Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, May 8, 2010

தாய் மரம் - பூமியை பசுமையாக்க உதவுங்கள்

நண்பர்களே நம் கண் முன்னே புல்லினங்கள் அழிக்கப்படுவதை கண்டு உணர்வற்று வாழ்கிறோம். சில நிமிடங்கள் அதற்காக வருந்தினாலும் நம் வாழ்க்கையில் தாவரங்களுக்கு என்ன செய்தோம் என்ற கேள்விக்கு விடை கூற முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.

நமக்காக தன்னையே அர்ப்பணிக்கும் தாவர இனத்திற்கு நாம் செய்யும் தீங்குகள் பல வழிகளில் நடந்து வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் முயற்சியை காட்டிலும் அழிவுக்கு செய்யப்படும் காரியங்கள் பன்மடங்காக இருக்கிறது.

நவீன அறிவியல், ரசாயன கழிவுகள், நவீன மயமாக்கல் மற்றும் வன அழிப்பு ஆகியவை சுற்றுச்சூழல் மாசு மட்டுமல்லாமல் பல தாவர இனங்களை அழித்திருக்கிறது. நம் எதிர்கால சந்ததியினருக்கு எஞ்சி இருக்குமா என கேட்கும் அளவுக்கு எத்தனையோ நாச காரியங்கள் நடக்கின்றன.

பல்வேறு நாடுகள் இதை பற்றி உணர்ந்து அதிகப்படியாக நிதி ஒதுக்கி மரங்களை நடுகிறார்கள். இது உலக அளவில் ஏற்படும் பிரச்சனை என உணர்ந்து பல நாடுகள் எல்லைகளை கடந்து பிற நாடுகளிலும் மரங்கள் நடுகிறார்கள்.

பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் முன்னெற்றம் என்பது மிக குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. சென்ற மூன்று வருடங்களில் கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல அமைப்புகள் இணைந்து வைக்கப்பட்ட மரக்கன்றுகள் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டும்.

இன்னும் லட்சக்கணக்கான மரங்கள் நடுவதற்கு பலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் முன்பு நட்ட மரங்கள் வளர்ந்திருக்குமானால் இன்று கோவை பசுமைக் காடாக மாறி இருக்கும்.
மரங்களை கொண்டு எத்தனை லட்சங்கள் நட்டோம் என எண்ணிக்கை காட்டுவதை விட உலகுக்கு எத்தனை மரங்கள் உயிருடன் இருந்து பயன் கொடுத்தது என்பது கூறுவது முக்கியம்.

அப்படியானால் நம் பூமியை பசுமை பூமியாக்க என்ன தீர்வு?

ப்ரணவ பீடம் என்ற ஆன்மீக அறக்கட்டளை இதற்கான தீர்வை கூறுகிறது. சமுதாய மாற்றம் என்பது ஓவ்வொரு தனிமனிதனில் இருந்தும் ஏற்பட வேண்டும். இந்த கருத்தை மையமாக கொண்டு “தாய் மரம்” என்ற திட்டத்தை முன்மொழிகிறது.

மரங்கள் செழித்து வளர மரங்களுக்கு தாயாக இருந்து வளர்ச்சியூட்ட சில மரங்கள் தேவைப்படுகிறது. அத்தகைய மரங்களே தாய் மரம்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளையும் அதனை சார்ந்தவர்களும் பல வருடங்களாக செய்த தாவரவியல் ஆராய்ச்சியின் விளைவாக உருவான திட்டம் இது.

எளிமையாக கூறுவது என்றால் பல லட்சம் மரம் கொடுக்கும் பலனை சில நூறு மரங்களில் சாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

பாரத பாரம்பரியத்தில் விருக்‌ஷ சாஸ்திரம் என்ற நூல் பின்வரும் கருத்தை கூறுகிறது. நம் சூரிய மண்டலமும் அதனை சார்ந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் தாவரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் அனைத்து கிரகம் அல்லது நட்சத்திரங்களுக்கு உண்டான தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அந்த பகுதியை இயற்கை மிகுந்த சூழலாக ஆக்க முடியும். இந்த மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இயற்கை மாசு ஏற்படாது.
தற்சமயம் மிகுந்த வரும் வெப்பமடைதல் என்ற விளைவைக் குறைக்கும், மழை பெய்யும் சூழலையும் அதிகரிக்கச் செய்யும்.

