தாவர வகைகள் மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமாக இருக்கிறது. உணவு மற்றும் ப்ராண வாயு என்ற நிலையில் மட்டும் தாவரங்கள் நமக்கு பயன்படுவதில்லை. நம் வாழும் சூழலையும், இயற்கையின் சமநிலையையும் தாவரங்கள் கட்டுக்கோப்பாக வைக்கிறது. நகரமயமாக்கலில் முதலில் நாம் இழப்பது தாவரங்களை தான்.
இயற்கை சூழலில் இருந்து நாம் பன்மடங்கு வெளியே வந்து விட்டோம். பலர் இக்கருத்தை உணர்வதே இல்லை. சற்று சிந்தித்து பாருங்கள். முன்பு பாத்திரம் கழுவ என்ன பயன்படுத்தினோம்? உமி என்ற இயற்கை பொருளை வைத்து தேங்காய் நார் என்ற இயற்கை பொருளை கொண்டு பாத்திரம் கழுவினோம். தற்சமயம் ரசாயனத்தால் உருவாக்கிய பாத்திரம் கழுவும் கட்டியை கொண்டு பிளாஸ்டிக் நார்களால் கழுவுகிறோம். முன்பு இயற்கை வழியில் பயணிக்கும் பொழுது தேங்காய் நாரோ, உமியோ சரியாக கழுவாத நிலையில் கூட நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. தற்சமயம் செய்யும் செயற்கை முறை பயன்பாடு பல்வேறு வகையான உடல் நோய்களுக்கு காரணமாகிறது.
பாத்திரம் கழுவவதிலேயே இப்படி இயற்கை தன்மை இழந்த நாம் வேறு விஷயங்களில் எப்படி எல்லாம் நம் வாழ்க்கையை மாற்றி செயற்கையாக இருக்கிறோம் என பட்டியலிட்டால் மன உளைச்சல் தான் மிஞ்சும்.
இந்த நிலை ஏற்பட காரணம் என்ன? இதற்கு நீங்கள் காரணம் இல்லை. அப்பாடா என பெருமூச்சு விடுட்டு சந்தோஷம் அடையாதீர்கள். தாவரங்களுடன் நீங்கள் உறவு ஏற்படுத்தாமல் விலகி இருப்பதே இதற்கு காரணம். இயற்கையின் அங்கமான தாவரங்களை நீங்கள் உறவாக உணர்ந்தால் உங்களின் உள்ளேயும் இயற்கையான செயல்கள் சுரக்கும். இல்லையென்றால் விரைவில் நாமும் ப்ளாஸ்டிக் ஆவோம்..!
தாவர உறவை எப்படி ஏற்படுத்துவது?
நம் வாழ்விடங்களில் குறைந்த பட்சம் 3 மரங்களையும், ஐவகை தாவரங்களையும் வைத்துக்கொண்டால் முழுமையான வாழ்க்கையை வாழலாம். தாவரங்களை வைக்க அப்படி என்ன எண்ணிக்கை தேவைப்படுகிறது?
ஒரு வேடிக்கை துணுக்கு சொல்லுவார்கள். ஒரு மாணவன் தேர்வுக்கு செல்லும் பொழுது “மாடு தன் வரலாறு கூறுதல்” கட்டுரையை மனப்பாடம் செய்துவிட்டு போனான். ஆனால் அங்கே கேட்கபட்டதோ “ஆசிரியர் தன்வரலாறு கூறுதல்”. இவன் புத்திசாலித்தனமாக மாடு என்ற இடத்தில் எல்லாம் ஆசிரியர் என போட்டு கட்டுரை எழுதிவிட்டான்.
நானும் அந்த புத்திசாலி மாணவன் போலத்தான். இறைவன் என்ற கட்டுரை மனப்பாடம் செய்துவிட்டு அதற்கு பதில் தாவரம் என கட்டுரை கேட்கப்பட்டால் கீழே உள்ளவாறு தானே நான் எழுதுவேன்..?
உண்மையில் தாவரங்கள் என்பது ஒன்று தான். அதுவே பல்வேறு ரூபமாக தெரிகிறது. நீங்கள் உணராவிட்டாலும் தாவரங்கள் உங்களை காக்கிறது. தாவரம் என்பதே இல்லை என நீங்கள் சொன்னாலும் தாவரங்கள் அக்கருத்தை மறுத்து பேசுவதில்லை.
தாவரம் அடிப்படையில் ஒரே தன்மை வாய்ந்தது. அவை முதலில் மூன்று முக்கிய பிரிவாக பிரிகிறது. அவை மரம், செடி மற்றும் கொடி. இவகைகளின் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக உட்பிரிவாக பிரிந்தவண்ணம் சென்று பல்லாயிரக்கணக்கான வகையாக உருமாற்றம் அடைகிறது.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் தாவரங்களை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.
- ஏக விருட்சம் - ஒத்த தன்மை கொண்ட மரம்
- திருமூர்த்தி வகை மரம் - 3 எண்ணிக்கை கொண்டது
- பஞ்ச பூதம் மரம்- 5 எண்ணிக்கை கொண்டது
- நவக்கிரக மரம் - மேற்கண்ட அனைத்தும் இணைந்தது (5+3+1=9)
- ராசி மரம் - நவக்கிரகம் + திருமூர்த்தி நிலை (9+3=12)
- நட்சத்திர மரம் - நவக்கிரகம் X திருமூர்த்தி (9X3=27)
- அஷ்டோத்திரி மரம் - நவக்கிரகம் X ராசி (12X9=108)
நம் வாழ்விடம் சூழலை பொருத்து மேற்கண்ட எண்ணிக்கையில் வரும் மரங்களை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வகையின் அடிப்படையில் மரங்களின் அட்டவணையினை உங்களுக்கு அளிக்கிறேன். குறித்துக்கொள்ளுங்கள்...
(விதை முளைக்கும்)
5 கருத்துக்கள்:
அருமை :)
பட்டியலுக்காக காத்திருக்கிறேன் !!
uLLEN aiyaa!
thankyou
//இயற்கையின் அங்கமான தாவரங்களை நீங்கள் உறவாக உணர்ந்தால் உங்களின் உள்ளேயும் இயற்கையான செயல்கள் சுரக்கும். இல்லையென்றால் விரைவில் நாமும் ப்ளாஸ்டிக் ஆவோம்..!//
உண்மைதான்.
தாய் மரம் குறித்து மேற்கொண்டு தெரிந்து கொள்ள மற்றும் எங்கள் இல்லத்தின் சிறிய இடத்தில அதற்கு இடம் ஒதுக்க முடிவு செய்து உங்களை மின்னஞ்சலில் முன்பு தொடர்பு கொண்டோம். தொ.பேசியிலும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.
உங்கள் பதிவு அதற்கு விளக்கம் அளித்து விட்டது.
உங்கள் முயற்சி பெருமளவில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அட்டவணைக்கு காத்திருந்தா மரத்தில் இருந்து மனத்துக்கு தாவிட்டீங்க!!!
Post a Comment