Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, March 3, 2011

தாய் மரம் - விதையின் வளர்ச்சி...! - பகுதி 3

தாய் மரம் என்பதன் அடிப்படையில் மரங்களின் பிரிவுகளை அட்டவணையாக தருகிறேன் என்றதும் பலரிடம் இருந்து வந்த மடல்களும், பாராட்டுக்களும் மகிழ்ச்சியை அளித்தது. இதோ விருட்ச சாஸ்திரத்தின் அடிப்படையில் மரங்களின் பகுப்பை உங்களுக்கு அளிக்கிறேன்.

உங்களின் வசிப்பிடம் அல்லது தொழில் இடங்களில் மேற்கண்ட மர வகைகளை இட வசதிக்கு ஏற்ப நடவு செய்யலாம். நம் பிறந்த நாள் அல்லது திருமண நாட்களுக்கு பிறருக்கு பரிசாக வழங்கலாம். இதன் மூலம் வாங்குபவர்களுக்கு நன்மையாகவும், கொடுக்கும் உங்களுக்கு புண்ணியமாகவும் இருக்கும்.


நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருந்தால் அனுமதி பெற்று மாணவர்களுக்கு மரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மேற்கண்ட மரங்களை நட ஏற்பாடு செய்யலாம். அரசு பள்ளிகளில் தற்சமயம் பசுமை படை என்ற பிரிவு சாரணர் இயக்கம் போல அமைந்திருக்கிறது. அப்படையை பயன்படுத்தினால் உங்களில் பகுதி பசுமையாகும். சிறப்பாக செயல்பட்டு மரம் நட்டு வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுக்களையும், மதிப்பெண்னும் வழங்கி ஊக்குவிக்கலாம்.


மரம் நடுவதற்கு ஏதேனும் அடிப்படை வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டுமா?


ஆம்.


தாய் மரங்கள் தன்னை தானே ஆதரித்துக் கொள்ளும் வலிமை வாய்ந்தது. ஒரு முறை நீங்கள் நடவு செய்தால் அம்மரம் வளர்ந்து தன்னை தானே விதைகளாக்கி பல்கி பெருகிவிடும். அதனால் முதன் முறை நாம் மரம் நடும் பொழுது அக்கறையுடனும் நற்சிந்தனையுடனும் நட வேண்டும் என்பது முக்கியம்.


மரம் நடுவதற்கு சில முக்கிய அடிப்படை விஷயங்கள்

  • மரம் நடும் குழி குறைந்த பட்சம் இரண்டடி ஆழம் ஒன்றரை அடி அகலம் இருத்தல் அவசியம்.
  • பொடியாக்கிய சாண வரட்டி, காய்ந்த இலை சருகுகள் எறித்த சாம்பல் கலவை ஆகியவற்றை குழியில் இட்டு அதன் பிறகு மரக்கன்றை நட வேண்டும். தேவைப்பட்டால் மண் புழு உரம் அல்லது மக்கிய குப்பைகளை மரக்கன்று நட்ட இடத்தில் சேர்க்கலாம்.
  • மரக்கன்றின் அடிப்பகுதியில் தேங்காய் நார் கொண்டு சுற்றி மூடி நீர் ஊற்றுவதன் மூலம் அதிக நீர் சத்து கொண்ட சூழலை உருவாக்கி மரகன்று காய்ந்து போகாமல் காக்கலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட மரக்கன்று நடுவதாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து அடி அதிகபட்சம் 30 அடி தொலைவு இருத்தல் அவசியம்.
  • கட்டிட சுவர் அல்லது மதில் சுவர்களுக்கு அருகே நடவு செய்யாமல் குறைந்த பட்சம் 5 அடி தொலைவில் நடவு செய்தல் நலம்.

அவ்வளவு தான்…. இனி நீங்கள் புறப்படலாம்


பசுமை புரட்சி உங்களின் கைகளால் துவங்கட்டும்.


இத்தொடரை படிப்பவர்கள் மேற்கண்ட அட்டவணையில் ஒரு தன்மையிலாவது மரக்கன்று நடுவேன் என உறுதிமொழி எடுத்து மறுமொழியிட்டால் மகிழ்வேன். அதை கடைபிடித்து புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பினால் உங்களின் வாழ்க்கையில் ம(ர)றக்க முடியாத பரிசு ஒன்றை தருவேன்…!


(விதை முளைக்கும்)

13 கருத்துக்கள்:

திவாண்ணா said...

என்ன ரொம்ப சிம்பிளா முடிச்சுட்டீங்க? இன்னும் 108 மரங்கள் பட்டியல் வேற பாக்கி!தேர்ந்தெடுத்து மரங்கள் நட்டு 5 கிமீ தூரத்துக்கு சுற்றுச்சூழல் பேணலாம் ன்னு சொன்னீங்களே? இன்னும் கொஞ்சம் தெளிவாக்க வேண்டுகிறேன்.

Sanjai said...

நல்ல யோசனை ,
மரங்கள் வளரட்டும்,
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திவா,

முதலில் கூறை ஏறி கோழியை பிடிப்போம். பிறகு வைகுண்டத்திற்கு முயற்சிப்போம்.