இதன் செயல் வடிவம் என்ன?

உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்.

மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும்.

சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 சென்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் நலம்.

இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இப்பணியை இலவசமாக செய்ய காத்திருக்கிறோம்.

தாய் மரம் செயல்படுத்துவதால் பயன் என்ன?
  • சமூக ரீதியாக நல்ல மாற்றத்தை உண்டு செய்யும்.
  • சுற்றுச்சூழலில் மாற்றம் உருவாகும்
  • நோய்கள் மற்றும் நோய் பரவலை குறைக்கும்.
  • தனிமனித குணத்தில் நன்மையை ஏற்படுத்தும்.

தாய் மரத்திட்டத்தில் முக்கிய விதிகள் உண்டா?

ஆம்.
மனரீதியாக சில புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் வழங்கும் தாய்மரம் வளரக்கூடிய பூமியை குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு விற்பதற்கோ அல்லது மரங்களை எடுப்பதற்கோ அனுமதிக்க கூடாது.

மரங்களை உங்கள் சொந்த உபயோகத்திற்கு தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வெட்டுவதோ வேருடன் அகற்றுவதோ கூடாது.

தாய் மரம் உருவாக்கப்பட்ட பிறகு பத்து வருடங்கள் கழித்து உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் பூமியையும் தாவரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சொந்த இடம், பள்ளிகள், நிறுவனங்கள், ஆன்மீக ஸ்தலங்கள், ஆசிரமங்கள், பஞ்சாயத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என எதுவாக இருந்தாலும் உங்களின் ஆளுமையில் பெற்றுக் கொடுங்கள். சிரம் பணிந்து பணி செய்ய காத்திருக்கிறோம்

நம்மை எப்பொழுதும் தாங்கி நிற்கும் பூமிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்?
தாயாக தாங்கும் பூமிக்கு தாய் மரத்தால் நன்மை செய்வோம்.

தாய் மரம் உருவாக்க இணைந்து பணியாற்ற விரும்பினாலும் இத்திட்டத்தை பற்றிய மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும் மின்னஞ்சல் செய்யுங்கள்
thaimaram@gmail.com
தொலைபேசி : +91 9944 1 333 55
வாருங்கள் அனைவரும் இணைந்து தாய் மரம் உருவாக்குவோம்.

தாவரத்திற்காக
உங்கள் தாழ் பணியும்
ஸ்வாமி ஓம்கார்
--------------------------------------------
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள். உங்களின் உதவிக்கு எங்கள் நன்றிகள்.

18 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

திரு.ஓம்கார்.,

விதைகளாக தருவீர்களா.. இது சிறந்தது என சாதித்தவர்கள் கருத்தாக கேட்டிருக்கிறேன்..

செடியாக கொடுத்தால் வேலி இட வேண்டி வருமா.

செலவு செய்ய இயாலாதவர்களும் இடத்தை மட்டும் கொடுத்தால் நீங்கள் எப்படி திட்டமிட்டு செயல்படுவீர்கள்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

அனைத்து மரங்களும் விதைகளாக தர இயலாது. சில மரங்கள் அவ்வாறு கொடுக்கலாம்.

மேலும் திறந்த வெளி எனில் குறிப்பிட்ட உயரம் வரும் வரை பாதுகாப்பு அவசியம். அவற்றை நாங்களே செய்து தருகிறோம்.

இடம் மட்டும்தான் கேட்கிறோம். யாரும் செலவு செய்ய தேவையில்லை.

எங்கள் சேவைக்காக உதவும் உள்ளங்கள் இருக்கிறார்கள் அவர்கள் மூலம் எங்கள் பணிக்கான செலவை சமாளிக்கலாம்.

மேலும் எங்கள் செயல்பாடுகள் அதிக பணம் செலவு செய்யும் முறையில் இருக்காது.

மரம் வைக்க மனது இருக்கு... மரம் வைக்க மண் வேண்டும்.

