Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, January 10, 2010

அஷ்டமா சித்தியில் ஒரு சித்து வேண்டுமா?

தமிழ் நாட்டில் சித்தர்கள் வழி ஆன்மீக பாதை மிகவும் பிரபலமானது. அதிலும் பதினெட்டு சித்தர்கள் மற்றும் அவர்களின் பாடல்கள் இவை பலருக்கு வழிகாட்டிகளாக உள்ளனர்.

சித்தர்கள் என்பவர்கள் சித்துக்களை கைவரப்பெற்றவர்கள் என பரவலாக கூறுகிறார்கள். அஷ்டமா சித்தி என்றால் எட்டுவகையான அற்புதங்கள் கைவரப்பெற்றவர்கள்.

ஒருவர் அஷ்டமா சித்தி பெற மிகவும் அதிகமான பயிற்சிகள் செய்தார். பலநாட்கள் முயன்று ஒன்றும் நடக்கவில்லை.மகனின் கஷ்டத்தை உணர்ந்த அவரின் தந்தை எட்டு பெண்களை மணந்தார். நம் நண்பருக்கு அஷ்டமா சித்தி கிடைத்தது. இது போல அஷ்டமா சித்தி பெற அனேக எளியவழிகள் உண்டு..!

அஷ்டமா சித்து என விளக்கியவைகளை மனிதன் விஞ்ஞான கருவிகளால் ஓரளவு நெருங்கிவிட்டான் என கூறலாம்.

நினைத்த நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லுவது ஒரு வகையான அஷ்டமா சித்து. அப்படி பட்ட அஷ்டமா சித்து உங்களுக்கு தரப்போகிறேன். ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் உள்ள சில இடங்களுக்கு மட்டும் சென்று பயிற்சி செய்யுங்கள்.


தமிழக சுற்றுலாத்துறையின் அற்புத வேலையில் அனைத்து தமிழக இடங்களும் மிக உன்னதமாக கணினி மயமாக்கபட்டுள்ளது. தமிழக கோவில்களை அற்புதமாக 360 டிகிரி பார்வையில் காணலாம். நாமே அங்கு நேரில் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்.

கோவில் மற்றும் இதர இடங்களுக்கு கணினிவழியே பயணப்படலாம். வானத்தில் மேகங்களும், நிலத்தில் மண் மற்றும் கற்களும் கண்ணால் காண்பது போல தெளிவாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.

காட்சியின் துல்லியம் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. பின்னனியில் சாக்ஸாபோன் இசை ஆஹா....

இந்த வலைதளத்தில் காட்டப்படும் அனைத்து இடமும் எனக்கு பிடித்தது என்றாலும், திருவண்ணாமலை, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை கோவில் ஆகியவை என் கணினியின் சுட்டியை கட்டிப்போட்டது.

நீங்களும் பார்த்துவிட்டு நீங்கள் பெற்ற சித்தின் அற்புதங்களை கூறுங்கள்.

4 கருத்துக்கள்:

Mahesh said...

"குருவே, சித்தி பெற என்ன செய்ய வேண்டும்?"

"உன் சித்தப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்"

திவாண்ணா said...

//அவரின் தந்தை எட்டு பெண்களை மணந்தார். நம் நண்பருக்கு அஷ்டமா சித்தி கிடைத்தது. //
அஷ்ட ma சித்தியா?
ஹிஹீஹீ
சுப்பாண்டி ரொம்பவே உங்க பதிவுகளை எடிட் பண்ணறாப்பல இருக்கு!

ரங்கன் said...

காஞ்சிக்குச் செல்ல நினைத்தேன் முடியவில்லை. அதற்கு பதில் மீனாக்ஷி & உண்ணாமலை இருவரையும் வீட்டிலிருந்தே தரிசனம் செய்தேன். நன்றி. அற்புதமான site/sight.

sarul said...

என்னோட மகனும் தனக்கு அஷ்டமா சித்திகள் வேண்டும் என்கிறான் ஹி ஹி