியவர் இருந்து இல்லத்திற்கு வரும் உறவினர்களை உபசரிப்பது போல் இருந்தது. கங்கை நதியில் நீராடி இறை விக்ரஹங்களுக்கு தீர்த்தம் அபிசேகம் செய்ததும், மந்திர ஜபம் செய்து தியானத்ததும் உள்ளத்திற்கு ஆனந்தமாக இருந்தது. காசி விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி தரிசனம் மிகவும் இனிது. அன்னபூரணியின் சொர்ண கவச தரிசனம் உள்ளத்திரையில் நீங்காத இடம் பிடித்துவிட்டதாக உணர்கிறேன். புத்தர் ஞானம் பெற்ற ஸ்தலம், போதிமரம் தரிசனம், துர்கா மந்திரி தரிசனம் மற்றும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த அனுபவம் அனைத்தும் எத்தகைய சூழலையும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாடத்தை கற்பித்தது.

அனைவரும் மாலை நேரத்தில் கங்கா ஆரத்தில் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பை அளித்தமைக்கு மட்டில்லா மனநிறைவு பெற்றேன். இறுதியாக கங்கை கரையில் நெருப்பு மூட்டி அதன் முன்னே

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

என தியானித்து சத்சங்கம் செய்த பொழுது அந்த ப்ரபிரம்மாவே ஆனந்த கூத்தாடி அக்னி பிரவேசமாக காட்சியளித்ததும் அனைவரையும் ஆசிர்வதித்ததும் பிரம்மனும் குருஜியும் ஒன்றிணைந்த சொரூபமாகவே உணர முடிந்தது.

பெரும்பேறு பெறும் வாய்ப்புக்கு நன்றி.
--------------------------------------------
திருமதி.ஹென்னா - கோவை


 I would like to share a few words that i felt during the kasi trip     the trip was very much amazing under your blessings and guidance . i had never thought that i will be blessed to    visit kasi . we are always only worried about our commitments and responsibilities but during this trip i learnt  a wonderful lesson that we simply keep worrying about everything even in our absence what ever the work is it will go on under your guidance i have learnt to see the dreams which only you can make it come true. 
       there are no enough words  to describe this trip  overall the trip is a memorable one . wishing many more trips like this under your guidance Thank you very much guruji for giving me an oppurtunity to visit mother ganga 

-------------------------------------------------------

சஞ்சய் கண்ணன் - மதுரை

I will try to elaborate my view about our Varanasi Trip.


What should i say about this special place? where to start? 

As all or some said it is a peaceful city and i do agree with it.
and most importantly i enjoyed being there and their hot tea as well :)

I literally felt silence in front of Mother Ganga and of-course with the help of Swami-ji's guiding too. 

Sun rise, chillness and the morning dip made our trip so special.
The total of 12 days went like a lightening and I was totally disconnected from the world i used to connect with, which was different for me.



But after the trip i started to feel blank. (வெறுமையாக இருக்கிறது)

I'm not sure why this happened to me and not sure how to react to it.
I guess it should be for the betterment...!
------------------
(தொடரும்)

Monday, February 6, 2012

காசி திருப்பயண குறிப்புகள்




சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாணவர்களுடன் காசி பயணம் மேற்கொண்டேன். ஏதோ ஒரு சக்தி என்னை வருடத்திற்கு ஒரு முறையேனும் காசிக்கு அழைத்து சென்றுவிடுகிறது. இம்முறை மாணவ ரூபத்தில் அச்சக்தி என்னை தூண்டி இவ்வருடமும் காசியை சுவாசிக்க செய்தது. ஆமாம்.. மாணவர்களின் காரணம் என சொல்லி காசிக்கு சென்றாகிவிட்டது. 2008 பிறகு காசியில் மாணவர்களுடன் செல்கிறீர்களே என்ன வித்தியாசம் உணர்தீர்கள் என கேட்டார்கள். காசி பல்லாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறது. மாணவர்களை தவிர அனைத்தும் அதே போல இருந்தது. தன்னை மாற்றிக்கொள்ளாமல் வருபவர்களை மாற்றுவது தானே காசியின் இயல்பு? 

காசி பயணத்தில் உணர்ந்தவைகளை சிறு தொகுப்பாக இங்கே தருகிறேன்.

  1. ஜனவரி மாதத்தில் குளிருடன் காசியை அனுபவிக்க திட்டமிட்டு சென்றதால் நாள் முழுவதும் மிதமான குளிருடன் காசி ரம்யமாக இருந்தது. அதே நேரம் குளிர் பழகாத மாணவர்களுக்கு மிகவும் சிரமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் குளிரை அனுபவித்திருந்தாலும் எனக்கு காசியின் குளிர் எலும்பு மஜ்ஜையை துளைத்தவண்ணம் இருந்தது. எனக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் மேலோங்கியது. சிலர் ஆரம்ப நாட்களில் குளிர் ஒன்றும் இல்லை என கூறி வீராப்பாக இருந்தவர்கள் இரண்டு நாட்களில் பக்கத்தில் நின்றாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு குல்லாய் போட்டு தங்களை மறைத்துக் கொண்டார்கள்.

  2. கங்கையும் அவளின் பிரவாகமும் பிரிய மனமில்லாமல் கண்டு களித்தோம். நீராடியது. மட்டுமல்லாமல் கங்கை நீரில் மூழ்கி ஜபம் செய்வது மற்றும் முன்னோர்களுக்கு ஆர்க்கியம் அளித்தது என கங்கையின் மடியில் தவழ்ந்தோம். கங்கை கரையில் உள்ள வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்து மண் குளியல் செய்து மகிழ்ந்தார்கள்.  

  3. காசி மட்டுமல்லாமல் கயா, திரிவேணி சங்கமம் மற்றும் வித்யாச்சல் என பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணம் செய்தோம்.

  4. திரிவேணி சங்கமத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தின் மேல் படகில் அமர்ந்தவாரு தன்வந்திரி யாகம் செய்தோம். உடலக உயிர்களின் ஆரோக்கியம் மற்றும் முக்திக்கு ப்ரார்த்தனைகளும் நடைபெற்றது.
  5. காசியில் மஹாமிருத்யன்ஞெய் யாகம் செய்தோம். இறப்பற்ற முக்தி நிலையை அடைய அனைவரும் பரார்த்தனை செய்தோம். யாகத்தின் பொழுது மிக உன்னத நிலையும் இறை அனுபூதியும் கிடைக்கப்பெற்றோம்.
  6. மாணவர்கள் கயாவில் பிண்ட தர்பணமும், காசியில் தை அமாவாசையன்று முன்னோர்களுக்கு ஆர்கியம் செலுத்தியும் வழிபாடு செய்தார்கள்.
  7. பயணத்தின் பொழுதும் ஓய்வெடுக்கும் பொழுதும் மாணவர்களுடன் சத்சங்கமும் கிண்டல்களுடனும் மகிழ்ச்சியாக கழிந்தது.
  8. குளிர் இரவில் கங்கை கரையில் நெருப்பு மூட்டி சத்சங்கம் செய்தோம். சத்சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் காலபைரவ ரூபங்கள் எங்களின் அருகே சூழ்ந்து சப்தமிட துவங்கியது.
  9. இரண்டு பைரவர்கள் நான் அமைர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து ஏதோ கூற விரும்பின.. சில நிமிடங்களில் நெருப்பு இருந்த தரை பெரும் சப்தத்துடன் வெடித்தது. இதனால் நெருப்பு கனல்கள் உயர பறந்து அனைவரின் மேலும் நெருப்பு மழையாக பொழிந்தது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தை அறிகுறியால் உணர்த்திய காலபைரவரே எங்களை காப்பாற்றினார் என உணர்ந்து கொண்டோம். கால பைரவனின் ஊரில் இந்த திருவிளையாடல் கூட நடக்கவில்லை என்றால் அவருக்கு என்ன மதிப்பு இருக்கும்?
  10.  மாணவர்கள் காசிக்கு வரும் பொழுது ஒரு பையுடன் வந்து திரும்ப செல்லும் பொழுது மூன்று பையுடன் சென்றார்கள். காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்பதால் எளிமையையும், சிக்கனத்தையும் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். :) இந்த புதிய பையில் அப்படி என்ன வைத்திருக்கிறீர்கள் என சில மாணவர்களை கேட்டதற்கு , காசியில் கிடைத்த புண்ணியத்தை இரண்டு பையில் நிரப்பி எடுத்து செல்வதாக கூறினார்கள். :)
     
  11. காசி பயணத்தால் மாணவர்களில் பலர் மிக மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் காணப்பட்டனர். அவர்களின் காசி அனுபவங்களை என்னிடம் எழுதி கொடுத்திருக்கிறார்கள். அதையும் விரைவில் இங்கே வெளியிடுகிறேன்.

Friday, February 3, 2012

புற்றுநோய் விழிப்புணர்வு யோக பயிற்சி..!


நவநாகரீகம் என்ற பெயரிலும், உலகமயமாக்கல் என்ற பெயரிலும் நாம் பெற்ற பலன்கள் ஏராளம். ஆனால் நாம் இழந்தது ஒன்றே ஒன்று தான். அதன் பெயர் ஆரோக்கியம்..!

முன்பு நம் வீட்டில் அதிகபட்சமாக கேஸ் அடுப்பில் உணவு சமைப்போம். தற்சமயம் மைக்ரோவேவ் அவன் இருந்தால் தான் மதிப்பு என ஆகிவிட்டது.

என் குழந்தை கப் நூடுல்ஸ் தான் விரும்பி சாப்பிடுவான் என சொல்லுவதால் பல தாய்மார்கள் நவீன தாய்மார்களாக ஜொலிக்கிறார்கள்,

எலுமிச்சை அடங்கிய சோப் பாரில் தான் நாம் பாத்திரம் துலக்குவோம். அதே சமயம் எண்ணை பிசுக்கு போக அலுமினிய கம்பிகள் கொண்ட ஸ்க்ரபர்கள்.

இதனால் நாம் வரவேற்பது என்ன தெரியுமா? புற்றுநோய்...! 

புற்றுநோய் வந்தப் பிறகு “நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என புலம்புகிறார்கள்.

அடிப்படையில் உங்கள் வாழ்க்கை தன்மையால் நீங்களே உங்கள் உடலுக்கு பாவம் செய்து விட்டீர்கள் என அப்பொழுது பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை..

இத்தகைய வாழ்வியல் குறைபாடுகள் அகற்றி நல்ல யோக பயிற்சியுடன் முழுமையான ஆரோக்கியம் பெற நேசம் மற்றும் ப்ரணவ பீடம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

உங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கிய குடும்பம் என்ற நிலையை அடையுங்கள்.

அனுமதி இலவசம்
வாழ்வியலில் சிறிது மாற்றம் செய்து புற்றுநோயை விரட்டுங்கள்...!  

Thursday, January 12, 2012

திரிகுண ரஹஸ்யம் - பகுதி 3


       முக்குணத்தில் எந்த குணத்தில் இருந்தால் நல்லது என ஆன்மீகத்தின் ஆரம்ப நிலை சாதகர்களுக்கு குழப்பம் ஏற்படுவது இயல்பு. சாத்வீகமாக இருக்கவேண்டும் என பலர் கூறுவார்கள்.

பாலும் பழமும் சாத்வீக உணவு என அதை மட்டும் உண்டு, பிற உணவு வகைகளை உண்ணாமல் காலம் கடத்துபவர்கள் உண்டு. 

குணங்களில் இது நல்லது அது கெட்டது என பிரிவு படுத்துவது கூடாது. அவ்வாறு பிரித்து ஆராய்வது ரஜோ குணத்தில் வரும். சாத்வீகமே சிறந்தது என கூறும் பட்சத்தில் நாம் ரஜோ குணத்தில் இருப்போம். 

இப்படி ஒரு குணத்திலிருந்து மற்ற குணத்திற்கு மாற்றம் அடைவது என்பது மனித இயல்பாகவே இருக்கிறது.

இறைவன் முக்குணத்தையும் ஒன்றிணைந்த நிர்குணமாக இருக்கிறான் என்றேன் அல்லவா? நாம் மூன்று குணங்களும் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மூன்று குணங்களும் சம விகிதத்தில் இருந்தால் நல்லது என்பதே திரிகுண ரஹஸ்யம்.

(RGB) சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்கள் அனைத்து நிறங்களையும் உருவாக்குகிறது. இதில் அனைத்து நிறமும் முழுமையாக இருந்தால் தோன்றுவது வெண்மை. எந்த நிறமும் இல்லாமல் இருந்தால் தோன்றுவது கருமை.

அது போல முக்குணமும் முழுமையாக இருந்தால் வெண்மை என்ற ஒளி நிலைக்கும், முக்குணமும் விட்டு கருமை என்ற சூன்ய நிலைக்கும் செல்லுவதே சரியான வழிமுறையாக இருக்கும்.

முழுமையான குணம் நோக்கி செல்லவே பல ஆன்மீக வழிமுறைகள் போதிக்கிறது. உதாரணமாக ஒருவர் இறைவனின் நாமத்தை ஜபம் செய்கிறார் என்றால் அவர் மன அளவில் சாத்வீகமாகவும், தான் செய்கிறோம் என்ற நினைப்பில் ரஜோ குணத்திலும், ஒரே இடத்தில் அமர்ந்து செய்வதால் தமோ குணத்திலும் வெளிப்பாட்டு முழுமையை நோக்கி பயணிக்கிறார்.

இது போல ஒவ்வொரு ஆன்மீக பயிற்சியும் இம்மூன்று நிலைகளையும் முழுமையான தன்மையில் கலந்து இறை நிலையை நோக்கி நம்மை செலுத்துகிறது.

நம் ஆன்மா என்ற வாகனம் முக்குணம் என்ற மூன்று சக்கரங்களின் உதவியால் இறைவனை சென்று அடைகிறது என கொண்டால் மூன்று சக்கரங்களும் சமமான வேகத்தில் சுழல வேண்டும். இதில் ஏதேனும் ஒரு சக்கரம் மட்டும்ச் சுழன்றால் போதும் என ஒதுக்கிவிட முடியாது அல்லவா? அதுபோல முக்குணங்களையும் ஒன்றாக்க முயலுங்கள் சரிவிகித இணைவே உங்களை ஒளி பொருந்திய நிலைக்கு இட்டுச்செல்லும்.

கீழ்கண்ட படத்தை பாருங்கள் இவ்வளவு நேரம் நான் கூறியதை எளிமை படுத்தும் வரைபடம் இது. கோணத்தின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மை அதிகரிக்க கோணம் தன் நிலையை இழக்கும். இதுவே மூன்று கோணமும் சமமாகி கோணத்தின் மையத்தில் குணம் குவிக்கப்பட்டால் தெளிவு பிறக்கும். தெய்வீகம் ஒளிரும்.

இறைவன் பிரபஞ்சத்தில் முழுமையான நிர்குணமாகவும், அதே சமயம் குணமாக மாற்றமடைந்து வடிவமான திரிகுணத்தில் அமர்ந்ததை திருமூலர் தன் மந்திரத்தில் விளக்குகிறார். 

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே
                                                    - 1713

இவ்வாறு திரிகுணமாய் இருப்பதை எவ்வாறு ஒன்றிணைந்து இறைநிலை அடைவது என்பதையும் மற்றொரு திருமந்திரத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
                                                                                     - 2406

திரிகுணத்தை பேச்சால் விளக்குவதைவிட நாம் உணர்ந்து வாழ்க்கை நிலையில் புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும். திரிகுணம் கடந்து நிர்குண நிலையை உணர இறையருளை வேண்டுவோம்.


- திரிகுண ரஹஸ்யம் முற்றியது 3/3 -