மண் தாருங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.

Unknown said...

சுவாமிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். காலையில் இதனை படித்தவுடன் போன் செய்து விசாரித்தேன். நான் கண்டிப்பாக இடம் தருகிறேன். என் நண்பர்களிடமும் பேசி இடம் வாங்கி தருகிறேன். மிகுந்த மகிழ்ச்சியுடன்
ராஜேஷ்

yrskbalu said...

if small space only available means ?

எறும்பு said...

My best wishes..

virutcham said...

மரம் வெட்டி தமிழ் வளர்க்கும் விந்தை வேதனை.
எதெல்லாம் தாய் மரம்னு கொஞ்சம் சொன்னால் எங்க வீட்டில் இருக்கும் சின்ன இடத்தில் ஓரிரு மரங்களையாவது வளர்க்க முயற்சி செய்கிறேன்.


http://www.virutcham.com

Unknown said...

மிகவும் அருமையான திட்டம். இது மென்மேலும் வளர இயற்கை அன்னையை வணங்குவோம்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்

எம்.எம்.அப்துல்லா said...

உங்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய வந்தனங்களும்,வாழ்த்துகளும்.

Mahesh said...

_/\_ உங்கள் முயற்சியினால் பல்லாயிரம் மரங்கள் வளர இயற்கையை வேண்டுகிறேன் !!!

G.MUNUSWAMY said...

Swamiji,
I don't have 5 cent land in Chennai where I am living. But I have a dream to grow the trees in our Metropoliton city. I want to know how to join with you to grow more trees in Chennai. Pl. help me in this regard.
Thanking you,
G.Munuswamy,
Chennai Thuraimugam.

Senthil said...

வரவேற்கதக்க இந்த திட்டத்திற்கு என் வாழ்த்துக்கள் ஸ்வாமி! புதிதாய் உருவாகும் நகர்களும், டவுன்ஷிப்புகளும் கண்ண்டைப்பாய் இதை பின்பற்றலாம். இந்த "தாய் மரம்" கருத்தை பிரகடனப்படுத்தும் வகையில் ஏதானும் கோப்புகள் உண்டா ஸ்வாமி! சென்னையில் புதிதாய் உருவாக உள்ள டவுன்ஷிப்பில் உள்ளவன் நான், அங்குள்ள பூங்காவில் இந்த திட்டத்தை செயல்படுத்த விழைகிறேன்.

vijay.s said...

Swami Omkar avargalaku,

ungalin pathivai apdiye thirudi(copy seithu) veru oru pathivil pottu irukindranar...
pls see the link below...
for courtesy, they didnt say whether its from mail or from another blog...

http://tamilallinfo.blogspot.com/2009/09/blog-post.html

கிரி said...

சுவாமி எங்கள் இடத்தில் நான் செடி நட்டு பராமரித்து வருகிறேன். மேலும் இடம் இருந்தால் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். அனைவரையும் போல நீங்களும் ஆகி விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

virutcham said...

இந்த பதிவின் பாதிப்பில் நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.
http://www.virutcham.com/?p=1889

virutcham said...

என் நண்பே ஒருவர் திரிசூலம் மலைக்கு அடிக்கடி குடும்பத்தோடு செல்வார். அப்படி போகும் போது நிறைய விதிகளை எடுத்துச் சென்று மலை ஏறும் போது தூவிச் செல்வதை ஒரு வழக்கமாக கொண்டிருப்பதாக சொல்லுவார்.
இந்த முறை கூட பலன் தரும் இல்லையா?


http://www.virutcham.com

குசும்பன் said...

அருமையான விசயம், வாழ்த்துக்கள்!

Unknown said...

மிகவும் அருமையான திட்டம். இது மென்மேலும் வளர இயற்கை அன்னையை வணங்குவோம்.

Now I am planting more trees & maintain its
I am interested to do this project in our place
This Number is switched off Can You Give Any Other Number

இராஜராஜேஸ்வரி said...

சுவாமிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன்.

எங்ளிடம் 3 ஏக்கர் நிலம் இருக்கிறதுங்கள்.

பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி.