தாய் மரம் பற்றிய விபரம் அளித்ததும் பல்வேறு ஊர்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் உற்சாகமாக மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு நன்றி. மேலும் உங்களில் பலருக்கு தாய் மரம் ஒருவித ஊக்கத்தை அளித்திருக்கும் என எண்ணுகிறேன்.
நான் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறேன். நான் எப்படி தாய் மரம் பயன்படுத்த முடியும் என பலர் கேட்டிருக்கிறார்கள். மனம் இருந்தால் மார்கம் உண்டு என்பது பொதுமொழி அல்லவா..!
போன்சாய் என்ற தாவர முறையை கேள்விப்பட்டிருப்பீர்கள். தாய்மரங்களை அது போன்றும் வைக்கலாம். முழுமையாக போன்சாய் முறையை பின்பற்றுவது அனைவருக்கும் சாத்தியம் அல்ல.
ஆனாலும் அடிப்படையாக மரங்களை தொட்டியில் வைத்து சில அடி தூரம் வளர்ந்ததும் அதன் கிளைகளை கத்தரித்து குட்டை செடியாக பயன்படுத்தலாம்.
தாய் மரங்கள் எந்த அளவில் இருந்தாலும் அதனால் ஏற்படும் பலன்கள் ஒன்றுதான். உங்களின் விட்டின் உள்ளறையில் மற்றும் பால்கனி போன்ற இடங்களில் இது போன்று வைப்பதன் மூலம் உங்கள் வசிக்கும் சூழலை சக்தியூட்டலாம்.
திருமண விழா, பிறந்த நாள் விழாவிற்கு உங்களின் பரிசாக நண்பர்களுக்கு அழகிய வேலைப்பாடு கொண்ட சட்டியில் மரக்கன்றை வழங்கலாம். யாரோ ஒருவர் செய்த பரிசுக்களை கடையில் வாங்கி
கடமையே என பரிசளிப்பதை விட இப்பரிசு உணர்வு பூர்வமாக உங்களின் நண்பர்களை நெகிழச் செய்யும்.
விரைவில் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பாக தாய் மரம் சார்ந்த நந்தவனம் அமைக்கப்பட உள்ளது.
கோவையை மாதிரி நகரமாக கொண்டு தாய்மர திட்டத்தை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இதன் திட்ட அமைப்பு விரைவில் வெளியிடுகிறோம். இது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்களுடன் இணைந்து கை கோர்ப்பீர்கள் என எண்ணுகிறேன். அனைவரும் இணைத்து அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..!
மரங்கள் நம் மனங்களை இணைக்கட்டும் மனங்கள் மகத்தான செயல்களை புரியட்டும்..!
---------------------------------------------------
தாய் மரம் பற்றிய தகவல் அனைவருக்கும் சென்று அடைய தாய் மரம் தொடரை மின்நூலாக கொடுத்திருக்கிறோம். இப்புத்தகத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்துகொள்ளுங்கள். இப்புத்தகத்தை மின்னஞ்சலிலோ அல்லது அச்சிட்டோ அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.
தாய்மரம் - மின்நூல்
3 கருத்துக்கள்:
நிச்சயம் இந்த முயற்சிக்கு என் ஆதரவு உண்டு. நான் முதலில் இதை செயல்படுத்திவிட்டு பின்னர் வருகிறேன்.
உணர்வு பூர்வமாக உங்களின் நண்பர்களை நெகிழச் செய்யும்.//
செயல்படுத்த ஆவலாக இருக்கிறோம்.
தாவரங்கள் தயாராக இருந்தால் , சொல்லுங்கள் .
அதை எங்கு எப்போது பெறலாம் என்பதை தெரிவியுங்கள் .
இயன்றதை செய்வோம் !!!
Post a Comment