குறைந்த பட்சம் பஞ்ச பூத மரங்கள் ஐந்த முறை பயிர் செய்தவர்களுக்கே 108 பட்டியல் தரலாம் என நினைக்கிறேன். இல்லை என்றால் பட்டியல்கள் கைகளில் வைத்துக்கொண்டும் எனக்கும் விஷயம் தெரியும் என மார்தட்டுவதை தவிர வேறு என்ன பயன் இருக்க போகிறது.???

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய்,

வருகைக்கு நன்றி

கல்வெட்டு said...

அன்புள்ள ஓம்கார்,
மாடுகட்ட மரம் வளர்க்கிறோமோ அல்லது கோவில்கட்ட மரம் வள‌ர்க்கிறோமோ அல்லது சாமியார் மரம் வளர்க்கிறாரா அல்லது விஞ்ஞானி மரம் வளர்க்கிறாரா என்றெல்லாம் பாரமாலும்... மரம் குறித்து நீங்கள் சொல்லும் சாஸ்திர சம்பிரதாய நம்பிக்கைகளுக்குள் போகாமலும்...

காங்க்ரீட் குப்பையாகி, நிலத்தடிக்கு நீர் செல்லும் பாதையை நகரெமெங்கும் தாராலும் காங்க்ரீட்டாலும் மூடிவிட்ட இந்த சபிக்கப்பட்ட சமூகத்திற்கு நீங்கள் முன்னெடுக்கும் இந்தப்பணிக்கு ....

மரம் வளர்ப்பது என்பது, காய்ந்து கருவாடாகிக் கிடக்கும் நமது ஊர்களுக்குத் தேவை என்ற்‌ ஒற்றை நோக்கத்துடன் உங்களுக்கு எனது ஆதரவை கன்னாபின்னாவென்று வழங்குகிறேன்...

சாமியார் என்பவர்கள் மனிதனுக்கு கடவுளைக் காட்ட வேண்டியது இல்லை. நல்லவற்றை உருவாக்குபவனாக , இயற்கையைக் காப்பவனாக , தவறுகளை அழிப்பவனாக ஒவ்வொரு மனிதனையுமே கடவுளாக ஆக்க வேண்டும். அது தான் இந்த சபிக்கப்பட்ட சமுதாயத்திற்குத் தேவை.

அந்த வகையில் மரம் குறித்த உங்கள் பணிகளுக்காக பிடியுங்கள் இந்த பூங்கொத்தை.

.

நீச்சல்காரன் said...

எல்லாம் செய்யதும் ஆடுகள் வந்து மேய்ந்துவிடுவதால் சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன அதற்கும் சேர்த்து வேலி அமைக்க வேண்டும்.
நல்ல முயற்சி வாழ்த்துகள்

Umashankar (உமாசங்கர்) said...

When ever and everwhere possible to my limit. I shall put full effort to plant this atleast one tree Swami Ji.

Umashankar.A

rajesh said...

நான் தங்களின் பதிப்புகளை படித்துள்ளேன், எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ஒரு மனிதன் பிறக்கும்போது நட்சத்திரம் கணக்கு வைத்து அவனது வாழ்க்கை கணக்கிட படுகிறது. ஆனால் மனிதன் இறக்கும்போது அவன் இறந்த நாளைய திதி கண்க்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏன் இந்த வேற்றுமை

yrskbalu said...

may we get water forthese in future?


lot of figting going on for drinking water in streets.

we divided by water already started.

if you not beleive it - come salem.
i will show you.

தனி காட்டு ராஜா said...

//இத்தொடரை படிப்பவர்கள் மேற்கண்ட அட்டவணையில் ஒரு தன்மையிலாவது மரக்கன்று நடுவேன் என உறுதிமொழி எடுத்து மறுமொழியிட்டால் மகிழ்வேன்//

எங்கள் தோட்டத்தில் இது போன்ற மரங்கள் வளர்க்க திட்ட மிட்டு உள்ளேன் .நெல்லி ,வேம்பு ,வில்வம் ஏற்கனவே வளர்ந்து உள்ளது .
அடுத்து ஆலம்,நாவல் ,மா,பலா மரங்கள் வளர்க்கலாம் என்று உள்ளேன் .
உங்கள் மரம் குறித்த தகவல் மிகவும் பயன் உள்ளவையாய் உள்ளன.

மதி said...

நடுவேன்....

முடிந்தால் எல்லா மரங்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் தரவும் (scitific name).

பகிர்வுக்கு நன்றி.

Irai Kaathalan said...

தாய் மரம் - விதையை பெற்று அதை வளர்க்கும் பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது . நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் .

Irai Kaathalan said...

முதலில் ,உங்களிடம் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள் . அருகில் இருப்பதன் அருமை தெரியாது என்ற முன்னோர்கள் வாக்கு சரி என்பதை மீண்டும் உணர்த்தியது இயற்கை .

தாய் மரம் பற்றிய விளக்கம் பெற தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ( கடந்த வாரம் ) வெளியூரில் இருபதாக பதில் கிடைத்தது (தாயாரிடம் என நினைக்கிறன் ).

தாய் மரம் : இந்த (எனது) கரங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கும் .